சென்னை : புயல் கூட ஓய்ந்துவிடும் புஷ்பா 2 வசூல் ஓயாது என்கிற வகையில் தாறுமாறாக படம் வசூலை குவித்து வருகிறது. புஷ்பா முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பை போல வரவேற்பு கிடைக்கும் வசூல் ரீதியாகவும் அதைப்போல ஓப்பனிங் கிடைக்கும் என எதிர்பார்த்தால் புஷ்பா 1 மொத்த வசூலை வெளியான 3 நாட்களில் புஷ்பா 2 முறியடித்துவிட்டது. தற்போதைய வசூல் விவரம் படம் எத்தனை கோடிகள் வசூல் செய்கிறது என்பதை படத்தின் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் […]
சென்னை : ஒரு படம் எப்படி வசூல் செய்யவேண்டும் என்கிற அளவுக்கு புஷ்பா 2 படம் வசூல் செய்து மற்ற படங்களில் கிளாஸ் எடுத்து வருகிறது என்று தான் சொல்லவேண்டும். ஏனென்றால், அந்த அளவுக்கு படத்தின் வசூல் புயலை போல இந்திய சினிமாவிலே பெரிய தாக்கத்தை உண்டு செய்துள்ளது. குறிப்பாக வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.293 கோடி வரை வசூல் செய்து தென்னிந்திய சினிமாவில் முதல் நாளில் அதிகமான வசூல் செய்த படம் என்ற சாதனையை […]
சென்னை: நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் நேற்று வெளியான “புஷ்பா 2” திரைப்படம் முதல் நாளில் 294 கோடி ரூபாய் வசூல் செய்து, இந்திய அளவில் முதல் நாள் வசூலில் சாதனை புரிந்துள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது. இந்திய சினிமா வரலாற்றில் இதுவே அதிக வசூலாகும். ‘RRR’ படத்தின் முதல் நாள் வசூலான ரூ.222 கோடி சாதனையை முறியடித்து, முதல்நாளில் அதிகபட்ச ஓப்பனிங் கொண்ட திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. அது மட்டும் இல்லாமல், […]
சென்னை : புஷ்பா 2 திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிபெற்றுள்ளது என்றே சொல்லலாம். படம் வெளியாவதற்கு முன்பு முதல் பாகம் அளவுக்கு நல்ல படத்தை இயக்குனர் கொடுத்திருக்கிறாரா? என எதிர்பார்ப்புடன் காத்திருந்த நிலையில் எதிர்பார்ப்புகளை எல்லாம் பூர்த்தி செய்யும் விதமாக தரமான படத்தை இயக்குநர் கொடுத்துள்ளார். படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் 175 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முதல் பாகத்தை போல இரண்டாவது பாகத்திற்கும் அமோக வரவேற்பு […]
சென்னை: சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவான அமரன் திரைப்படம் டிச,4ம் தேதி முதல் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் ஒளிபரப்பானது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளில் படம் வெளியானது. தீபாவளிக்கு திரையரங்கில் வெளியான அமரன் பெரும் வரவேற்பைப் பெற்று ரூ.300 கோடிக்கு மேல் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படத்தில் தன்னுடயை மொபைல் எண்ணை பயன்படுத்தியதால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூ.1.10 கோடி இழப்பீடு கோரி […]
சென்னை : பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ள புஷ்பா 2 திரைப்படம் பலத்த வரவேற்பை பெற்று எதிர்பார்த்த அளவுக்கு வசூல் ரீதியாகவும் ஓப்பனிங்கை பெற்றுள்ளது. படம் முதல் நாளில் 150 கோடி முதல் 200 கோடி வரை வசூல் செய்யும் என கணிக்கப்பட்டு இருந்த நிலையில், பாக்ஸ் ஆபிஸ் தெரிவிக்கும் சாக்னில்க் இணையத்தளம் புஷ்பா 2 உலகம் முழுவதும் முதல் நாளில் ரூபாய் 175 கோடி வசூல் செய்துள்ளதாக தகவலை தெரிவித்துள்ளது. தெலுங்கு மொழியில் மட்டும் 95 […]
சென்னை : புஷ்பா 2 படம் முதல் பாகம் அளவுக்கு இருக்குமா? என மக்கள் எதிர்பார்த்த நிலையில், முதல் பாகம் என்ன? அதைவிட பயங்கரமாகவே எடுத்து தருகிறோம் என்கிற வகையில் இயக்குநர் சுகுமார் தரமான படத்தினை கொடுத்திருக்கிறார். படத்தை பார்த்துவிட்டு மக்கள் கூறிய விமர்சனங்களை வைத்து பார்க்கையில் பெரிய அளவில் எதிர்மறையான விமர்சனங்கள் கண்களில் சிக்கவில்லை. அந்த அளவுக்கு பிசிறு தட்டாமல் முதல் பாகத்தை எந்த அளவுக்கு அனைவருக்கும் பார்த்து ரசித்தார்களோ அதே போலவே ரசித்து வருகிறார்கள். […]
சென்னை : புஷ்பா 1 படம் எப்படி இருந்தது என்று நாம் அனைவரும் தெரியும். ஆனால், இரண்டாவது பாகமும் அதே அளவுக்கு கமர்ஷியல் ரீதியாக இருக்குமா? முதல் பாகம் நம்மளை கவர்ந்த அளவுக்கு கவருமா? என்று படத்தை பார்க்க மக்கள் அனைவரும் டிக்கெட்டை புக்கிங் செய்துகொண்டு காத்துள்ளனர். படம் டிக்கெட் புக்கிங்கிலியே பெரிய சாதனையையும் படைத்திருக்கிறது. குறிப்பாக வெளியாவதற்கு உலகம் முழுவதும் டிக்கெட் புக்கிங்கில் மட்டுமே இதுவரை 100 கோடி வசூல் செய்துள்ளது. எனவே, கண்டிப்பாக வெளியான முதல் […]
சென்னை : டிசம்பர் 5-ஆம் தேதி மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகவிருக்கும் புஷ்பா 2 படத்தின் அட்வான்ஸ் புக்கிங் அமோகமாக நடைபெற்று வரும் சூழலில், ரசிகர்களுக்கு அப்செட் ஆக்கும் வகையில் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், தயாரிப்பாளர்கள் படம் 2D, 3D, 4DX மற்றும் IMAX உட்பட பல வடிவங்களில் வெளியிடப்படும் என்று முன்னதாக அறிவித்திருந்த நிலையில், தற்போது 3D பிரிண்ட் பதிப்பு தயாராக இல்லை என்பதால் 3D-யில் வெளியாகாது என தகவல்கள் வந்துள்ளது. புஷ்பா […]
சென்னை : இப்போதெல்லாம் ஒரு புது படம் வெளியாகிறது என்றால் அந்த படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்பவர்கள் படம் முடிந்த பிறகு விமர்சனம் கூறும் போது படம் பிடிக்கவில்லை என்றால் கடுமையாக விமர்சனம் செய்வது அந்த படத்தின் பாதிப்புக்கு முக்கிய காரணமாக அமைந்துவிடுகிறது என தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் கடந்த நவம்பர் 20 அன்று அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில், திரைப்படங்களின் நிறை குறைகளை விமர்சிக்க அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் உரிமை உள்ளது. […]
சென்னை : புஷ்பா 2 திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வரும் டிசம்பர் 5-ஆம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்தின் அட்வான்ஸ் புக்கிங்கும் மும்மரமாக நடைபெற்று வருகிறது. படத்திற்கு இந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருக்க முக்கிய காரணமே முதல் பாகம் கொடுத்த வெற்றி தான். முதல் பாகம் உலகம் முழுவதும் 360 கோடி வரை வசூல் செய்திருந்தது. முதல் பாகம் […]
சென்னை : கங்குவா திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு மக்களுக்கு மத்தியில் சரியான விமர்சனத்தை பெறவில்லை என்பதால் படக்குழு திட்டமிட்ட தேதியை விட இன்னும் விரைவாக ஓடிடியில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக சமீபத்திய வெளியான தகவலில் தெரியவந்துள்ளது. கங்குவா வசூல் கங்குவா திரைப்படம் வெளியாவதற்கு முன்பே படக்குழு படம் அந்த மாதிரி இருக்கும்..இந்த மாதிரி இருக்கும் என்று கூறி படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருந்தார்கள். படத்தில் வரும் காட்சிகள் பார்ப்பதற்கு பிரமாண்டமாக இருந்தாலும் மக்கள் படத்திற்கு சரியான […]
சென்னை : ஆர்.ஜே. பாலாஜி நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று வெளியான திரைப்படம் தான் சொர்கவாசல். சிறைச்சாலைகளையும், சிறைக்கைதிகளையும் அரசு தங்களின் தேவைகளுக்காகப் எப்படி பயன்படுத்தி கொள்கிறார்கள் என்பதனை மையமாக வைத்து இந்த படத்தினை இயக்குநர் சித்தார்த் விஸ்வநாதன் எடுத்திருக்கிறார். படம் பார்த்த பலரும், இதுவரையில் ஆர்.ஜே.பாலாஜி கிண்டலான கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து பார்த்த நமக்கு ஒரு சீரியஸ் ஆன பார்த்திபன் என்ற கதாபாத்திரத்தில் சூப்பராக நடித்துள்ளார்” எனவும் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள். மேலும், சிலர் […]
சென்னை : அஜித் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த விடாமுயற்சி படத்திற்கான டீசர் எந்த ஒரு முன் அறிவிப்பும் இல்லாமல் திடீரென நேற்று இரவு வெளியானது. டீசரில் வந்த காட்சிகள் இதுவரை கோலிவுட்டில் எடுக்கப்படாத படங்களின் சாயலில் அதாவது ஹாலிவுட் கலரிங் இருந்ததால் மக்களுடைய கவனத்தை ஈர்த்துள்ளது. டீசரை வைத்து பார்க்கையில் இது 1997இல் ஹாலிவுட்டில் வெளியான பிரேக்டவுன் (Breakdown) படத்தின் தழுவல் போல இருந்தது. அப்படி தான் டீசரை பார்த்த பலரும் அந்த படத்தினுடைய காட்சிகளை விடாமுயற்சி […]
சீனா : வெற்றி படம் என்றால் இப்படி இருக்கணும் என்கிற வகையில், மகாராஜா படம் பெரிய உதாரணமாக அமைந்துள்ளது. ஏற்கனவே, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் இந்த ஆண்டு ஜூன் மாதம் வெளியாகி வசூலிலும், விமர்சன ரீதியாகவும் பெரிய அளவில் பாராட்டுகளை பெற்றது. வசூல் ரீதியாக படம் 100 கோடி வசூல் செய்து விஜய் சேதுபதிக்கு முதல் 100 கோடி கொடுத்த படம் என்ற சாதனையையும் படைத்தது. தமிழில் இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெற்ற […]
சென்னை : பொதுவாகவே எந்த மொழிகளில் ஒரு நல்ல திரைப்படங்கள் வெளியானாலும் அதனை எல்லா மொழி ரசிகர்கள் பார்க்க ஆர்வம் காட்டுவது உண்டு. ஒரு சில நல்ல படங்கள் ஓடிடிக்கு வந்த பிறகு பார்த்துவிட்டு ஐயோ தியேட்டரில் பார்த்திருக்கலாம் எனவும் வருத்தப்படுவது உண்டு. அப்படி தான் லக்கிபாஸ்கர் படத்தினை பார்த்துவிட்டு பலரும் கூறி வருகிறார்கள். இந்த திரைப்படம் பங்குசந்தை மூலம் பல கோடிகளை அள்ளிய உண்மைச் சம்பவ நிதி மோசடியை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. இந்த படத்தில் […]
சென்னை : ஹாலிவுட்டில் நம்ம ஊரு சிங்கம் என பெருமைப்படும் அளவுக்கு யோகி பாபு வளர்ச்சி கடல் அலைகளை போல வளர்ந்து கொண்டு இருக்கிறது என்றே சொல்லலாம். தமிழில் டாப் நடிகர்களுடன் காமெடி நடிகராக நடித்து வந்த அவர் இப்போது ஹாலிவுட்டுக்கு சென்று அங்கு ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, அட்லீ இயக்கத்தில் ஷாருக்கானுடன் இணைந்து ஜவான் படத்தில் நடித்ததன் மூலம் பாலிவுட்டிலிலும் அறிமுகமாகிவிட்டார். அதனை தொடர்ந்து இப்போது தயாரிப்பாளராக […]
சென்னை : தீபாவளியையொட்டி, சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘அமரன்’ திரைப்படம் வெற்றிகரமாக 4வது வாரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. சொல்லப்போனால், சிவகார்த்திகேயன் கேரியரிலும் அதிக வசூல் செய்த படமாக அமரன் மாறியுள்ளது. வீர மரணம் அடைந்த இந்திய ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இப்படம், மக்கள் வரவேற்பால ரூ.300 கோடியை கடந்து வசூலை வாரி குவித்து வருகிறது. இன்னும் வெற்றிநடை போடுவதால் ரூ.400 கோடிவரை பாக்ஸ் ஆபீஸ் வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் […]
சென்னை : ஐயா விடாமுயற்சி அப்டேட் கொடுங்க என அஜித் ரசிகர்கள் அந்த படத்தின் அப்டேட்டை தினமும் தயாரிப்பாளரிடம் கேட்டுக்கொண்டு வருகிறார்கள். ஆனால், அந்த படத்தின் டைட்டில் மற்றும் படத்தில் நடிப்பவர்கள் அறிவிக்கப்பட்டதோடு சரி அதன்பிறகு படம் நடக்கிறது அல்லது இல்லையா? எப்போது ரிலீஸ் என ஒரு தகவலும் வெளிவந்த பாடு இல்லை. இதனாலே பல அஜித் ரசிகர்கள் வலிமை கதை ஆகிவிட்டதே நம்மளுடைய நிலைமை என புலம்பி வருகிறார்கள். அவர்களுக்கு ஆறுதல் கொடுக்கும் விதமாக அஜித் விடாமுயற்சி […]
சென்னை : ஆர்.ஜே.பாலாஜியின் சொர்கவாசல் திரைப்படம் வெளியாக இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், படத்தின் முதல் டிரெய்லரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். சோர்கவாசல் டிரெய்லர் வெளியீட்டு விழாவில், ஆர்.ஜே.பாலாஜி, லோகேஷ்கனகராஜ் மற்றும் அனிருத் இணைந்தபோது இந்த நிகழ்வு சிறப்பு வாய்ந்ததாக அமைந்தது. இப்படத்தை இயக்குனர் பா ரஞ்சித்தின் முன்னாள் உதவியாளரான அறிமுக இயக்குனர் சித்தார்த் விஸ்வநாத் இயக்குகிறார். இந்தப் படம் 1999-ல் நடக்கும்சென்னையில் நடந்த சம்பவத்தை மையமாக வைத்து இப்படத்தின் கதை உருவாகிறுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிரெய்லர், […]