அடுத்தது யார் என்ற பரபரப்பு ‘ஸ்ரீ லீக்ஸ்’ புகழ் நடிகை ஸ்ரீரெட்டியின் ஹிட் லிஸ்ட்டில் திரை உலகினரை அதிர வைத்துக்கொண்டிருக்கிறது. இயக்குநர் சேகர் கமுல்லா, நடிகர் ராணாவின் தம்பி ஆகியோரைத் தொடர்ந்து திரைக்கதாசிரியர் கோனா வெங்கட் மீது நடிகை ஸ்ரீரெட்டி பாலியல் புகார் தெரிவித்துள்ளார். தெலுங்கு திரையுலக பிரபலங்கள் மீது அவதூறு கூறுவதாக தெலுங்கு ஃபிலிம் சேம்பர் அவரது உறுப்பினர் அட்டையை ரத்து செய்தது. இதற்கு தனது எதிர்ப்பை காட்டும் விதமாக நடிகை ஸ்ரீரெட்டி ஃபிலிம் சேம்பர் […]
நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ், காவிரி விவகாரத்தில் நம் அனைவருக்குமான நீதியை வென்றே தீருவோம் என்று ட்வீட் செய்துள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சியினரும் அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 10-ம் தேதி சென்னை அண்ணா சாலையில் ஐபிஎல் மைதானத்தை முற்றுகையிட்டை ஆட்டத்துக்கு இடையூறு ஏற்படுத்தி மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் போராட்டம் நடைபெற்றது. இன்று மோடியின் சென்னை வருகையைக் கண்டித்து சென்னையின் பல்வேறு இடங்களில் அரசியல் கட்சியினர், பல்வேறு […]
கன்னட மக்கள் பொதுவாக அன்பானவர்கள். அவர்கள் வீட்டு சாம்பாரே இனிக்கும். இது பல நாள் அரசியல். கடினம் கடப்போம்; மனிதம் படைப்போம் என்று விவேக் ட்வீட் செய்துள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சியினரும் அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 10-ம் தேதி சென்னை அண்ணா சாலையில் ஐபிஎல் மைதானத்தை முற்றுகையிட்டை ஆட்டத்துக்கு இடையூறு ஏற்படுத்தி மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் போராட்டம் நடைபெற்றது. இன்று மோடியின் சென்னை வருகையைக் […]
இன்று காலை சத்யராஜ் தனது மகன் சிபிராஜ் ட்விட்டர் பக்கத்தில் சத்யராஜ் பேசிய வீடியோ ஒன்றை வெளியிட்டார். இதில் சத்யராஜ் பேசுகையில் எல்லாருக்கும் குடும்பம் இருக்கும் , அன்றாட வருமானத்தை நோக்கி பயணம் இருக்கு, ஆனால் ஒரு பொதுநலனுக்காக சுயநலத்தை தவிர்த்து நமக்காக போராடுகிறார்கள், அவர்களை நான் போற்றுகிறேன், வணங்குகிறேன் என குறிப்பிட்டார். இதனையடுத்து எச் . ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் “பாகுபலி படத்திற்காக கன்னடர்களிடம் மன்னிப்பு கேட்ட மானஸ்தன் இன்று வீடியோ போடுகிறார் என்ற பாணியில் […]
காயத்ரி ரகுராம், பிரதமர் மோடிக்கு எதிராக #GoBackModi ட்விட்டர் டிரெண்டிங்குக்கு காங்கிரஸும், ரம்யாவுமே காரணம் என்று பதிவிட்டுள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கடந்த 1-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றியும் கருப்புச் சட்டை அல்லது கருப்பு பேட்ஜ் அணிந்தும் அரசியல் கட்சியினர், சமூக அமைப்புகளை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்தில் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து #GoBackModi என்ற ஹேஷ்டேக் சமூக […]
பாஜக தேசிய செயலாளர் ஹெச் .ராஜா , ” இராணுவத்தை எதிர்கொள்ள தயங்காத கூட்டம்” என்று ஐ.பி.எல். போட்டிக்கு எதிராகப் போராட்டம் நடத்தியவர்களை விமர்சித்தார். இதற்கு நடிகர் சவுந்தர்ராஜா, “உங்க திறமை கண்டு வியக்கிறேன். வாழ்க ஜனநாயகம், திருப்பி அடிக்கத்தெரியாம இல்ல அடிச்சா தாங்க மாட்டிங்க. வன்முறை தவறு. அதனால் பொறுமை காத்தோம், மனிதநேயத்துடன்” என்று கூறியுள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஹிந்தி நடிகர் ரன்பீர் சிங்கை தொடர்ந்து அடுத்து ஒரு பாலிவுட் பிரபலம் அஸ்டன் மார்ட்டின் காரை வாங்கி இருக்கிறார். அண்மையில் நடந்த ஐபிஎல் துவக்க விழாவில் ஆட்டம் போட்ட கையோடு, புதிய அஸ்டன் மார்ட்டின் ரேபிட் எஸ் காரை டெலிவிரி பெற்றிருக்கிறார் பாலிவுட் நடனப் புயல் ஹிருத்திக் ரோஷன். ரூ.3.90 கோடி எக்ஸ்ஷோரூம் விலை கொண்ட இந்த காரை டெலிவிரி பெற்றதோடு, தனது குடும்பத்தினருடன் அதில் பயணித்து மகிழ்ந்திருக்கிறார் ஹிருத்திக். பொதுவாக பாலிவுட் பிரபலங்கள் கருப்பு அல்லது […]
தமிழ்நாட்டில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த பின்பும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் காலதாமதம் செய்யும் மத்திய அரசைக் கண்டித்து பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில் இன்று சென்னையில் ராணுவத் தளவாட கண்காட்சியைத் துவக்கி வைக்க பிரதமர் மோடி சென்னை வந்துள்ளார். அவருக்கு எதிராக பலரும் கறுப்புக் கொடி ஆர்பாட்டம் நடத்தி வருகிறார்கள். மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கறுப்புச் சட்டை அணிந்து, காணொலி வாயிலாக பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.நான் உங்கள் குடிகமன். இது என் […]
தயாரிப்பாளர்கள் சங்கம் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு திரையரங்க உரிமையாளர்களையும் சந்தித்து திரைத்துறை பிரச்சனை குறித்து விவாதிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. டிஜிட்டல் ஒளிபரப்பு நிறுவனங்களுடனான பேச்சு வார்த்தை தோல்வியில் முடிவடைந்தது கடந்த மார்ச் 1-ம் தேதியிலிருந்து, 1 மாதத்திற்கும் மேலாக புதிய படங்கள் எதனையும் வெளியிடாமல் தயாரிப்பாளர் சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்களுடன் தயாரிப்பாளர்கள் நடத்திய பேச்சு வார்த்தை மீண்டும் தோல்வியில் முடிந்தது. இதனால் தொடரும் போராட்டத்திற்கு விரைவில் முடிவு […]
தெலுங்கு திரையுலகில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது ஸ்ரீ ரெட்டி தொடங்கியுள்ள ஸ்ரீ லீக்ஸ். இதுவரை இரண்டு பிரபலங்கள் சிக்கியுள்ளனர். ராணாவின் தம்பி தன்னை அரசின் ஸ்டுடியோவில் வைத்து பாலியல் உறவு வைத்து கொண்டதாகவும் பலமுறை தன்னை பயன்படுத்தி கொண்டதாகவும் கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார் ஸ்ரீ ரெட்டி. இதனையடுத்து மூன்றாவது ஆளாக சிக்க போவது யார் என்ற தகவல் வெளியாகி இணையத்தில் வைரலாகத் தொடங்கியுள்ளது. ராணாவின் தம்பியின் லீலைகளை தொடர்ந்து பிரபல எழுத்தாளர் ஒருவர் சிக்க […]
மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் காவல்துறையினர் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளார். சென்னை மாநில கல்லூரி ஆண்டுவிழாவில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஐபிஎல் போட்டிக்கு எதிரான போராட்டத்தில் நிகழ்ந்த வன்முறை குறித்த ரஜினிகாந்தின் கருத்தை வரவேற்பதாக தெரிவித்தார். காவிரி பிரச்னையில் வன்முறை எந்த நிலையிலும் தீர்வாகாது என்று கூறிய அமைச்சர் ஜெயக்குமார், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழக எம்.பி.,க்கள் நாடாளுமன்றத்தை அறவழியில் முடக்கியதை சுட்டிக்காட்டினார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் […]
சன்னி லியோனின் – டேனியல் வெபர் திருமணம் செய்துக்கொண்டு 7 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது!தங்கள் திருமண வாழ்வினை நினைவுகூறும் வகையில் சன்னி லியோன் தனது ட்விட்டர் பக்கத்தினில் புகைப்படம் ஒன்றினை பதிவிட்டுள்ளார். இந்த பதிவினிலில் தனது கணவருக்கு செய்தி ஒன்றினை தெரிவிக்கும் வகையில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் பதிவிட்டுள்ளதாவது… “7 ஆண்டுகளுக்கு முன்னர் இறைவன் முன்பு சபதம் ஏற்றதுபோல் இன்றுவரை நாம் ஒற்றுமையாகவும், அன்புடனும் வாழ்ந்து வருகின்றோம். சபதம் ஏற்ற நாள் அன்று தங்கள் மீது கொண்ட […]
சமூக வலைதளங்களில், நடிகர் சிம்புவின் கோரிக்கையை ஏற்று தங்களுக்குப் போக மிஞ்சிய தண்ணீரை தமிழர்களுக்குத் தர சம்மதிக்கும் வகையில் கர்நாடக வாழ் மக்கள் எனக் கூறி சிலர் தண்ணீர் கொடுப்பது போன்ற சில காட்சிகள் பகிரப்படுகிறது. காவிரி பிரச்சனை தொடர்பாக கன்னடர்களின் மனநிலையை பிரதிபலிக்கும் காட்சிகளை இணையதளத்தில் பகிருமாறு நடிகர் சிம்பு கோரிக்கை விடுத்திருந்தார். அவர் குறிப்பிட்ட புதன் கிழமை மாலை 3 மணி முதல் 6 மணிக்குள் சிம்புவின் ரசிகர்களும், கர்நாடக வாழ் மக்கள் எனக் […]
நடிகை கஜால் அகர்வால் தமிழில் சினிமாவில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் மிக பிரபலமான . இவருக்கு பாலிவுட் டில் பெரியளவில் நல்ல நடிகை என்ற பெயர் எடுக்க வேண்டும் என்று நீண்ட நாள் ஆசை இருக்கிறதாம். சமீபத்தில் ஒரு பேட்டியில் உங்களுடன் நடித்த நடிகர்களை பற்றி உங்கள் அபிப்ராயத்தை சொல்லுங்கள் என்று கேட்டதற்கு “என்னிடம் நடித்த மகேஷ் பாபு மிகவும் அமைதியானவர், மற்றவர்களை தன் நகைச்சுவை உணர்வால் சிரிக்கவைத்து சந்தோஷப்படுவார், அல்லுஅர்ஜூன் மிகவும் ட்ரெண்டியான மனிதர், அவர் அணியும் […]
சென்னையில் காவேரி பிரச்சினையை தீர்க்காமல் ஐபிஎல் போட்டி நடைபெற விடமாட்டோம்.நடிகர் சத்யராஜ் ராணுவமே வந்தாலும் தடுப்போம் என அறிவித்திருந்தார். சென்னையில் ஐபிஎல் போட்டி நடைபெற்று முடிந்துவிட்டது. ஐபிஎல் போட்டி இந்தச் சமயத்தில் இங்கு நடைபெறுவதை எதிர்த்து இயக்குனர் பாரதிராஜா, அமீர் உட்பட பலர் களத்தில் இறங்கி போராடினர். ஆனால் எதிர்ப்பு அறிக்கை வெளியிட்ட சத்யராஜ் சேப்பாக்கம் பக்கம் வரவில்லை என்பது திரை உலகில் உள்ளவர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. வரிமான வரிச்சோதனை தான் நடிகர் சத்யராஜின் அமைதிக்கு காரணம் எனக் […]
நடிகை ஸ்ரீரெட்டி பாலியல் சர்ச்சை குறித்து நடவடிக்கை கோரி டாப் லெஸ் போராட்டத்தில் ஈடுபட்டவர். அதற்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. மாறாக கைது செய்யப்பட்டதுடன், நடிகர் சங்கத்தில் அவரது உறுப்பினர் படிவம் நிராகரிக்கப்பட்டது. அவர் குடியிருந்த வீட்டிலிருந்தும் வெளியேற வீட்டு உரிமையாளர் கூறியிருக்கிறார். ஆனாலும் விடாப்பிடியாக முரண்டுபிடித்து வருகிறார் ஸ்ரீரெட்டி. என்னை பாலியல் தொல்லை செய்தவர்களின் பெயர்களை வெளியிடுவேன் என்று மீண்டும் தெரிவித்துள்ளார். ‘தாம் தூம்’ பட ஹீரோயின் கங்கனா ரனாவத் கடந்த ஆண்டு நடிகர் ஹிருத்திக் […]
சட்டமன்ற உறுப்பினர் தனியரசு, ரஜினியை ஒரு பெரிய அரசியல்வாதியாகக் கருதி பதில் சொல்வதே அவமானம் என்று கூறிய அவர் , ரஜினியை அவன் என ஏக வசனத்தில் பேசினார். ரஜினியை ஒரு பெரிய அரசியல்வாதியாகக் கருதி பதில் சொல்வதே அவமானம் என்றும் ரஜினி ஒரு சாதாரண ஆள் – ஒரே ஒரு ஒட்டு, ரஜினி பா.ஜ.க.வுக்கு ஆதரவு – அரசியலில் தியாகம் ஏதும் செய்யவில்லை என்றும் ரஜினியை அவன் என்று ஒருமையில் விமர்சித்தார் தனியரசு. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
இயக்குனர் பாரதிராஜா ,ரஜினிகாந்த் ஒரு முழுநேர அரசியல்வாதியல்ல, அவர் ஒரு பூநாகம் என்று கூறினார். நேற்று ஐபிஎல்லுக்கு எதிரான போராட்டத்க்தில் போலீஸார் தடியடி நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்து தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பாதுகாப்பு குழு அமைப்பின் சார்பில் பாரதிராஜா, சீமான், தமீமுன் அன்சாரி, கருணாஸ், அமீர் உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பாரதிராஜா செய்தியாளர்களிடம் பேசியதாவது:எல்லோருமே உங்கள் பணியை சரியாக செய்தீர்கள் அடி வாங்கினீர்கள் தாக்கப்பட்டார்கள், எனக்கு வருத்தமாக இருந்தது. இன்று கூட பாருங்கள், ஆக்ஷன் […]
மைதானத்தில் ஷூ வீசப்பட்டதை பார்த்த எடிட்டர் ரூபன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஃபாப் டூப்ளசியிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். சென்னையில் நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று போராட்டங்கள் நடைபெற்ற நிலையில், போட்டி நடைபெற்ற மைதானத்தில் காலணிகள் வீசப்பட்டது. சென்னை சேப்பாக்கத்தில் ஐ.பி.எல் போட்டியை காண வந்த ரசிகர்கள் பல்வேறு சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர். மைதானத்திற்கு உள்ளேயும் வெளியேயும், சுமார் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர். போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த போது, பார்வையாளர்கள் […]
மறைந்த நடிகை ஸ்ரீதேவியை கவுரவிக்கும் பொருட்டு ஸ்ரீதேவி விருது உருவாக்கப்பட்டுள்ளது.அவ்விருது முதன்முறையாக நடிகை தமன்னாவுக்கு வழங்கப்பட உள்ளது.ஸ்ரீதேவி விருது தனக்கு கிடைத்தது குறித்து தமன்னா கூறுகையில்,சினிமாவில் நடிக்கத் தொடங்கிய காலத்தில் நான் பெரிதும் வியந்த நடிகை ஸ்ரீதேவி.அவர் பெயரில் வழங்கப்படும் இந்த விருதை பெறுவதில் பெருமை அடைகிறேன். ஸ்ரீதேவியைப் போல நானும் மிகவும் இளம் வயதிலேயே படங்களில் நடிக்க வந்தவள்.சினிமாவில் ஒரு நிலையான இடத்தைப் பெறுவதற்கு நீண்ட கால உழைப்பும் அர்ப்பணிப்பும் தேவை என்று கூறிய தமன்ன […]