நடிப்பதற்கு முன்பே ஓவர் அலும்பு பண்ணிய லைலா! படத்தில் இருந்து அதிரடியாக தூக்கிய தயாரிப்பாளர்!

laila

தமிழ் சினிமாவில் எந்த மாதிரி கதாபாத்திரங்கள் கொடுத்தாலும் அருமையாக நடித்து கொடுக்க கூடியவர் நடிகை லைலா என்று கூறலாம். இவருடைய  நடிப்புக்கு உதாரணமாக விளங்கும் படங்கள் நந்தா, பிதாமகன் என்று கூட சொல்லலாம். இந்த இரண்டு படங்களிலும் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருப்பார். இவர் நடிக்கும் படங்களை பார்க்கையில் கண்டிப்பாக லைலா அமைதியான ஒரு நடிகை என்று தான் பலருக்கும் தெரியும்.

ஆனால், லைலா மிகவும் கோபம் கொண்ட ஒரு நடிகையாம். குறிப்பாக ஒரு படத்தில் தயாரிப்பாளர் தன்னை வந்து சந்திக்கவில்லை என்ற காரணத்துக்காகவே மிகவும் கோபமடைந்தாராம். அந்த திரைப்படம் வேறு எந்த படமும் இல்லை இயக்குனர் சபாபதி தக்ஷிணாமூர்த்தி இயக்கத்தில் பிரபுதேவா, அப்பாஸ்,சிம்ரன், ரம்பா, ஆகியோர் நடிப்பில் கடந்த 1997-ஆம் ஆண்டு வெளிவந்த வி.ஐ.பி திரைப்படம் தான்.

இந்த திரைப்படத்தில் சிம்ரன் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிகை லைலா தான் நடிக்கவிருந்தாராம். லைலாவிடம் படக்குழு பேசி அட்வான்ஸ் தொகை கொடுக்கப்பட்டு படத்தின் பூஜைக்கும் லைலா வந்துவிட்டாராம். பிறகு படத்தின் சம்பளத்தை மொத்தமாக எழுதி படத்தின் தயாரிப்பாளரான கலைப்புலி எழுதி லைலாவிடம் கொடுக்க தன்னுடைய உதவியாளர் ஒருவரிடம் கூறியுள்ளார். உடனடியாக அவரும் லைலாவிடம் அந்த சேக்கை கொடுத்துள்ளார்.

அதற்கு நடிகை லைலா படத்தின் தயாரிப்பாளர் என்னை எதற்கு பார்க்கவில்லை? என்ன தயாரிப்பு நிறுவனம் இது? என்னை வந்து பார்க்கவில்லை என்றால் அதற்கு என்ன அர்த்தம்? என கோபத்துடன் கேட்டாராம். பிறகு ஆரம்பத்திலே இவ்வளவு தகராறு பண்ணுது படத்தில் போட்டால் எப்படி சரியாக இருக்கும் என கலைப்புலி தாணு யோசித்தாராம்.

பிறகு தயாரிப்பாளர் கலைப்புலி தாணு இயக்குனரை அழைத்து லைலா இந்த படத்திற்கு சரியாக வரமாட்டார் நாம் வேறு நடிகையை போட்டு கொள்ளலாம் என கூறிவிட்டாராம். பிறகு தான் தயாரிப்பாளர் சிம்ரனை இந்த திரைப்படத்தில் நடிக்க கமிட் செய்தாராம்.  இந்த தகவலை தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவே சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

தொடர்ச்சியாக பல பெரிய பெரிய ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டிருந்த லைலாவுக்கு நடுவில் சில ஆண்டுகள் பட வாய்ப்புகள் இல்லாமல் போய்விட்டது.  பிறகு நீண்ட ஆண்டுகளுக்கு பின் கார்த்தி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான சர்தார் அடுத்ததாக வதந்தி எனும் வெப் சீரிஸில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்