நிச்சயம் முடிந்து 5 மாதம்: திருமணத்தை நிறுத்திய மலையாள மேக்கப் கலைஞர்.!

பிரபல மேக்கப் கலைஞரும், திருநங்கை ஆர்வலருமான சீமா வினீத் திருமணம் செய்யும் முடிவில் இருந்து பின்வாங்கியுள்ளார்.

seema vineeth husband

திருவனந்தபுரம் : கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பிரபல மேக்கப் கலைஞரும், திருநங்கையுமான சீமா வினீத், திருமணத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

சீமா வினீத் தனது சொந்த உழைப்பால்  திருநங்கையாக இருந்து கொண்டு தனக்கென தனி இடத்தைப் பிடித்து, ஒட்டுமொத்த சமூகத்தினரிடமிருந்தும் பெரும் வரவேற்பைப் பெற்றவர். இவர் கடந்த ஏப்ரல் மாதம், நிஷாந் என்பவரை நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.

அதற்கான புகைப்படங்களை அவரே தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த விழாவில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். இப்படி இருக்கையில், ஐந்து மாத உறவுக்கு பின், தனிப்பட்ட காரணங்களால் தான் பிரிவதாக சமூக வலைதள பதிவு மூலம் சீமா தெரிவித்துள்ளார்.

அவரது பதிவில், ” நீண்ட ஆலோசனைக்குப் பிறகு, பரஸ்பர மரியாதையைப் பேணுவதன் மூலம் எங்கள் மன அமைதி மற்றும் முன்னேற்றத்திற்காக ஐந்து மாத நிச்சயதார்த்தத்திற்குப் பிறகு நானும் நிஷாந்தும் பிரிந்து செல்ல முடிவு செய்தோம்.

இந்த ஆழ்ந்த தனிப்பட்ட முடிவில் எங்கள் தனியுரிமையைப் புரிந்துகொண்டு மதிக்குமாறு ஊடகங்கள், நண்பர்கள் மற்றும் ரசிகர்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

நாங்கள் பிரிந்துவிட்டோம் என்பதை ஏற்றுக்கொண்டு, இந்த கடினமான நேரத்தில் உங்கள் புரிதலும் ஆதரவும் மிகவும் தாழ்மையானது.” என்று குறிப்பிட்டுள்ளார். திருமணத்தில் இருந்து விலகும் சீமாவின் முடிவுக்கு ரசிகர்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 27032025
o panneerselvam edappadi palanisamy
James Franklin srh 2025
CM MK Stalin
veera dheera sooran issue dhc
Edappadi K. Palaniswami o panneerselvam
shane watson