Thalaivar 171: ரஜினி செய்த வேலையா இது? அதிர்ச்சியில் உறைந்து போன லோகேஷ்!

இயக்குனர் லோகேஷ் கனகஜின் லியோ படத்தில் இருக்கும் கதையை அப்படியே, ரஜினி தனது ஜெயிலர் படத்தில் ஒரு முக்கிய சீனில் வைத்துள்ளதாக ஒரு தகவல் வைரலாக பரவி வருகிறது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது விஜய்யின் ‘லியோ’ படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார், மேலும் படம் அக்டோபர் 19 ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இயக்குனர் தனது அடுத்த படமான ரஜினியின் ‘தலைவர் 171’ படத்தை இயக்கவுள்ளார்.
இதற்கிடையில், சூப்பர் ஸ்டாரின் ஜெயிலர் திரைப்படம் மாபெரும் வரவேற்பு பெற்று, வசூல் சாதனை செய்துள்ளது. படத்தில் இடம்பெற்றுள்ள அனைத்தும் காட்சிகளும் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக, இடைவேளைக்கு முன் வரும், ஒளிந்திருந்து ஸ்னைப்பர் சூடு காட்சி மிகவும் கவர்ந்தது என்றே செல்லலாம்.
ஆனால், இந்த காட்சி தான் லியோ படத்தின் முக்கிய காட்சியாக இருந்ததாம். அட ஆமாங்க… லோகேஷ் கனகராஜ் தலைவர் 171 படத்துக்காக ரஜினி சந்தித்தபோது, லியோ படத்தின் ஒரு முக்கிய சீனின் கதையை கூறிஉள்ளார். அந்த கதையை தான் ரஜினி அப்படியே ஜெயிலர் படத்தில் வைத்ததாக கூறப்படுகிறது.
இந்த செய்தி உண்மை என்றும், ஆனால் ரஜினி இவ்வாறு செய்வார் என்று லோகேஷ் எதிர்பார்க்கவில்லையாம். இந்நிலையில், ‘தலைவர் 171’ திரைப்படம் கைவிடப்படுகிறதா? இல்லையா? என்று தெரிவில்லை. ஆனால், சமூக வலைத்தளங்களில் இந்த திரைப்படம் ட்ராப் செய்யப்பட்டதாக பரவி வருகிறது. என்ன நிலவரம் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.