Categories: சினிமா

5 நாளில் இத்தனை கோடியா! ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் வசூல் விவரம்…

Published by
கெளதம்

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, ராகவா லாரன்ஸ் ஆகியோர் நடிப்பில் வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று, இன்றுடன் 6வது நாளாக வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

குறிப்பாக, இந்த படத்தை பார்த்த தமிழ் திரைப்பட இயக்குனர்கள் பலர் பாராட்டுகளை குவித்தனர். அந்த வகையில், நடிகர்களில் தனுஷ் மற்றும் சிம்பு வாழ்த்து தெரிவித்த நிலையில், தனது தீவிர ரசிகரின் படத்தை கொண்டாடிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படக்குழுவை வர்ணித்து பாராட்டி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தற்பொழுது, இந்த படத்தின் 5 நாள் வசூல் நிலவரம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அந்த தகவலின்படி, இப்படம் ரூ.35 கோடியை தாண்டியிருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.

அதள பாதாளத்திற்கு சென்ற ‘ஜப்பான்’ திரைப்படம்! கவலைக்கிடமான வசூல் நிலவரம்?

பாக்ஸ் ஆபிஸ்

தமிழ்நாட்டில் மட்டும் ரூ.25.77 கோடி வசூல் செய்திருக்கலாம் எனவும், தெலுங்கில் ரூ.3.95 கோடி, கர்நாடகாவில் ரூ.1.65 கோடி, கேரளா ரூ.1.05 கோடி மற்றும் வெளிநாடு ரூ.4.35 கோடி (₹.524K) என 5 நாட்களில் உலகம் முழுவதும் மொத்தம் ரூ.35 கோடியை வசூலித்திருக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளது.

சந்தோஷத்தின் உச்சியில் சாக்ஷி அகர்வால்? எல்லாத்துக்கும் காரணம் கவர்ச்சி போட்டோ தான்…

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்

நடிகர்கள் ராகவா லாரன்ஸ் மற்றும்  எஸ்.ஜே.சூர்யா தவிர, இந்த திரைப்படத்தில் ஷீன் டாம் சாக்கோ, நிமிஷா சஜ்ரியன், விது உள்ளிட்ட பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

Published by
கெளதம்

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

15 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

17 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

17 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

18 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

20 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

21 hours ago