ஜனநாயகன் பார்த்து தேம்பி தேம்பி அழுத அமைச்சர் பர்வேஷ்!

'ஜனநாயகன்' திரைப்படம் இன்று வெளியான நிலையில், புதுக்கோட்டையில் படம் பார்த்த அமைச்சர் முகமது ஃபர்வேஸ் உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கியதாகக் கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Hero Image

சென்னை : முதலமைச்சர் ஜோசப் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 'ஜனநாயகன்' திரைப்படம் இன்று தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் திருவிழாக்கோலத்துடன் வெளியானது. இது முதல்வர் விஜய் நடிப்பில் வெளியாகும் கடைசித் திரைப்படம் என்பதால், அவரது ரசிகர்களும் தொண்டர்களும் இதனைக் கொண்டாட்டமாக மாற்றி வருகின்றனர்.

உலகம் முழுவதும் சுமார் 8,000 திரையரங்குகளிலும், தமிழகத்தில் மட்டும் 1,000 திரையரங்குகளிலும் இப்படம் மிகப் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டுள்ளது. தியேட்டர்கள் அமைந்துள்ள பகுதிகள் அனைத்தும் பேனர்கள், கட்அவுட்டுகள் மற்றும் ரசிகர்களின் ஆரவாரத்தால் களைகட்டியுள்ளன.

புதுக்கோட்டையில் உள்ள திரையரங்கு ஒன்றில், தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் முகமது ஃபர்வேஸ் 'ஜனநாயகன்' திரைப்படத்தைக் காண வருகை தந்தார். படம் பார்த்துக் கொண்டிருந்தபோது உணர்ச்சிவசப்பட்ட அவர், கதறி அழுது கண்ணீர் சிந்திய நிகழ்வு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

முதல்வர் விஜய்யின் திரையுலகப் பயணத்தின் இறுதிப் படம் என்பதும், படத்தின் சில உணர்வுபூர்வமான காட்சிகளும் அமைச்சரை இவ்வளவு ஆழமாகப் பாதிக்கச் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அமைச்சர் மட்டுமின்றி ரசிகர்கள் பலரும் படம் தொடங்கியதில் இருந்து கொண்டாடி படம் முடிந்த பிறகு இனிமேல் நமக்கு பிடித்த ஹீரோவின் படத்தை திரையரங்குகளில் பார்க்க முடியாது என சோகத்துடன் செல்கின்றனர்.

ஜனநாயகன் பார்த்து தேம்பி தேம்பி அழுத அமைச்சர் பர்வேஷ்!