போதைப் பொருள் வழக்கு: மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ ஜாமீனில் விடுவிப்பு.!

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட சில மணி நேரங்களிலேயே, நடிகர் ஷைன் டாம் சாக்கோவிற்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.  

Tom Chacko

கொச்சி : போதைப்பொருள் விவகாரத்தில் கேரளாவில் உள்ள எர்ணாகுளம் காவல் நிலையத்தில் ஆஜரான நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது செய்யப்பட்டார். நடிகர் ஷைன் டாம் சாக்கோ மீது என்பிடிஎஸ் பிரிவு 27,29ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

போதைப்பொருள் பயன்படுத்தியதாகக் கூறப்படும் வழக்கில் இன்று கைது செய்யப்பட்டு, பின்னர் மருத்துவ பரிசோதனைக்காக கொச்சி நகர வடக்கு காவல்துறை அதிகாரிகளால் பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

மெடிக்கல் டெஸ்ட் உள்ளிட்ட அடுத்தகட்ட நடைமுறைகள் விரைவில் தொடங்கும் என கொச்சி போலீசார் தெரிவித்துள்ளனர்.  போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் அவர் கைதாவது இது 2-வது முறையாகும். கடந்த 2015-ம் ஆண்டும் இதேபோன்ற ஒரு வழக்கில் அவர் 2 மாதம் சிறையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்