முக்கியச் செய்திகள்

Jason Sanjay : சபாஷ் சரியான தேர்வு ! ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தின் ஹீரோ இவர் தான்!

Published by
பால முருகன்

நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் தமிழ் சினிமாவில் ஒரு படத்தை இயக்குவதன் மூலம் இயக்குனராக அறிமுகமாகவுள்ளார். இயக்கம் மீதும் மிகவும் ஆர்வம் கொண்ட ஜேசன் சஞ்சய் பள்ளி படிப்பை முடித்துவிட்டு கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்காவில் திரைப்படம் உருவாக்கம் பற்றி படித்து வந்தார். பிறகு படித்து முடித்த கையேடு ஜேசன் சஞ்சய் “trigger” எனும் சிறிய குறும்படம் ஒன்றையும் இயக்கி இருந்தார்.

இந்த நிலையில், இதனை தொடர்ந்து லைக்கா நிறுவனம் தயாரிக்கும் ஒரு படத்தை இயக்குவதன் மூலம் இயக்குனராக அறிமுகமாகவுள்ளார். லைக்கா நிறுவனம் தயாரிப்பில் அவர் நடிக்கவுள்ள படத்திற்கான அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இருப்பினும் அந்த படத்தில் யார் ஹீரோவாக நடிக்கிறார் என்ற அறிவிப்பு எல்லாம் வெளியாகவில்லை.

எனவே, விஜய் மகன் இயக்கும் இந்த திரைப்படத்தில் யார் ஹீரோவாக நடிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு தகவல் பரவி வந்தது. அது என்னவென்றால், விஜய் மகன் இயக்கும் அந்த திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க பிரபல நடிகர்களான, கவின், ஹரிஸ் கல்யாண், அதர்வா ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் பரவியது.

இந்த நிலையில், அதனை தொடர்ந்து தற்போது ஜேசன் சஞ்சய் இயக்கும் இந்த திரைப்படத்தில் நடிகர் கவின் நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாக கூறப்படுகிறது. படத்தின் கதைக்கு கவின் சரியாக இருப்பதால் ஜேசன் சஞ்சய் அவரை தேர்வு செய்து உள்ளதாகவும் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே, டாடா எனும் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படத்தை கொடுத்த கவினுக்கு மார்க்கெட் நன்றாக இருக்கிறது. அதைப்போல இளைஞர்களுக்கு கவரும் வகையில் நல்ல காதல் படங்கள் அவருக்கு அமைந்தால் அதில் சரியாக நடித்து செட் ஆகிவிடுகிறார். எனவே,  ஜேசன் சஞ்சய் இயக்கும் இந்த படத்தில் கைவினைதேர்வு செய்தது நல்ல தேர்வு தான் என  ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

மேலும், ஜேசன் சஞ்சய் இயக்கும் இந்த திரைப்படம் கவின் நடிப்பது உறுதியானது என்றால்   அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கவின் தற்போது இயக்குனர் இளன் இயக்கத்தில் ஸ்டார் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

இந்தியாவின் 101வது ‘PSLV C-61’ ராக்கெட் தோல்வி அடைந்ததாக இஸ்ரோ அறிவிப்பு.!

ஆந்திரா : இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவும் நிலையில், எல்லைப் பகுதிகளை கண்காணிக்க உதவும் EOS-9 (RiSat-…

25 minutes ago

சாத்தான்குளம் கிணற்றுக்குள் மூழ்கிய வேன் மீட்பு – 5 பேர் பலி.! முதல்வர் நிவாரணம் அறிவிப்பு.!

தூத்துக்குடி: தஞ்சாவூரில் இருந்து திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக பயணித்து சாத்தான்குளம் வட்டம், மீரான்குளம் பகுதியில் சாலையோரமாக இருந்த 50 அடி…

11 hours ago

RCB vs KKR : ரசிகர்ளுக்கு ஷாக்!! மழையால் கைவிடப்பட்ட போட்டி.., வெளியேறியது நடப்பு சாம்பியன்.!

பெங்களூர் : இந்தியா, பாகிஸ்தான் தாக்குதலால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி…

12 hours ago

சென்னை சாலையில் திடீர் பள்ளம்.., உள்ளே சிக்கிய கார்.! மெட்ரோ நிர்வாகம் விளக்கம்!

சென்னை : திருவான்மியூர் - தரமணி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையின்…

14 hours ago

பாகிஸ்தானுக்கு உளவு வேலை பார்த்த ஹரியானா பெண் யூடியூபர் கைது.!

ஹரியானா : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியாவை உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு தகவல்களை வழங்கியதாகவும் கூறி, ஹரியானாவில் இதுவரை…

15 hours ago

RCB vs KKR: வெளுத்து வாங்கும் மழையால் டாஸ் போடுவதில் தாமதம்.!

பெங்களூர் : இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதட்டங்கள் காரணமாக 10 நாள் இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில்,…

16 hours ago