சினிமா

லியோ சிறப்புக்காட்சிக்கு அனுமதி தரக்கூடாது! ப்ளூ சட்டை மாறன் பதிவு!

Published by
பால முருகன்

நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் வரும் அக்டோபர் 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த திரைப்படம் இன்னும் சில நாட்களிலே வெளியாகவிருக்கும் நிலையில், படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், லியோ படத்திற்கு சிறப்பு காட்சிகள் கிடையாது என தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை. இது ரசிகர்களுக்கு பெரிய அளவில் ஏமாற்றத்தை கொடுத்தது.

படத்தின் தயாரிப்பு நிறுவனம் 7 ஸ்க்ரீன் ‘லியோ’ திரைப்படத்திற்கு அதிகாலை 4 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதி கொடுக்கவேண்டும் எனவும், காலை 9 மணிக்கு பதிலாக 7 மணிக்கே திரையிட அனுமதிக்க வேண்டும்  என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்த நிலையில். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

லியோ சம்பவம் எதிரொலி: “திரையரங்குகளில் இனி நோ ட்ரெய்லர்” -திரையரங்கு உரிமையாளர் சங்கம் !

அப்போது லியோ படத்தின் காலை 4 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதி அளிக்க உத்தரவிட முடியாது எனவும், அதைப்போல  காலை 9 மணி காட்சிக்கு பதிலாக 7 மணிக்கு தொடங்க தமிழ்நாடு அரசுக்கு அனுமதி கோரி படத்தின் தயாரிப்பு நிறுவனம் மனு அளிக்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த நிலையில், வழக்கமாக எல்லா படங்களையும் விமர்சித்து பதிவிட்டு வரும் ப்ளூ சட்டை மாறன் தனது சமூக வலைதள பக்கங்களில் லியோ படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி கொடுக்கக்கூடாது என பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது ” லியோ ரிலீஸாகும் அக்டோபர் 19 வியாழன் விடுமுறை தினம் அல்ல. வேலை நாள்.

காலை 8 முதல் 10 வரை பீக் ஹவர் என்பதால்.‌. பள்ளி, கல்லூரி, வேலைக்கு செல்வோர் போக்குவரத்து நெரிசலால் பாதிக்கப்படலாம். ஆகவே வார இறுதி மற்றும் ஆயுதபூஜை விடுமுறை நாட்களில் மட்டுமே காலை 9 மணி சிறப்புக்காட்சியை அனுமதிக்க வேண்டும். அக்டோபர் 19 ஆம் தேதி காலை சிறப்புக்காட்சிக்கு அனுமதி தரக்கூடாது” என கூறியுள்ளார்.

மற்றோரு பதிவில் ” கவர்மண்ட் கிட்ட எதுக்கு கெஞ்சனும்? ஸ்பெஷல் ஷோவுக்கு கோர்ட்ல அனுமதி கேளுங்க. நான்தான் அடுத்த சி.எம். எதுவா இருந்தாலும் நான் பாத்துக்கறேன்’ என்று தயாரிப்பாளரை உசுப்பி விட்டதே கமாண்டர்தான் என்று கூறப்படுகிறது. மாஸ் காட்டிய கமாண்டர். அதிர்ந்த அரசாங்கம்” என பதிவிட்டுள்ளார்.

மற்றோரு பதிவில் ” 7 AM ஷோ போட்டா.. படம் முடிய 10 மணி ஆகிடும். 9 AM ஷோ டிக்கட் ஏற்கனவே வித்தாச்சி. இந்த அடிப்படை லாஜிக் கூட தெரியாம லியோ தரப்பு 7 AM ஷோவுக்கு அனுமதி கேட்ருக்கு” எனவும் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வரும் நிலையில், ஏற்கனவே படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி கொடுக்கப்படாத நிலையில், அந்த கோபத்தோடு ப்ளூ சட்டை மாறனை தீட்டி தீர்த்து வருகிறார்கள்.

Published by
பால முருகன்

Recent Posts

திருவள்ளூர் அருகே சரக்கு ரயில் தீ விபத்து – உதவி எண்கள் அறிவிப்பு.!

சென்னை : திருவள்ளூர் அருகே டீசல் டேங்கர் ரயிலில் ஏற்பட்ட தீ 5 மணி நேரமாக எரிந்து வரும் நிலையில்,…

7 minutes ago

”வெற்று விளம்பர திமுக, இப்போ ‘Sorry மா’ மாடல் ஆட்சியாக மாறிவிட்டது” – கடுமையாகச் சாடிய விஜய்.!

சென்னை : தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளில் போலீஸ் கஸ்டடியில் உயிரிழந்த 24 குடும்பத்தினருக்கு நீதி கேட்டு சென்னையில் தவெக #TNDemands…

36 minutes ago

பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் உடல்நலக்குறைவால் காலமானார்.!

சென்னை : பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் (83) உடல்நலக்குறைவால் இன்று (ஜூலை 13) காலை காலமானார். உடல்…

54 minutes ago

விஜய் தலைமையில் போராட்டம்.. கூட்ட நெரிசலில் சிக்கி தவெக பெண் தொண்டர்கள் மயக்கம்.!

சென்னை : அஜித்குமார் மரணத்திற்கு நீதி கேட்டு சென்னை சிவானந்தா சாலையில் தவெக தலைவர் விஜய் தலைமையில் இன்னும் சற்றுநேரத்தில்…

1 hour ago

5 மணி நேரமாக தீப்பற்றி எரியும் சரக்கு ரயில்.., தற்போதைய நிலவரம் என்ன?

சென்னை :  திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே இன்று (ஜூலை 13) அதிகாலை 5:20 மணியளவில் சென்னை மணலியில் இருந்து…

2 hours ago

ஒவ்வொரு 80 ஓவர்களுக்கும் 3 முறை பந்து மாற்றனும்…ஜோ ரூட் சொன்ன யோசனை!

லண்டன் : ஜோ ரூட் இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டியூக்ஸ் பந்து அடிக்கடி வடிவம்…

18 hours ago