அஜித்திடம் மூன்று கதை கூறியது உண்மைதான்! தயாரிப்பாளர் ஒப்புதல்!

தல அஜித் தற்போது நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினை வினோத் இயக்கி உள்ளார். படம் தயாராகி ரிலீசிற்கு ரெடியாக உள்ளது. இப்படத்தை போனி கபூர் தயாரித்து உள்ளார்.
இவர்தான் அஜித்தின் அடுத்த படத்தையும் தயாரிக்க உள்ளார். அந்த படம் ஆக்சன் கதைக்களமாக உருவாகவுள்ளது. இப்படத்தை அடுத்து தல அஜித்திடம் போனி கபூர் மூன்று கதைகளை கூறியதாகவும் அந்த படங்கள் ஹிந்தி படம் எனவும் செய்திகள் வெளியாகின.
அதற்க்கு டிவிட்டரில் தனது விளக்கத்தை அளித்துள்ளார் போனி கபூர். அதாவது, அஜித்திடம் மூன்று கதைகளை கூறியது உண்மைதான். ஆனால் அஜித் இன்னும் அதனை ஓகே செய்யவில்லை. மேலும் அடுத்தப்படத்தினையும் ஹிந்தி மற்றும் தமிழில் எடுக்க கேட்டுள்ளேன் அதற்கும் இன்னும் அவ்ரிடம் இருந்து சிக்னல் வெளியாக வில்லை என தெளிவுபடுத்தியுள்ளார்.