பிக் பாஸ் 8-ல் இவர்களா? லேட்டஸ்ட் லிஸ்ட் பயங்கரமா இருக்கே!
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா பாஸ்கரன், தர்ஷா குப்தா, சுனிதா உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சென்னை : மக்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியானது வரும் அக்டோபர் 6-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகவுள்ளது. போட்டியில் எந்தெந்த பிரபலங்கள் கலந்துகொள்ளப் போகப்போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு இப்போதே எழுந்துவிட்டது. எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் அளவுக்குப் பிரபலங்களுடைய பெயர்களும் வந்துகொண்டு இருக்கிறது.
ஆனால், யாரெல்லாம் கலந்துகொள்ளப்போகிறார்கள் என்பதற்கான அறிவிப்பு பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கும்போது தான் தெரிய வரும். இருப்பினும், நம்மதக்க சினிமா வட்டாரங்களிலிருந்து நிகழ்ச்சியில், கலந்து கொள்பவர்கள் பற்றிய பெயர்கள் வெளியாகிவிடும். அப்படி தான் தற்போது 13 போட்டியாளர்கள் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவுள்ள பிரபலங்கள்
- பொன்னி சீரியல் நடிகை – தர்ஷிகா
- நகைச்சுவை நடிகர் – TSK
- நடிகை – ஐஸ்வர்யா பாஸ்கரன்
- நடிகர் – கோகுல்நாத்
- சீரியல் நடிகர் – விஜே விஷால்
- நடிகர் – VTV கணேஷ்
- பாடகர் – பால் டப்பா
- மாடல்/நடிகை – சௌந்தர்யா நஞ்சுண்டன்
- நடிகை – தர்ஷா குப்தா
- குக் வித் கோமாளி பிரபலம் – சுனிதா
- மகாராஜா விஜய் சேதுபதி மகள் – சஞ்சனா
- குக் வித் கோமாளி பிரபலம் – அன்ஷிதா
- குக் வித் கோமாளி பிரபலம் – அர்னவ்
இந்த முறை பால் டப்பா, VTV கணேஷ், TSK, சுனிதா உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதால் கண்டிப்பாக நிகழ்ச்சியில் காமெடிக்கு பஞ்சமே இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால், இவர்கள் இதற்கு முன்னதாக கலந்து கொண்ட நிகழ்ச்சிகள் மிகவும் பொழுது போக்காக இருந்தது. குறிப்பாக, VTV கணேஷ், TSK, சுனிதா ஆகியோர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களை மகிழ்வித்தனர்.
அதைப்போல, பால் டப்பா தற்போது பல பாடல்களை எழுதி பாடலை பாடியது போல பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் பாடலை பாட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. எனவே, இவர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்கள் என்றால் கண்டிப்பாக பொழுதுபோக்காக தான் இருக்கும். நிகழ்ச்சி எப்படி செல்ல போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்…
லேட்டஸ்ட் செய்திகள்
‘நிறைபுத்தரிசி’ பூஜை…சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு!
July 29, 2025
ஆபரேஷன் சிந்தூர் விவாதம் : இன்று மாலை பிரதமர் மோடி உரை?
July 29, 2025