RCB vs KKR : ரசிகர்ளுக்கு ஷாக்!! மழையால் கைவிடப்பட்ட போட்டி.., வெளியேறியது நடப்பு சாம்பியன்.!

மழை காரணமாக பெங்களூரு - கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான போட்டி ரத்து செய்யப்பட்ட நிலையில், கொல்கத்தா அணி ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியது.

RCBvsKKR

பெங்களூர் : இந்தியா, பாகிஸ்தான் தாக்குதலால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) இடையேயான போட்டி மூலம் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் தொடங்கவிருந்தது.

ஆனால் 10 மணிக்கு மேலாகியும் மழை முழுவதும் விடாததால் போட்டி ரத்து செய்யப்பட்டது. பெங்களூருவில் தொடர்ந்து கனமழை பெய்து வந்ததால் டாஸ் போடுவதிலும், போட்டி தொடங்குவதிலும் முதலில் தாமதம் ஏற்பட்டது. பின்னர், போட்டி குறைந்தது 5 ஓவர்களாவது நடக்குமா? என்ற எதிர்பார்ப்புடன் காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் பகிர்ந்து அளிக்கப்பட்டது. இதன் மூலம் சென்னை ராஜஸ்தான் ஹைதராபாத்தைத் தொடர்ந்து கொல்கத்தா அணியும் அடுத்த சுற்றுக்கு செல்லாது. இப்பொது, பிளேஆஃப்களில் இருந்து வெளியேற்றப்பட்ட நான்காவது அணியாக கொல்கத்தா அணி மாறியுள்ளது.

கொல்கத்தாவுக்கு மேலும் ஒரு போட்டி மட்டுமே மீதமுள்ளது. இதனால், அவர்கள் அதிகபட்சமாக 14 புள்ளிகளை மட்டுமே எட்ட முடியும். தற்போதைய புள்ளிப்பட்டியலில் பஞ்சாப் கிங்ஸ் (15 புள்ளிகள்), மும்பை இந்தியன்ஸ் (14 புள்ளிகள்), மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் (13 புள்ளிகள்) ஆகியவை கேகேஆரை விட முன்னிலையில் உள்ளன. 14 புள்ளிகள் பிளேஆஃப் உறுதி செய்ய போதுமானதாக இல்லை, ஏனெனில் ஐந்து அணிகள் 18 அல்லது அதற்கு மேல் புள்ளிகளைப் பெற வாய்ப்புள்ளது.

பெங்களூரு அணி இந்தப் போட்டியை வென்றிருந்தால் முதல் அணியாக ப்ளே ஆப்ஸூக்கு சென்றிருக்கும். ஆனால், இந்தப் போட்டி ரத்தாகி ஒரு புள்ளி மட்டுமே கிடைத்ததால் பெங்களூரு அணி இன்னும் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. பெங்களூரு அணி இப்போது 12 போட்டிகளில் ஆடி 17 புள்ளிகளில் இருக்கிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்