தாய்லாந்த்: நடிகர் மாதவனுக்கு வேதாந்த் என்ற மகன் உள்ளார். நீச்சல் கற்றுள்ள வேதாந்த் பல்வேறு நீச்சல் போட்டிகளில் கலந்து கொண்டு திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.இந்நிலையில் தாய்லாந்தில் சிறுவர்களுக்கான சர்வதேச நீச்சல் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் இந்தியா சார்பில் வேதாந்த் கலந்து கொண்டார். 1500 மீட்டர் ப்ரீஸ்டெயில் பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார். இதுகுறித்து நடிகர் மாதவன் தனது டுவிட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.வேதாந்தை நடிகர் நடிகைகள் உட்பட அனைவரும் பாராட்டி வருகின்றனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
கமலஹாசனின் அரசியல் அமைப்புக்கான இணையதளத்தின் பெயர் மாற்றப்பட்டுள்ளது.நடிகர் கமலஹாசன் அரசியல் பணிகளில் தீவிரம் காட்ட தொடங்கியுள்ள நிலையில் மக்களுடன் நேரடி தொடர்புகொள்ள கடந்தாண்டு மய்யம் என்ற பெயரில் இணையதளம் மற்றும் ஆப் தொடங்கியிருந்தார். தற்போது அதன் பெயரை நாளை நமதே என்று மாற்றியுள்ளார். www.naalainamadhe.maiam.com என்ற புதிய இணையதளத்தில் கல்வி, தொழில், சுற்றுச்சூழல், வேளாண்மை, நீர் மேலாண்மை, நிதி உள்ளிட்ட துறைகளில் கருத்துகள், மேம்பாட்டு திட்டங்கள் ஆகியவற்றை பதிவு செய்யலாம் என தெரிவித்துள்ளார். மேலும் “கிராமியமே நமது […]
விஜய் ஆண்டனி நடித்துள்ள “காளி” படத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கம் செய்தது சென்னை உயர்நீதிமன்றம். கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம், உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா இயக்கிய காளி படத்தை வெளியிட தடை விதித்தது. காளி திரைப்படத்தின் தயாரிப்பாளர் விஜய் ஆன்டனி மனைவி பாத்திமா, ஏற்கனவே அண்ணாதுரை என்ற படத்தை தயாரித்திருப்பதாகவும், அதனை வெளியிட்டதில் தமக்கு 5 கோடியே 79 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் கூறி பிக்சர் பாக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் […]
ஐ.பி.எல்லுக்கு எதிரான போராட்டத்தின்போது, சீருடையில் இருந்த காவலர்கள் தாக்கப்பட்டது வன்முறையின் உச்சக்கட்டம் என நடிகர் ரஜினிகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.சென்னை சேப்பாக்கத்தில் நடந்த ஐ.பி.எல்லுக்கு எதிரான போராட்டத்தின்போது, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் மீது, போராட்டக்காரர்கள் சிலர் தாக்குதல் நடத்தினர் இந்த காட்சிகளை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு, நடிகர் ரஜினிகாந்த், கண்டனம் தெரிவித்துள்ளார். வன்முறையின் உச்சக்கட்டமே சீருடையில் பணிபுரியும் காவலர்கள் தாக்கப்படுவதுதான் என்று நடிகர் ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளார்.இத்தகைய வன்முறை கலாச்சாரத்தை உடனே கிள்ளி எறியவில்லை என்றால், நாட்டுக்கே […]
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே சென்னையில் நடந்தகிரிக்கெட் போட்டி இந்தியா முழுவதும் உள்ள மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் போட்டியின் இடையில் போட்டியின் போது, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர் மற்றும் பாலிவுட் நடிகர் ஷாருக்கான், சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனியின் மகளுடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ள படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் செய்திகளுக்கு […]
ஐ.பி.எல். கிரிக்கெட்டுக்கான டெலிவிஷன் தமிழ் வர்ணனையாளர் குழுவில் இடம் பெற்றிருந்த நடிகர் ஆர்.ஜே.பாலாஜி, காவிரி மேலாண்மை வாரியத்துக்கு ஆதரவு அளிக்கும் வகையில் முதலாவது ஆட்டத்தின் போது கருப்பு சட்டை அணிந்து வர்ணனை பணியை கவனித்து வந்த நிலையில் நேற்று சென்னை-கொல்கத்தா அணிகள் இடையிலான ஆட்டத்தின் போது வர்ணனையாளர் பணிக்கு அவர் வரவில்லை. இது குறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்ட வீடியோ பதிவில், ‘காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழகத்தில் தொடர்ந்து போராட்டம் நடந்து வரும் சூழலில், […]
ஆர்.ஜே.பாலாஜி ஐபிஎல் வர்ணனையாளர் வேலையைத் துறந்தது ஏன் என்று வீடியோ பதிவில் விளக்கம் அளித்துள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக ட்விட்டரில் இன்று அவர் வெளியிட்ட வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது,’காவிரி மேலாண்மை வாரியம அமைக்கக் கோரி தமிழகத்தில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வரும் சூழலில்,நேற்று ஐபிஎல் மேட்ச்சில் நான் செய்ய வேண்டிய என் வர்ணனையாளர் வேலையைச் செய்யவில்லை. ஒரு தமிழனாக என் பங்களிப்பு இது. இந்த முடிவை நான் சார்ந்திருக்கும் நிர்வாகத்திற்கு சொல்லும்போது என் […]
வீட்டு வாடகை கூட கொடுக்க முடியாமல் பிரபல நடிகை திஷா பதானி, சிரமப்பட்டதாக சொல்லி அதிர வைத்துள்ளார். கிரிக்கெட் வீரர் டோனியின் வாழ்க்கை படமான ‘டோனி’ திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து பிரபலமானவர் திஷா பதானி. பாலிவுட் நடிகையான இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான இந்திப் படம் ‘பாகி 2’ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. மேலும், சுந்தர்.சி இயக்கத்தில் உருவாக உள்ள ‘சங்கமித்ரா’ படத்திலும் ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் திஷா பதானி. இந்த நிலையில், சினிமாவில் நடிப்பதற்காக வாய்ப்பு […]
நடிகை தமன்னாவை சமீபத்தில் தொடங்கி ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின் தொடக்க விழாவில் பார்த்திருப்பீர்கள் . ரோஸ் கலர் உடையில் வந்து நடனமாடி அசத்தினார். பலரையும் இது கவர்ந்தது. தமிழில் இப்போது ஓரிரு படங்கள் தான் கையில் இருக்கிறது. அண்மையில் அவர் தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகர் வெங்கடேஷ் உடன் புதிய படத்தில் நடிக்க கமிட்டானார். தற்போது அவர் சயிரா ரெட்டி படத்தில் முக்கிய ரோலில் நடிக்க கமிட்டாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராம் சரண் இப்படத்தை ரூ 150 கோடியில் […]
திருவையாறு சென்ற லட்சிய திமுக தலைவரும், நடிகருமான டி.ராஜேந்தர் காவிரி கரையில் முழங்காலிட்டு பாட்டு பாடி வேதனையை வெளிப்படுத்தினார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழகம் முழுவதும் போராட்டம் ஆர்பாட்டம் பேரணி என நடைபெற்றுவரும் நிலையில் திருவையாறு சென்ற நடிகர் டி.ராஜேந்தர் தனக்கே உரிய பாணியில் காவிரியின் நிலைகுறித்து தாயே தாயே தண்ணீரை தாயேன் தாயேன்” – கைகூப்பி காவிரி ஆற்றங்கரையில் டி.ராஜேந்தர் உருக்கமாக பாட்டுப் பாடி வேதனையை வெளிப்படுத்தினார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
234 எம்எல்ஏக்கள், 40 எம்பிக்கள் ஓட்டுபோட்டு அனுப்பியிருக்கிறோம். அனைவரும் ராஜினாமா செய்தால் மொத்த நாட்டின் கவனமும் கிடைக்கும் என்று ஆர்.ஜே.பாலாஜி வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதற்கு முன் இன்று போராட்டத்தின் ஒரு பகுதியாக ஐபிஎல் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தின் கதவை இழுத்து பூட்டு போட்டு தமிழக வாழ்வுரிமை கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். தற்போது சென்னை அண்ணா சாலையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு எதிராக தமிழக வாழ்வுரிமை […]
ஐபிஎல் போட்டிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட பாரதிராஜா, சீமான், வெற்றிமாறன், அமீர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர் . சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டியை சென்னையில் நடத்தக்கூடாது என்ற கோரிக்கை தமிழகத்தில் வலுப்பெற்றுள்ளது. இதற்கிடையில், ஐபிஎல் போட்டிக்கு எதிராக அண்ணா சாலை அருகே மாலை 5 மணிக்கு போராட்டம் நடத்துவோம் என்று பாரதிராஜா உள்ளிட்டோர் தெரிவித்திருந்தனர். இதையடுத்து,ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து அண்ணா சாலை முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் […]
நடிகர் சல்மான் கான் மானை வேட்டையாடிய வழக்கிலிருந்து ஜாமீனில் வெளிவந்துள்ள நிலையில் , தனக்குத் துணையாக நின்ற அனைவருக்கும் நன்றி என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 1998 ஆம் ஆண்டு மானை வேட்டையாடிய வழக்கை விசாரித்து வந்த ஜோத்பூர் நீதிமன்றம், ஏப்ரல் 5 ஆம் தேதியன்று 201 பக்கத் தீர்ப்பை வழங்கியது. வனப் பாதுகாப்பு சட்டத்தை சல்மான் கான் மீறியதாக அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து ஜாமின் கோரி சல்மான் கான் மனு தாக்கல் […]
ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி மறுத்த தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்திற்கு வாழ்த்துகள் என மக்கள் நீதி மைய்யம் தலைவர் கமல்ஹாசன் ட்வீட் செய்துள்ளார். இதற்கு முன் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் சார்பில், ஸ்டெர்லைட் ஆலையின் உரிமத்தைப் புதுப்பிக்கக் கோரி சமர்ப்பித்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் உறுதி செய்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலை, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய நிபந்தனைகளை நிறைவேற்றாததால் ஆலை இயக்க கோரும் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது என தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக […]
தொடர்ந்து தமிழ் அமைப்புகளும், கட்சிகளும் ரசிகர்கள் ஐபிஎல் போட்டியை காண செல்ல வேண்டாம் என வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் அஞ்சி ஒடுங்கி விளையாட்டை ரசிக்க போறியா? ” எனறு நடிகர் ஜி.வி.பிரகாஷ் சமூக வலைத்தளத்தில் கருத்துப்பதிவு செய்து உள்ளார். அடக்கு முறைக்கு அஞ்சி ஒடுங்கி விளையாட்டை ரசிக்க போறியா..? சுதந்திரமா உன் கருத்தை சொல்லமுடியலன்னா விளையாட்டை தவிர்க்க போறியா..?? தடைய தாண்டி தமிழன்னா யாருன்னு ஊருக்கு உரக்க சொல்லப்போறியா..? என டுவிட்டரில் பதிவு செய்து […]
கேத்ரின் தெரேசா தெறி தெலுங்கு ரீமேக்கில், எமி ஜாக்சன் நடித்த கேரக்டரில் நடிக்கிறார். விஜய் நடிப்பில், அட்லீ இயக்கத்தில் ரிலீஸான படம் ‘தெறி’. எமி ஜாக்சன், சமந்தா என இரண்டு ஹீரோயின்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். ஜீ.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். கலைப்புலி எஸ்.தாணு இந்தப் படத்தைத் தயாரித்தார். வருகிற 14 ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸாகி இரண்டு வருடங்கள் ஆகப் போகிறது. இந்தப் படத்தை, தெலுங்கில் ரீமேக் செய்கிறார் சந்தோஷ் ஸ்ரீனிவாஸ். விஜய் கேரக்டரில் ரவிதேஜா நடிக்க, […]
நடிகர் அருண்விஜய் காவிரி விவகாரம் குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் நடிகர் அருண்விஜய் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “தமிழ்நாடே போராட்டக்களத்தில் கொந்தளித்துக்கொண்டிருக்கும் வேளையில், நம் மீது அலட்சியம் ஏன்? நாம் யாரிடமும் கையேந்த வேண்டிய அவசியம் இல்லை! நாம் நம் உரிமையைக் கேட்கிறோம். அதை பெற்றுத்தருவது அவர்களின் […]
நடிகை ஸ்ரீ ரெட்டி பிரபல தயாரிப்பாளர் ஒருவரின் மகன் என்னை கட்டாயப்படுத்தி தன்னுடன் உறவு வைத்துக் கொண்டார் அந்த லீலை போட்டோவை விரைவில் வெளியிடுவேன் என தெரிவித்துள்ளார். தெலுங்கு திரையுலகில் கடந்த சில வாரங்களாக ஸ்ரீ ரெட்டி பெரும் அதிர்ச்சி அலையை உருவாக்கியுள்ளார். அதில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் தற்போது தான் அதிகமாக உள்ளது என்றும் தனக்கு மூவி ஆர்டிஸ்ட் அசோசியேஷன் உறுப்பினருக்கான அடையாள அட்டை வழங்கவில்லை என்று கூறி நடுரோட்டில் அரை நிர்வாண போராட்டம் […]
உச்ச நீதிமன்றத்தில் மலையாள நடிகை பிரியா வாரியருக்கு எதிராக மேலும் இரு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. மலையாளப் பட இயக்குநர் ஒமார் லூலு, ‘ஒரு அடார் லவ்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். படத்தை பிரபலமாக்கும் விதமாக கடந்த பிப்ரவரி மாதம் மாணிக்ய மலராய பாடல் யூடியூபில் வெளியிடப்பட்டது. இந்தப் பாடலில் நடித்திருந்த நடிகை பிரியா பிரகாஷ் வாரியர், புருவங்களை அசைத்தும், கண்ணடித்தும் ரசிகர்களைக் கவர்ந்தார். இந்தப் பாடல் இணையத்தில் வைரலானது. ஆனால் இந்தப் பாடல் நபிகள் நாயகத்தை தொடர்புபடுத்தி […]
கடந்த 8 ஆம் தேதி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும் சினிமாத்துறையினர் சார்பில் கண்டன அறவழிப் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் நயன்தாரா, த்ரிஷா, சமந்தா, கீர்த்தி சுரேஷ் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் கூடக் கலந்து கொள்ளவில்லை. தமிழ் சினிமாவில் 15 வருடங்களுக்கும் மேலாக ஹீரோயினாக நடித்து வருகிறார் நயன்தாரா. இடையில் சில ஏற்ற, இறக்கங்களைச் சந்தித்தாலும், சொந்த வாழ்க்கையில் சறுக்கல்கள் ஏற்பட்டாலும், அவற்றில் இருந்து […]