வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

முப்படை வீரர்களுக்கு எனது மனமார்ந்தப் பாராட்டுகள் என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

modi and rajinikanth

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை தொடர்ந்து, பாகிஸ்தானின் ஆதரவுடன் இயங்கும் லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான ‘தி ரெசிஸ்டன்ட் ப்ரண்ட்’ என்ற தீவிரவாத அமைப்பு தான் இந்த தாக்குதலை நடத்தியாக குற்றம்சாட்டி இந்தியா பதிலடி கொடுக்கும் வகையில் போரை தொடங்கியது.

இந்தியா பாகிஸ்தான் போர் வெடித்த காரணத்தால் உலக அளவில் பரபரப்பு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து நேற்று போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அறிவிக்கப்பட்டது. பாகிஸ்தானின் கோரிக்கையை ஏற்று, துப்பாக்கிச் சண்டையும், ராணுவ நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டிருப்பதாக மத்திய வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி நேற்று அறிவித்தும் இருந்தார். இருப்பினும், போர் குறித்து பலரும் பேசி வருகிறார்கள்.

அந்த வகையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் படப்பிடிப்புக்காக சென்றபோது செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் போர் குறித்து பேசியதோடு இந்திய ராணுவத்திற்கு பாராட்டுகளையும் தெரிவித்தார். இது குறித்து பேசிய அவர் ” பாகிஸ்தான் நாட்டிற்கு உள்ளே சென்று அங்கு இருக்கும் தீவிரவாதிகள் முகாம்களை அழித்த இந்திய ராணுவத்திற்கு மிகுந்த பாராட்டுக்கள்.

பிரதமர் நரேந்திர மோ இந்த போரை வலிமையாகவும், திறமையாகவும் கையாண்டு இருக்கிறார். அவருக்கும் என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். உள்துறை அமைச்சர் அமித்ஷா, முப்படை அதிகாரிகளுக்கும், முப்படை வீரர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள்” எனவும் பேசினார். அத்துடன் அன்னையர் தின வாழ்த்துக்களையும் தெரிவித்துவிட்டு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்