Meera Jasmine father rip [File Image]
Meera Jasmine father: பிரபல மலையாள நடிகை மீரா ஜாஸ்மினின் தந்தை ஜோசப் பிலிப் காலமானார்.
சண்டக்கோழி திரைப்படம் மூலம் ரசிகர்களை கவர்ந்த நடிகை மீரா ஜாஸ்மினின் தந்தை ஜோசப் பிலிப், இன்று (ஏப்ரல் 4ம் தேதி) காலமானார். 83 வையதாகிய மீராவின் தந்தை வயது முதிர்வு காரணமாகவும் அது தொடர்பான நோயயினால் அவதிப்பட்டு, கேரளாவின் எர்ணாகுளத்தில் உள்ள அவரது வீட்டில் அகால மரணமடைந்தார்.
இந்நிலையில், அவரது இறுதி சடங்கு நாளை மறுநாள் (சனிக்கிழமை) எர்ணாகுளம் கடவந்திரா விகாஸ் நகரில் உள்ள அவரது இல்லத்தில் பிற்பகல் 2 மணிக்கு நடைபெற்று, ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு பத்தனம்திட்டா இலந்தூர் மார்த்தோமா வலியபள்ளி மயானத்தில் தகனம் செய்யப்பட இருப்பதாக மனோரமா ஆன்லைன் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீரா ஜாஸ்மின் முறையே மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்து பிரபலமாகினார். 2001-ஆம் ஆண்டு லோஹிததாஸ் இயக்கிய சூத்திரதரன் திரைப்படத்தில் திலீப்புடன் இணைந்து நடித்த மீரா மலையாளத்தில் அறிமுகமானார்.
இந்த படம் பெரிய வரவேற்பைப் பெறவில்லை என்றாலும், அவருக்கு மற்ற மொழிகளில் பட வாய்ப்புகளை வழங்கியது. ஆறு வருடங்கள் கழித்து மீரா ‘குயின் எலிசபெத்’ படம் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார்.
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…