பிளாப் பட இயக்குனருடன் இணையும் ஜெயம் ரவி! கம்பேக் கொடுக்க வேண்டிய நேரத்துல இப்படியா?

ஜெயம் ரவி : எதற்கும் துணிந்தவன் படம் சரியாக போகாத நிலையில், இயக்குனர் பாண்டிராஜுக்கு ஜெயம் ரவி அடுத்த படத்தினை இயக்கும் வாய்ப்பை கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் ஜெயம் ரவி தற்போது பழைய படி ஹிட் படங்களை கொடுத்து கம்பேக் கொடுக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறார் என்றே சொல்லலாம். ஏனென்றால், அவர் கடைசியாக ஹீரோவாக நடித்த படங்கள் எல்லாம் பெரிய அளவில் போகவில்லை. குறிப்பாக அகிலன், இறைவன், சைரன் உள்ளிட்ட படங்கள் எல்லாம் தொடர்ச்சியாக தோல்வியை தழுவியுள்ளது.
இந்த சூழலில் அவர் தோல்வி படத்தை கொடுத்த இயக்குனர் பாண்டிராஜ் உடன் தனது அடுத்த படத்தில் இணையவுள்ளதாக புதிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது. கடைசியாக இயக்குனர் பாண்டிராஜ் சூர்யாவை வைத்து எதற்கும் துணிந்தவன் படத்தை இயக்கி இருந்தார். இந்த திரைப்படம் 75 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. ஆனால், வசூல் ரீதியாக படம் 56 கோடி வரை வசூல் செய்த காரணத்தால் படம் தோல்வி அடைந்ததாக கூறப்படுகிறது.
இந்த படத்திற்கு பிறகு இயக்குனர் பாண்டிராஜ் எந்த படத்தையும் இயக்காமல் இருக்கிறார். இதனையடுத்து, சமீபத்தில் நடிகர் ஜெயம் ரவியை பாண்டிராஜ் சந்தித்து கிராமத்து கதையம்சம் கொண்ட ஒரு ரூலர் ஆன கதையை கூறினாராம். அந்த கதையும் ஜெயம்ரவிக்கு ரொம்பவே பிடித்து போக உடனடியாக பண்ணலாம் என்று ஜெயம் ரவி கூறிவிட்டாராம்.
தற்போது நடிகர் ஜெயம் ரவி ஜீனி, பிரதர் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். வரும் ஜூலை மாதத்திற்குள் இந்த படங்களில் நடித்து முடித்த பிறகு அடுத்ததாக பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் நடிப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜூன் முதல் வாரத்தில் வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பாண்டிராஜுடன் ஜெயம் ரவி இணையவுள்ளதாக வெளியான தகவலை பார்த்த நெட்டிசன்கள் கம்பேக் கொடுக்க வேண்டிய நேரத்துல இப்படியா? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025