சென்னை :பொதுவாகவே எந்த மொழிகளில் ஒரு நல்ல திரைப்படங்கள் வெளியானாலும் அதனை எல்லா மொழி ரசிகர்கள் பார்க்க ஆர்வம் காட்டுவது உண்டு. ஒரு சில நல்ல படங்கள் ஓடிடிக்கு வந்த பிறகு பார்த்துவிட்டு ஐயோ தியேட்டரில் பார்த்திருக்கலாம் எனவும் வருத்தப்படுவது உண்டு. அப்படி தான் லக்கிபாஸ்கர் படத்தினை பார்த்துவிட்டு பலரும் கூறி வருகிறார்கள்.
இந்த திரைப்படம் பங்குசந்தை மூலம் பல கோடிகளை அள்ளிய உண்மைச் சம்பவ நிதி மோசடியை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. இந்த படத்தில் கொஞ்சம் காதலை சேர்த்து திரில்லர் படமாக உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் வெங்கி அட்லூரி. படம் பார்வையாளர்களை கவரும் வகையில் எடுத்துள்ள காரணத்தால் தெலுங்கில் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு படம் வெளியான நிலையில், தமிழிலும் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால், அமரன் படம் பல திரையரங்குகளில் ஓடி கொண்டு இருந்த காரணத்தால் பலருடைய கவனம் அமரன் பக்கம் இருந்தது. அதன்பிறகு இப்போது லக்கி பாஸ்கர் படம் நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள நிலையில், பலருடைய கவனம் இந்த பக்கம் திரும்பியுள்ளது.
படத்தை பார்த்துவிட்டு நெட்டிசன்கள் பலரும் படம் மிகவும் அருமையாக இருக்கிறது. இந்த மாதிரி ஒரு படத்தை திரையரங்குகளில் பார்க்க மிஸ் பண்ணிட்டோமே என வருத்தப்பட்டு வருகிறார்கள். படத்தை பார்த்த நெட்டிசன் ஒருவர் ”லக்கிபாஸ்கர்மூவி ரொம்ப நல்லா இருக்கு.. அதுல வர சாங்ஸ் கதை எல்லாமே நல்லா இருக்கும்” என கூறியுள்ளார்.
unknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown node