‘ஓவர் HYPE படத்துக்கு நல்லது இல்லை’..அப்டேட் விடாத காரணத்தை உடைத்த கோட் தயாரிப்பாளர்!

சென்னை : ஒரு படத்திற்கு அதிகமான எதிர்பார்ப்பு நல்லது இல்லை என கோட் படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளார். 

Archana Kalpathi about GOAT

விஜய் படங்கள் வெளியாகிறது என்றாலே அந்த படத்திற்கு எந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருக்கும் என்பதை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். குறிப்பாக, கடைசியாக அவருடைய நடிப்பில் வெளியான லியோ படத்திற்கு பெரிய எதிர்பார்ப்புகள் இருந்தது என்றே சொல்லலாம். அந்த படத்தினுடைய எதிர்பார்ப்பையும், அவர் தற்போது நடித்துள்ள கோட்  படத்தினுடைய எதிர்பார்ப்பையும் ஒப்பிட்டு பார்த்தால் கோட் படத்தின் எதிர்பார்ப்பு கொஞ்சம் குறைவாக தான் இருக்கிறது.

கோட் படத்தின் எதிர்பார்ப்புக்கு முக்கிய காரணமே தயாரிப்பு நிறுவனம் சார்பில் இருந்து பெரிய அளவில் அப்டேட்டுகள் வழங்கப்படாதது என்றே சொல்லலாம். ஒரு பக்கம் கோட் படத்திற்கு எதிர்பார்ப்பே இல்லை என்பதே ஒரு நெகட்டிவ் விமர்சனமாக பேசப்பட்டு வருகிறது. இந்த சூழலில், கோட் படத்தின் மீது எதிர்பார்ப்புகள் இல்லாத காரணத்தை பற்றி படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி வெளிப்படையாக அனைவர்க்கும் புரியும் படி பேசியுள்ளார்.

தற்போது கோட் படத்தின் ப்ரோமோஷனுக்காக ஊடகங்களுக்கு பேட்டிக்கொடுத்து வரும் அவர் இதனைப்பற்றி, யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பேசும்போது, ஒரு படத்துக்கு ஒரு பெரிய ‘HYPE’ இருப்பது நல்ல விஷயம் இல்லை. அதிகமான எதிர்பார்ப்பு ஒரு படத்தின் மீது வைப்பது ஒரு புத்தகத்தை படித்துவிட்டு படம் பார்க்கப் போவது போன்ற விஷயம்.

எனவே, இதன் காரணமாக, ரசிகர்கள் அனைவருமே மனதில் தங்களுக்கென தனி எதிர்பார்ப்பு வைத்திருப்பார்கள். ஒரு இயக்குநர் அனைவரது எண்ணங்களையும் உணர்ந்து படமெடுப்பது சாத்தியம் இல்லாத ஒரு விஷயம். இதன் காரணமாக, தான் ‘கோட்’ படம் ஆரம்பம் ஆகும்போதே நாங்கள் தெளிவாக படத்திற்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்த கூடாது. படத்தின் ட்ரைலரை பார்த்துவிட்டு மக்கள் நேரடியாக படத்தை பார்க்க வரட்டும் என்ற காரணத்தால் தான் படத்திற்கு தொடர்ச்சியாக அப்டேட் விடாமல் இருந்தோம்” எனவும் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

RIP Ratan Tata
SA womens Won the Match
India whitewash Bangladesh
NZWvsSLW
Kavarapettai Train accident
Mohammad Shami
Chief pilot Ikrom Rifatli Fami Zainal - co-pilot Maitri Shithole