அவருக்கு மட்டும் அண்ணன் வரார் வழி விடு..எங்களுக்கு முயற்சியா? அனிருத்தை கலாய்க்கும் ரசிகர்கள்!

விடாமுயற்சி படத்தின் டீசரில் வரும் அனிருத் இசை திருப்தியாக இல்லை என ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் விமர்சனங்களை கூறி வருகிறார்கள்.

vidaamuyarchi teaser

சென்னை : அஜித் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த விடாமுயற்சி படத்திற்கான டீசர் எந்த ஒரு முன் அறிவிப்பும் இல்லாமல் திடீரென நேற்று இரவு வெளியானது. டீசரில் வந்த காட்சிகள் இதுவரை கோலிவுட்டில் எடுக்கப்படாத படங்களின் சாயலில் அதாவது ஹாலிவுட் கலரிங் இருந்ததால் மக்களுடைய கவனத்தை ஈர்த்துள்ளது.

டீசரை வைத்து பார்க்கையில் இது 1997இல் ஹாலிவுட்டில் வெளியான பிரேக்டவுன் (Breakdown) படத்தின் தழுவல் போல இருந்தது. அப்படி தான் டீசரை பார்த்த பலரும் அந்த படத்தினுடைய காட்சிகளை விடாமுயற்சி டீசர் காட்சிகளுடன் ஒப்பிட்டு கண்டிப்பாக இந்த படத்தின் ரீமேக் தான் பொங்கலுக்கு எங்கள் சம்பவம் தான் என்றெல்லாம் ரசிகர்கள் டீசரை பாராட்டி படத்தை பார்க்க காத்துள்ளனர்.

டீசரில் வரும் காட்சிகள் பெரிய அளவில் எதிர்மறையான விமர்சனங்களை பெறவில்லை என்றாலும் அனிருத் பின்னணி இசை சற்று ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளதாக கூறிவரும் விமர்சனங்களை பார்க்கும்போது தெரிகிறது. வழக்கமாகவே அனிருத் இசையில் ஒரு படத்தின் டீசர் ட்ரைலர் வந்தாலே அது மிகவும் தனித்துவமாக அனைவரையும் கவரும் வகையில் இருக்கும்.

ஆனால், இந்த முறை விடாமுயற்சி படத்தின் டீசரில் சற்று வித்தியாசமான முறையில் இசையமைத்துள்ளார். அது ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை என தெரிகிறது. இதன் காரணமாக விடாமுயற்சி டீசரில் அனிருத் இசையை பற்றி பலரும் ட்ரோல் செய்து வருகிறார்கள்.

அஜித் ரசிகர் ஒருவர் … விஜய்க்கு மட்டும் அனிருத் சிறந்த இசையை கொடுத்துவிட்டு எங்களுக்கு இப்படி கொடுத்திருக்கிறார் என நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார்.

AK FANS
AK FANS [File Image]
AJITH FAN ANI
AJITH FAN ANI [File Image]
Anirudh
Anirudh [File Image]
 

இப்படியான விமர்சனங்கள் மற்றும் ட்ரோல்கள் ஒரு பக்கம் இருந்தாலும் பலரும் சொல்ல கூடிய மற்றோரு விஷயம் என்னவென்றால், அனிருத் இப்போது பெரிய படங்களில் இசையமைத்து கொண்டு இருக்கிறார். எனவே, அவருக்கு முன்னதாகவே வேலையை சொல்லி அவருக்கு நேரம் கொடுத்து வேலை செய்யவிடுங்கள் என கூறி வருகிறார்கள்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்