அடுத்த ஹீரோயின் இவங்கதான் போல.! வைரலாகும் மோனிஷாவின் லேட்டஸ்ட் கிளிக்.!

மோனிஷா பிளெஸி ஒரு நடிகை மற்றும் நகைச்சுவை கலைஞர் ஆவார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபல நகைச்சுவை நிகழ்ச்சியான கலக்கப்போவது யாரு சீசன் 8-ல் பங்கேற்று, இரண்டாவது போட்டியாளராக வெற்றி பெற்றுள்ளார். இதையடுத்து, மக்களிடம் மிகவும் பிரபலமான ஒரு ரியாலிட்டி ஷோ ஆன குக் வித் கோமாளியில் பங்கேற்றார்.

அதில் கோமாளியாக கலந்து கொண்ட மோனிஷா, தனது நகைச்சுவைத் திறமையால் அங்கு இருக்கும் நடுவர்கள் மற்றும் குக்குகளின் மனதை மட்டும் அல்லாமல் மக்களின் மனதையும் கவர்ந்தார். இதற்கிடையில் பிரபல யூடியூப் சேனல் ஆன ஷிப்பில பல தொடர்களில் நடித்துள்ளார். இதையடுத்து வெள்ளி திரையில் அவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

அதன்படி அவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் வெளியான ‘மாவீரன் திரைப்படத்தில்’ சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக நடித்தார். இப்பொழுது இவரது நடிப்பு மற்றும் நகைச்சுவைத் திறனுக்காக ஒரு ரசிகர்கள் கூட்டமே உள்ளது. மோனிஷா அடிக்கடி போட்டோ சூட் செய்து அதனை தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் கடந்த நவம்பர் 17ஆம் தேதி ஒரு ஜீன்ஸ் பேண்ட் மற்றும் ஸ்வெட்டர் அணிந்து, இவரா இப்படி என்று கேட்கிற அளவிற்கு புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். அந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் வைரலானது. இதை தொடர்ந்து தற்போது சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அதில் சேலை அணிந்து ஆசிரியர் போல தோற்றமளிக்கிறார். தலையில் மல்லி பூவுடன் கையில் பேனாவை வைத்தபடி போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அனைவரும் அடுத்த ஹீரோயின் இவர்தான் என்று புகழ்ந்து வருகின்றனர். இந்த புகைப்படங்களும் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இவரது இந்த புதிய கெட்டப் அடுத்த படத்திற்கான கெட்டப்பாக இருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது
லேட்டஸ்ட் செய்திகள்
வயலில் விவசாயிகளை நேரடியாக சந்தித்து பேசிய இபிஎஸ்.!
July 18, 2025