அந்த மாதிரி காட்சியில் நடிக்கிறது சுலபம் இல்லை! நடிகை திவ்யா பிள்ளை வேதனை!

Published by
பால முருகன்

Divya Pillai : முத்தக்காட்சியில் நடிப்பது எளிதான விஷயம் இல்லை என்று மலையாள நடிகையான திவ்யா பிள்ளை  கூறியுள்ளார்.

சினிமாவில் இருக்கும் நடிகைகள் பலரும் எந்த மாதிரி காட்சிகள் கொடுத்தாலும் தன்னுடைய வேலையை 100 % கொடுக்கவேண்டும் என்பதற்காக நடிப்பார்கள். அப்படி நடிக்கவில்லை என்றாலும் கூட தான் எந்த மாதிரி காட்சிகள் என்றாலும் நடிப்பேன் என்று வெளிப்படையாகவே பேசுவதும் உண்டு. அப்படி தான் பிரபல மலையாள நடிகையான திவ்யா பிள்ளை சமீபத்தியே பேட்டி ஒன்றில் தனக்கு முத்தகாட்ச்சியில் நடிக்க எந்த பயமும் இல்லை என கூறியுள்ளார்.

இது குறித்து பேசிய திவ்யா பிள்ளை ” பொதுவாகவே ஒரு படத்தில் இரண்டு பேர் முத்தமிடுவதும், ரொமான்ஸ் செய்வதும் தான் காதல் காட்சியாக பார்வையாளர்கள் நினைத்து கொண்டு இருக்கிறார்கள். ஆனால், திரையில் பார்க்க இது எளிதான விஷயமாக இருக்கும். படப்பிடிப்பு தளத்தில் இப்படியான காட்சியில் நடிக்கும்போது ரொம்பவே கஷ்டமாக இருக்கும்.

ரோமன்ஸ் காட்சியின் போது கிட்டத்தட்ட ஒரு 75 கிலோ எடையுள்ள ஒரு மனிதன் நம்மளுடைய  மேல் படுத்துக்கொண்டு கேமராவுக்குத் தெரியும் படி நடிக்க வேண்டும். இதெல்லாம் எவ்வளவு கஷ்ட்டம் என்று எங்களை போல நடிகர்கள் மற்றும்  நடிகைகளுக்கு தான் தெரியும். அந்த காட்சியை மக்கள் உணர வேண்டும் என்பதற்காக எப்படியெல்லாம் முகபாவனையை காட்டவேண்டும் அதுவும் அப்படி நடிக்க எவ்வளவு கடினம் என்பதை நீங்களே சிந்தித்து பாருங்கள்.

அதைப்போல, காதல் மற்றும் முத்தக்காட்சியில் நடிக்கிறோம் என்றால் அதற்கு முன்னதாகவே அந்த நடிகருடன் கலந்து பேசவேண்டும். படத்தின் கதையை கேட்கும்போதே இப்படி ஒரு காட்சி இருக்கிறது என்று கூறிவிட்டார்கள் நீங்களும் சம்மதம் தெரிவித்துவிட்டீர்கள் என்றால் அந்தக் காட்சியில் நடிக்கும்போது சங்கடமாக இருந்தாலும், அந்த உணர்வை முகத்தில் காட்டக் கூடாது. முத்தக்காட்சியில் நடிக்க எனக்கு ஒன்னும் பயம் இல்லை நான் கதைக்கு தேவை என்றால் கண்டிப்பாகவே நடிப்பேன்” என்றும் வெளிப்படையாகவே  திவ்யா பிள்ளை  கூறியுள்ளார்.

மேலும், நடிகை திவ்யா பிள்ளை 2015 இல் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்து மக்களுக்கு மத்தியில் பிரபலமானார் என்றே கூறலாம். கடந்த ஆண்டு வெளியான ‘செவ்வாய்க்கிழமை’ படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். அதன்பிறகு தாக்கேதே லே படத்திலும் நடித்தார். இந்த படங்கள் எல்லாம் அவருக்கு பெரிய அளவில் வரவேற்பை கொடுத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

இனிமே ஆஸ்திரேலியாவில் சிறுவர்கள் யூடியூப் சேனல் நடத்த தடை! அதிரடி உத்தரவு!

சிட்னி : ஆஸ்திரேலிய அரசு, 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட், டிக்டாக், மற்றும் எக்ஸ் ஆகிய சமூக வலைதளங்களைப்…

13 hours ago

ரூ.5.37 கோடி கொடுக்கவில்லை…மதராஸி படக்குழுவினர் மீது புகார் கொடுத்த நிறுவனம்!

சென்னை : இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மதராஸி திரைப்படம் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி மிகப்பெரிய…

14 hours ago

இபிஎஸ் அழுத்தத்தால் ஓபிஎஸ் புறக்கணிக்கப்படவில்லை …விளக்கம் கொடுத்த நயினார் நாகேந்திரன்!

சென்னை : தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) இருந்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) வெளியேறியது குறித்து தமிழக…

15 hours ago

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை!

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 01-08-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன்…

16 hours ago

எதுக்கு குல்தீப் யாதவை எடுக்கவில்லை? டென்ஷனான கங்குலி!

லண்டன் : இங்கிலாந்துக்கு எதிராக நடந்து வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி, நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர்…

17 hours ago

விஜய் சேதுபதிக்கு பிளாக் பஸ்டர்…ரூ.50 கோடி வசூல் செய்த “தலைவன் தலைவி”!

சென்னை : இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்த ‘தலைவன் தலைவி’ திரைப்படம்…

18 hours ago