சென்னை : மாஸ் வேணுமா மாஸ் இருக்கு…கிளாஸ் லுக் வேணுமா அதுவும் இருக்கு என்கிற வகையில் ரசிகர்களை வெகுவாக கவரும் அளவுக்கு அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் டீசர் இருந்தது என்று தான் சொல்லவேண்டும். அஜித்திற்கு ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி கொடுத்த படங்களான தீனா, வாலி, வேதாளம், பில்லா ஆகிய படங்களில் என்ன கெட்டப்களில் அஜித் இருந்தாரோ அதனை அப்படியே மாற்றியமைத்து பல லுக்குகளை ஆதிக் ரவிசந்திரன் பயன்படுத்தி இருக்கிறார். வழக்கமாக ஒரு படத்தின் டீசர் […]
சென்னை : எங்கே பார்த்தாலும் டிராகன் படம் பார்த்தாச்சா? பார்த்தாச்சா என்கிற குரல் தான் கேட்டு கொண்டு இருக்கிறது. அந்த அளவுக்கு எமோஷனலான கமர்ஷியல் படத்தினை இயக்குநர் அஸ்வந்த் மாரிமுத்து சினிமா ரசிகர்களுக்கு கொடுத்திருக்கிறார். காதல் வேணுமா காதல் இருக்கு…எமோஷனல் வேணுமா அதுவும் இருக்கு.. காமெடி வேணுமா காமெடியும் இருக்கு என அனைத்தும் குறையாதபடி ஒரு நல்ல படமாக வெளிவந்து இருக்கிறது. படத்தில் வரும் பல காட்சிகள் நம்மளுடைய வாழ்க்கையில் நடந்தது போல இருப்பதால் படம் மக்களுக்கு […]
சென்னை : நடிகர் அஜித் குமார் நடித்துள்ள ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் டீசர் பிப்ரவரி 28, 2025 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார், மேலும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படம் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்போதே ப்ரோமோஷன் பணிகளை படக்குழு தொடங்கியுள்ளது. இந்த திரைப்படத்தினை புஷ்பா படங்களை தயாரித்த மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வருவதன் காரணமாக கண்டிப்பாக ப்ரோமோஷன் பற்றி […]
சென்னை : விடாமுயற்சி படத்திற்கு இப்படியா ஆகவேண்டும் என ரசிகர்கள் கவலைப்படும் விதமாக படம் நன்றாக இருந்தாலும் பெரிய அளவில் ரசிகர்களை ஈர்க்கவில்லை என்பதால் வசூல் ரீதியாக படம் தோல்வியை தழுவியுள்ளது. வெளியான முதல் இரண்டு நாட்களுக்கு படத்திற்கு கலவையான விமர்சனங்கள் தான் கிடைத்து வந்தது. அதன்பிறகு அதிகமாக எதிர்மறையான விமர்சனங்கள் தான் வந்தது. இதன் காரணமாக படத்தை பார்க்க திரையரங்குகளில் செல்வோர்களின் எண்ணிக்கையும் குறைய வசூலும் குறைந்தது. கிட்டத்தட்ட 220 கோடிக்கும் அதிகமான செலவு செய்து எடுக்கப்பட்ட […]
தொட்டதெல்லாம் தங்கம் என்கிற வகையில் பிரதீப் ரங்கநாதன் நடிகராக களமிறங்கிய பிறகு அவர் நடிக்கும் படங்களும், இயக்குனராக இயக்கிய படங்களும் சூப்பர் ஹிட் ஆகி வருகிறது. குறிப்பாக சொல்லவேண்டும் என்றால், இயக்குநராக அவர் இயக்கிய கோமாளி, லவ் டுடே மிகப்பெரிய ஹிட் ஆனது. அதைப்போல நடிகராக அவர் நடித்த லவ் டுடே, சமீபத்தில் வெளியான டிராகன் திரைப்படம் ஆகிய இரண்டு படங்களை சொல்லலாம். இதில் சமீபத்தில் வெளியான டிராகன் திரைப்படம் தான் பெரிய அளவுக்கு மக்களுக்கு மத்தியில் […]
சென்னை : அஜித்குமார் நடிப்பில் இறுதியாக வெளியான விடாமுயற்சி திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனால் இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இப்படத்தை மகிழ் திருமேனி இயக்கி இருந்தார். திரிஷா ஹீரோயினாக நடித்திருந்தார். அர்ஜுன், ரெஜினா ஆகியோர் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படம் வெளியான சமயத்திலேயே இது வழக்கமான அஜித் படம் போல இருக்காது என இயக்குனர் கூறிவிட்டார். அதனால் அப்படி எதிர்நோக்கியே ரசிகர்கள் திரையரங்கிற்கு வந்தார்கள். இப்படத்தின் புரமோஷன்களில் லைகா பெரியளவில் ஈடுபடவில்லை. அவ்வப்போது படத்தில் […]
சென்னை : இன்றயை கால இளைஞர்கள் மத்தியில் எந்த மாதிரி படத்தினை இயக்கி நடித்தால் க்ளிக் ஆகும் என பிரதீப் ரங்கநாதன் சரியாக தேர்வு செய்து படங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக அவர் கடைசியாக லவ் டுடே என்கிற படத்தினை இயக்கி அதில் நடித்திருந்தார். அந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. படம் எடுக்கப்பட்டது ரூ.5 கோடி பட்ஜெட்டில் தான். ஆனால், படம் வசூல் செய்தது எவ்வளவு கோடி என்றால் உலகம் […]
சென்னை : நடிகராக கலக்கி கொண்டு இருந்த தனுஷ் இப்போது இயக்குநராக கலக்கி கொண்டு இருக்கிறார். அவருடைய இயக்கத்தில் கடைசியாக வெளியான ராயன் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று இருந்தது. அந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக காதலர்களுக்காக NEEK (நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்) என்கிற படத்தினை இயக்கி உள்ளார். இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, பிரிமீயர் காட்சியை பார்த்துவிட்டு பத்திரிகையாளர்கள் பலரும் படத்தினை பாராட்டி பதிவிட்டு […]
சென்னை : வார இறுதி நாளான வெள்ளிக்கிழமை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கொண்டாட்ட நாளாக அமைந்து விடுகிறது. நாளை ஒரே நாளில் 3 தமிழ் திரைப்படங்கள் வெளியாகிறது. மூன்றுமே ஒவ்வொரு ரகம் என்றே சொல்லலாம், சொல்லப்போனால் மூன்றுமே பார்க்கம்படி ரசிக்கும்படி அமைந்திருக்கிறது. அதன்படி, நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் டிராகன், தனுஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள நிலவுக்கு என்மேல் என்னடி கோபம், சமுத்திரகனி நடிக்கும் ‘ராமம் ராகவம்’ ஆகிய 3 திரைப்படங்கள் நாளை (பிப்.21) வெளியாகின்றன. இப்பொது ஒவ்வொன்றும் […]
சென்னை : விடாமுயற்சி படம் வெளியாவதற்கு முன்னதாகவே குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகும் கொண்டாடலாம் என ரசிகர்கள் காத்திருந்தார்கள். அந்த அளவுக்கு அஜித் சினிமா கேரியரில் இதுவரை அதிகமான எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படங்களில் ஒன்றாகவும் அந்த படம் மாறியிருக்கிறது. இருப்பினும், படத்தின் போஸ்ட் ப்ரொடக்சன் வேலைகள் நடந்து கொண்டு இருப்பதால் படம் ஏப்ரல் 10-ஆம் தேதி ரிலீஸ் ஆகும் அதற்கு முன் விடாமுயற்சி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. விடாமுயற்சி படம் வெளியாக்க வசூல் ரீதியாக எதிர்பார்த்த […]
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான விடாமுயற்சி படம் உலகம் முழுவதும் 300 கோடிகள் வரை வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த அளவுக்கு வசூல் செய்யுமா? என்கிற கேள்விகளும் எழுந்திருக்கிறது. ஏனென்றால், படத்திற்கு கிடைத்து வந்த வரவேற்பு குறைந்த காரணத்தால் வசூலும் குறைந்துள்ளது. முன்னதாக வெளியான 4 நாட்களில் படம் உலகம் முழுவதும் ரூ.120 கோடி வரை வசூல் செய்திருந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தது. அதனைத்தொடர்ந்து தற்போது வெளியான […]
சென்னை : விடாமுயற்சி படம் உலகம் முழுவதும் 300 கோடிகள் வரை வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த அளவுக்கு வசூல் செய்யுமா? என்கிற கேள்விகளும் எழுந்திருக்கிறது. ஏனென்றால், படத்திற்கு கிடைத்து வந்த வரவேற்பு குறைந்த காரணத்தால் வசூலும் குறைந்துள்ளது. முன்னதாக வெளியான 4 நாட்களில் படம் உலகம் முழுவதும் ரூ.120 கோடி வரை வசூல் செய்திருந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தது. அதனைத்தொடர்ந்து தற்போது வெளியான ஒரு வாரத்தில் படம் எவ்வளவு கோடி வசூல் செய்துள்ளது […]
சென்னை : காதலர் தினமான வருகின்ற பிப்ரவரி 14 அன்று தமிழ் சினிமாவில் இருந்து ஒத்த ஓட்டு முத்தையா, 2கே லவ் ஸ்டோரி, Fire, காதல் என்பது பொதுவுடைமை உள்ளிட்ட 10 திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகிறது. இருப்பினும், இதில் சில படங்களின் ரிலீஸ் தள்ளிப் போக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஒரே நாளில் வெளியாகும் 10 திரைப்படங்கள் ஒத்த ஓட்டு முத்தையா 2கே லவ் ஸ்டோரி ஃபயர் அது வாங்கினால் இது இலவசம் தினசரி படவா காதல் […]
சென்னை : லவ் டுடே எனும் படத்தை கொடுத்து தற்போதைய வளர்ந்து வரும் நடிகர் மற்றும் இயக்குனராக பிரதீப் ரங்கநாதன் மாறிவிட்டார். லவ் டுடே படம் எடுக்கப்பட்டது 5 கோடி பட்ஜெட்டில் தான். ஆனால், படத்தின் வசூல் 100 கோடிகளுக்கு மேல். அந்த அளவுக்கு இளைஞர்களுக்கு மத்தியில் இந்த படம் பெரிய அளவில் வெற்றியை பெற்றது. எனவே, பிரதீப் ரங்கநாதனுக்கு நடிக்கவும் படங்கள் குவிந்தது. குறிப்பாக, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் LIC மற்றும் அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் […]
சென்னை : விடாமுயற்சி படம் அஜித் ரசிகர்கள் மற்றும் இன்னும் பலருக்கு பிடித்திருந்தாலும் கூட சிலருக்கு பிடிக்கவில்லை என்பதால் கலவையான விமர்சனங்களை சந்தித்து கொண்டு வருகிறது. அஜித் படத்திற்கு இந்த நிலைமையா? என்கிற வகையில், படத்திற்கு கிடைத்து வரும் வரவேற்பும் நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வருகிறது. வரவேற்பு குறைந்து வருவதால் வசூலும் குறைந்து வருகிறது. படத்தின் நான்காம் நாள் வசூல் குறித்து பல ஊடகங்கள்வெளியிட்ட தகவலின் படி மொத்தமாக படம் உலகம் முழுவதும் 120 கோடிகள் வரை மட்டுமே […]
சென்னை : அஜித்குமார் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வரும் திரைப்படம் விடாமுயற்சி. மொத்தமாக 220 கோடிகளுக்கு மேல் செலவு செய்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் வசூல் ரீதியாக பட்ஜெட்டை தாண்டுமா? என படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம் காத்துள்ளது. இந்த சூழலில், படம் வெளியான 4 நாட்களில் உலகம் முழுவதும் எத்தனை கோடிகள் வசூல் செய்துள்ளது என்கிற தகவல் கிடைத்துள்ளது. இன்னும் படத்தின் லைக்கா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக […]
சென்னை : இன்று நடிகர் சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிக்கும் படங்களின் அப்டேட்டுகள் தொடர்ச்சியாக வெளியாகி கொண்டு இருக்கிறது. முதல் அப்டேட்டாக பார்க்கிங் படத்தின் இயக்குநர் இயக்கத்தில் தன்னுடைய 49-வது படத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து அடுத்ததாக அவருடைய 50-வது படத்தினை தேசிங் பெரியசாமி இயக்கவுள்ளதாகவும், படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் இசையமைக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து அவர் அடுத்ததாக இயக்குநர் அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்கவுள்ள படத்திற்கான பெயர் என்ன என்பது பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏற்கனவே, […]
சென்னை : சிம்புவின்48-வது திரைப்படத்தினை இயக்குநர் தேசிங் பெரியசாமி இயக்கவுள்ளதாகவும் அந்த படத்தினை கமல்ஹாசன் தன்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கவுள்ளதாகவும் முன்னதாகவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த படத்தின் கதையை சிம்புவுக்கு முன்னதாகவே இயக்குநர் தேசிங் பெரியசாமி ரஜினியிடம் கூறியிருந்தார். படத்தின் கதை அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. அதைப்போல, தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவுக்கும் மிகவும் பிடித்திருந்தது. ஆனால், சிலர் காரணங்களால் ரஜினியால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனதால் சிம்புவிடம் இந்த கதையை அவர் […]
சென்னை : வசூல் மழை என்றால் என்னவென்று நான் பாடம் தருகிறேன் என்கிற வகையில் கடந்த ஆண்டு வெளியான புஷ்பா 2 படம் வசூலில் சம்பவம் செய்தது அனைவரும் அறிந்த ஒன்று தான். 450 கோடிகள் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் தயாரிப்பாளருக்கு பல கோடிகளை லாபம் கொடுத்து கடந்த ஆண்டு வெளியான படங்களில் அதிகம் வசூல் செய்த இந்திய படம் என்ற சாதனையையும் படைத்ததது. அதன்படி, ‘புஷ்பா 2’ திரைப்படம் உலகளவில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. சமீபத்திய […]
சென்னை : விஜயின் கடைசி திரைப்படத்தினை இயக்குநர் எச்.வினோத் இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடித்து முடித்த பிறகு அரசியல் பயணத்தில் ஈடுபடுவதாகவும் இனிமேல் சினிமாவில் நடிக்கமாட்டேன் எனவும் விஜய் ஏற்கனவே அறிவித்திருந்தார். எனவே, அவருடைய கடைசி படம் எந்த மாதிரி இருக்க போகிறது என்கிற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்துள்ளனர். முன்னதாகவே, விஜய் அரசியல் பயணத்தில் இறங்கவுள்ள காரணத்தால் கண்டிப்பாக கடைசி படத்தில் அரசியல் சார்ந்த விஷயங்கள் அதிகமாக இருக்கும் என கூறப்பட்டு கொண்டு இருந்தது. அதனை […]