79 PS பவர்... 20 லிட்டர் டேங்க்! கேடிஎம் 690 Rally 2027 பைக்கில் இவ்வளவு விஷயங்களா?

ஆஃப்-ரோடு மற்றும் அட்வென்ச்சர் ரைடர்களைக் குறிவைத்து KTM 690 Rally 2027 பைக்கை ஐரோப்பிய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.

Hero Image

டெல்லி : ஆஃப்-ரோடு மற்றும் சாகசப் பயணங்களுக்குப் பெயர் பெற்ற கேடிஎம் (KTM) நிறுவனம், அட்வென்ச்சர் பைக் பிரியர்களைக் கவரும் வகையில் தங்களது புத்தம் புதிய KTM 690 ரேலி 2027 (KTM 690 Rally) பைக்கை ஐரோப்பிய சந்தையில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்துள்ளது. கேடிஎம் நிறுவனத்தின் வரலாற்றில் மிகக் புகழ்பெற்ற 'கேடிஎம் 640 அட்வென்ச்சர்' மாடலின் வாரிசாக இந்த புதிய பைக் களமிறக்கப்பட்டுள்ளது.

கேடிஎம்-மின் 690 எண்டிரோ ஆர் (690 Enduro R) பிளாட்ஃபார்ம் தொழில்நுட்பத்தின் அடிப்படையில், கரடுமுரடான நீண்ட தூரப் பயணங்களையும், மிகக் கடினமான ஆஃப்-ரோடு பாதைகளையும் அசால்ட்டாகக் கடக்கும் வகையில் இந்த ரேலி பதிப்பு பிரேக் செய்யப்பட்டுள்ளது.

வண்டியில் வேற என்ன ஸ்பெஷல் இருக்கு?

கரடுமுரடான மலைப் பாறைகள் மற்றும் பள்ள மேடுகளில் வண்டி அதிராமல் மென்மையாகச் செல்வதற்காக, இதில் உலகத்தரம் வாய்ந்த டபிள்யூபி எக்ஸ்பிளோர் (WP XPLOR) சஸ்பென்ஷன் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. சாகசப் பயணங்களின் போது வண்டியைத் துல்லியமாகக் கட்டுப்படுத்தவும், பாதுகாப்பாக நிறுத்தவும் இதில் மிக உயர்தரமான பிரேம்போ (Brembo) பிரேக் சிஸ்டம் மற்றும் ஆஃப்ரோடு ஏபிஎஸ் (Offroad ABS) பாதுகாப்பு தொழில்நுட்பம் கொடுக்கப்பட்டுள்ளது.

இதன் சக்கர அமைப்பைப் பொறுத்தவரை, அசல் ரேலி பைக்குகளைப் போலவே முன்பக்கத்தில் பெரிய 21-இன்ச் சக்கரமும், பின்பக்கத்தில் 18-இன்ச் சக்கரமும் கொடுக்கப்பட்டுள்ளதால், மணல் மற்றும் சேற்றுப் பாதைகளிலும் வண்டி சறுக்காமல் மிக உறுதியான கிரிப்பைத் தரும். சாகச ரைடர்களுக்கு ஏதுவாக இதனுடைய சீட் உயரம் (Seat Height) 910 மில்லிமீட்டர் என்ற அளவில் சற்று உயரமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

மிரட்டலான இன்ஜின் பவர்

இந்த பைக்கின் இதயப் பகுதியாக கேடிஎம் நிறுவனத்தின் புகழ்பெற்ற எல்சி4 (LC4) சிங்கிள் சிலிண்டர் 692.7சிசி பிரம்மாண்ட இன்ஜின் செயல்படுகிறது. இது அதிகபட்சமாக 79 PS பவரையும், 73 Nm டார்க் திறனையும் மிக ஆக்ரோஷமாக வெளிப்படுத்துகிறது. இதனுடன் கொடுக்கப்பட்டுள்ள 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் கிளட்ச் பயன்படுத்தாமல் கியரை மாற்றி ஓட்டும் 'குவிக் ஷிப்டர்+' (Quickshifter+) தொழில்நுட்பம் வண்டியை மின்னல் வேகத்தில் செலுத்த உதவுகிறது.

மைலேஜ் மற்றும் லாங் ரைடைப் பொறுத்தவரை, இந்த பைக்கில் 20 லிட்டர் கொள்ளளவு கொண்ட மிகப்பெரிய பெட்ரோல் டேங்க் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பெரிய டேங்க் வசதி இருப்பதால், காடுகளுக்கோ அல்லது மலைப் பிரதேசங்களுக்கோ லாங் ரைடு செல்லும்போது அடிக்கடி பெட்ரோல் போடும் கவலையே இருக்காது. இந்த பைக் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு தோராயமாக 22 முதல் 26 கிலோமீட்டர் வரை மைலேஜ் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிநவீன டிஜிட்டல் வசதிகள்

தொழில்நுட்ப வசதிகளாக இதில் வண்டியின் வேகம் மற்றும் முக்கிய விபரங்களைத் துல்லியமாகக் காட்டும் 4.2-இன்ச் டிஎஃப்டி (TFT) டிஜிட்டல் டிஸ்ப்ளே திரை, நவீன எல்இடி (LED) விளக்குகள் மற்றும் ஆஃப்-ரோடு ஓட்டுதலுக்கு என்றே பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட 'ரேலி ரைடு மோடு' (Rally Ride Mode) போன்ற மாஸ் வசதிகள் நிறைந்துள்ளன. ஐரோப்பாவில் உள்ள மேட்டிகாஃபென் (Mattighoffen) தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் இந்த பைக், வரும் அக்டோபர் மாதம் முதல் அங்குள்ள ஷோரூம்களைச் சென்றடையவுள்ளது.

இந்தியாவில் எப்போ வரும்?

கேடிஎம் நிறுவனம் தற்போதைய நிலையில் இந்த காரின் விலையையோ அல்லது இது எந்தெந்த சர்வதேச சந்தைகளில் விற்பனைக்கு வரும் என்கிற விபரத்தையோ இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இருப்பினும், சந்தையில் இருக்கும் 690 எண்டிரோ ஆர் மாடலை விட இதனுடைய விலை மிக அதிகமாக இருக்கும் எனத் தெரிகிறது.

இந்திய வாடிக்கையாளர்கள் மற்றும் தமிழ்நாட்டு இளைஞர்கள் மத்தியில் இந்த முரட்டுத்தனமான அட்வென்ச்சர் பைக்கிற்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்தாலும், தற்போதைய சூழலில் இந்த பைக் இந்திய சந்தையில் லான்ச் செய்யப்பட வாய்ப்பில்லை. ஒருவேளை எதிர்காலத்தில் கேடிஎம் நிறுவனம் இதனை இந்தியாவிற்கு கொண்டு வரத் திட்டமிட்டால், தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை போன்ற முக்கிய நகரங்களில் உள்ள கேடிஎம்-மின் பிரீமியம் ஷோரூம்கள் வழியாக இது விற்பனைக்கு வரும்.

79 PS பவர்... 20 லிட்டர் டேங்க்! கேடிஎம் 690 Rally 2027 பைக்கில் இவ்வளவு விஷயங்களா?