ஹைதராபாத்தைச் சேர்ந்த நடிகை சுஸ்மிதா சென் இவரை பிரபஞ்ச அழகி என்றும் அழைக்கலாம். இந்த பட்டத்தை வென்ற முதல் இந்திய அழகி இவர் தான். பாலிவுட் ஹீரோயினான இவர் தமிழிலும் சில படங்கள் நடித்திருக்கிறார். தற்போது 42 வயதை எட்டிய சுஸ்மிதா உடற்பயிற்சி செய்து இன்னும் தன்னுடைய உடலை சிக்கென வைத்திருக்கிறார். இவரின் புகைப்படங்கள் அவ்வப்போது சில சர்ச்சைகளை கிளப்புவதும் வழக்கம். இவர் ட்விட்டர் பக்கத்தில் மிகவும் சுறுசுறுப்பாக செயல்படுவார். அந்த வகையில், இவர் தற்போது அவரது […]
பாஜக தமிழக தலைவர் தமிழிசை, தமிழகத்தில் பல அரசியல்வாதிகள் இருந்தாலும், சிலரை நம்மால் மறக்க முடியாது, அப்படி ஒருவர் தான் அவர். ஆம் தமிழ் நாட்டில் பாஜக -வின் தலைவராக இருப்பவர் தான் தமிழிசை. இவர் எவ்வளவு உறுதியாக, இறுக்கமாக பேசினாலும் பலரும் இவரை கிண்டல் செய்வார்கள். இவர் மருத்துவத்திற்கு படித்தவர் என்பதை அவ்வப்போது பேசும்போது கூறுவார். இந்த நிலையில் இவர் மருத்துவம் படிக்கும்போது ரஜினியின் தீவிர ரசிகையாக இருந்திருக்கிறார். அப்போது ரஜினியை வெறித்தனமாக காதல் செய்ததாகவும், இன்றும் […]
பாலிவுட் திரையுலகில் கொடிக்கட்டி பறப்பவர் ரன்வீர் சிங். இவர் நடிப்பில் கடைசியாக வந்த பத்மாவத் படம் கூட ரசிகர்களிடம் செம்ம வரவேற்பை பெற்றது.இந்நிலையில் ரன்வீர் சிங்கிற்கு என பெரியளவில் பெண் ரசிகைகள் உள்ளனர். இந்நிலையில் நடிகர் ரன்வீர் சிங்குக்கு ‘தாதா சாகிப் பால்கே’ விருது அறிவித்துள்ளது. பத்மாவத் திரைப்படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக மத்திய அரசு கவுரவித்துள்ளது. ரன்வீர் சிங்குக்கு விருதை கடிதம் மூலம் அறிவித்தது தேர்வுக்குழு. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை உயர் நீதிமன்றம் , உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா இயக்கிய காளி படத்தை வெளியிட தடை விதித்துள்ளது. காளி திரைப்படத்தின் தயாரிப்பாளர் விஜய் ஆன்டனி மனைவி பாத்திமா, ஏற்கனவே அண்ணாதுரை என்ற படத்தை தயாரித்திருப்பதாகவும், அதனை வெளியிட்டதில் தமக்கு 5 கோடியே 79 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் கூறி பிக்சர் பாக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அலெக்சாண்டர் வழக்குத் தொடர்ந்திருந்தார். இழப்பு தொகையைத் தராமல் காளி படத்தை வெளியிட தடைவிதிக்க வேண்டும் எனவும் அவர் கோரியிருந்தார். […]
பூஜா ஹெட்ஜ் தமிழில் மூகமூடி படம் மூலம் அறிமுகமானவர் தான். மொத்தமாகவே சில படங்கள் மட்டுமே நடித்த இவர், தமிழில் ஒரே ஒரு படம் தான் நடித்துள்ளார்.தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் தான் அதிக படம் நடித்துள்ளார். மிஸ் இந்தியா பட்டம் வாங்க முயற்சி செய்த இவருக்கு தோல்வி தான் கிடைத்தது. ஆனால் மிஸ் யூனிவெர்ஸ் போட்டியில் இரண்டாவது இடம் பெற்றுள்ளார். இன்றைய சினிமா நட்சத்திரங்கள் அவ்வப்போது சில புகைப்படங்கள் எடுத்து இணையத்தில் பதிவு செய்வது வழக்கமாகவே இருக்கிறது. […]
ஜேம்ஸ் பாண்ட் படங்களில் நடித்துவரும் பியர்ஸ் ப்ராஸ்னனை ரஜினி படத்திற்கு பின் கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ள படத்தில் நடிக்கவைக்க முயற்சிகள்நடைபெற்று வருகிறது. தற்போது ரஜினிகாந்த் நடிக்கவுள்ள படத்தின் ஆரம்பகட்ட பணிகளில் ஈடுபட்டுவருகிறார். கடந்த ஆண்டு தனுஷை கதாநாயகனாகக் கொண்டு புதிய படத்தில் ஹாலிவுட் நடிகர்கள் அல் பசீனோ, ராபர்ட் டி நீரோ ஆகியோரை முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவைக்க பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டது. தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்புப் பணியில் ஈடுபட்டது. ஆனால் அந்த நிறுவனம் விஜய்யின் மெர்சல் படத்தில் […]
எ;ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடித்து மிகப்பெரிய வெற்றியடைந்த திரைப்படம் கஜினி . இப்படம் தமிழில் மட்டுமல்லாமல் இந்தியில் அமீர்கான் நடித்து அங்கும் மிகப்பெரிய வெற்றியடைந்தது. அந்த படத்தையும் எ.ஆர்.முருகதாஸ் தான் இயக்கி இருந்தார். இப்படம் ஹாலிவுட் படமான மெமென்டோ படத்தின் தழுவல் என்று பின்னாளில் தான் தெரியவந்தது. அந்த படத்தை இயக்கிய கிரிஸ்டோபர் நோலன் இந்தியாவிற்கு வந்தபோது அது பற்றி கேட்கப்பட்டது. அப்போது பேசிய நோலன், நானும் மெமென்டோ படத்தின் தழுவல் பற்றி கேள்விப்பட்டேன். இந்திய ரசிகர்களின் […]
ரஜினிக்கு ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக பக்கபலமாய் இருப்பதாக ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தமிழகம் வரும் பிரதமருக்கு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து திமுகவுடன் இணைந்து காங்கிரஸ் கருப்புக்கொடி காட்டும் என தெரிவித்தார். தலித் மக்களுக்கு பாஜக, ஆர்.எஸ்.எஸ் அநீதி இழைக்கின்றன என்றும் ஈவிகேஎஸ் இளங்கோவன் குற்றம்சாட்டினார். தலித் மக்களுக்கு காங்கிரஸ் மட்டும்தான் பாதுகாப்பானதாக இருக்கும் என்றும் அவர் கூறினார். மேலும் […]
சினிமாத்துறையினர் நேற்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடவேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். தென்னிந்திய நடிகர் சங்கம் முன்னெடுத்த இந்தப் போராட்டத்தில், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், ஃபெப்சி உள்ள சினிமா அமைப்புகள் பின்னர் இணைந்து கொண்டன.வள்ளுவர் கோட்டம் அருகே காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், கமல், ரஜினி, விஜய், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, ஜெயம் ரவி, […]
காமன்வெல்த் போட்டியில் இந்திய வீரர்கள் பதக்கங்களை குவித்து வருகின்றனர். இது இந்திய மக்களுக்கு பெருமையான தருணங்களை தருகிறது. மேலும், இந்தியர்களை மேலும் சந்தோஷப்படுத்தும் விதத்தில் நடிகர் மாதவனின் மகன் வேதாந்த், சர்வதேச அளவில் நீச்சல் போட்டியில் டபதக்கம் வென்று அசத்தியுள்ளார். தாய்லானது நாட்டில் சர்வதேச அளவில் நீச்சல் போட்டிகள் நடைபெற்றது. அதில் இந்தியா சார்பில் நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் கலந்து கொண்டு பதக்கம் வென்றார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள் .
பிரபல பாலிவுட் நடிகர் நவாஸுதீன் சித்திக் கார்த்திக் சுப்பாராஜ் படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்கிறார். பிரபுதேவா நடிப்பில் தற்போது ‘மெர்க்குரி’ படத்தை இயக்கியுள்ளார் கார்த்திக் சுப்பாராஜ். சைலண்ட் த்ரில்லர் படமான இது, ஏப்ரல் 13-ம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் ஒரு படத்தை இயக்க இருக்கிறார் கார்த்திக் சுப்பாராஜ். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படம், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் வேலை நிறுத்தப் போராட்டம் முடிந்த பிறகு தொடங்க […]
கடந்த ஒருவாரமாக ஒரு சில இயக்குனர்கள், நடிகர்கள் மீது டோலிவுட் நடிகை ஸ்ரீரெட்டி பாலியல் தொல்லை புகார் கூறி வருகிறார். இயக்குனர் சேகர் கம்முலா மீது அவர் புகார் கூறியபோது அதற்கு அவர் பதிலடி தரும் வகையில், ‘என் மீது புகார் கூறினால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்’ என்றார். அதற்கு பதில் அளித்த ஸ்ரீரெட்டி, ‘சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள தயார். என்னிடம் ஆதாரம் உள்ளது’ என்றார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் ‘நான் ஈ’ நடிகர் ஒருவரைப்பற்றி புகார் கூறினார் ஸ்ரீரெட்டி. […]
இயக்குநர் பாரதிராஜா தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெயரை மாற்றும்வரை எந்த நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ள மாட்டேன்’ என சபதம் ஏற்றுள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் சினிமாத்துறையினர் சார்பில் நேற்று கண்டன அறவழிப் போராட்டம் நடைபெற்றது. சென்னை, வள்ளுவர் கோட்டம் அருகே காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், முக்கியமான பலர் கலந்து கொள்ளவில்லை. இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த இயக்குநர் […]
நடிகை காஜல் அகர்வால் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை ஆவார் . இவர் பாலிவுட்டிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். இருந்தாலும் தமிழ் சினிமாவில் இவருக்கு நல்ல வரவேர்ப்பு கிடைத்தது. இவர் தமிழ் சினிமாவில் அஜித், விஜய், தனுஷ் போன்ற பிரபல முன்னனி நடிகர்களுடன் நடித்துள்ளார். தமிழ் திரையுலகில் இவருக்கு ரசிகர் கூட்டம் அதிகம். இந்நிலையில் காஜல் அகர்வால் சமீபத்தில் ஒரு விருது விழா ஒன்றில் கலந்து கொண்டார். அந்த விழாவிற்கு அவர் காஜல் மிகவும் கவர்ச்சியாக உடை […]
நடிகை ரெஜினா தமிழில் அறிமுகமானபோது, ‘எந்த சூழ்நிலையிலும் கவர்ச்சி காட்டி நடிக்க மாட்டேன்’ என்று சொன்னார். இதனால் அவருக்கு எதிர்பார்த்தபடி நல்ல வாய்ப்புகள் அமையவில்லை. எனவே, தெலுங்குக்கு சென்றார். அங்கு அவர் நடித்த படங்களில் கிளாமர் அதிகமாக இருந்தது. திடீரென்று அவர் தன் கொள்கையை மாற்றிக்கொள்வதற்கு நிறைய புது நடிகைகளின் வரவும், அவர்களின் தாராளமய கவர்ச்சிக் கொள்கையும்தான் என்பது ரசிகர்களுக்குப் புரிந்தது. இனி கவர்ச்சி காட்டி நடிக்காவிட்டால், புதுப்பட வாய்ப்புகள் பெறுவது எளிதான விஷயம் இல்லை என்ற […]
தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பாலியல் தொந்தரவு கொடுப்பதாக சமீபத்தில் சமூக வலைதளத்தில் குற்றம்சாட்டி இருந்தார். அத்துடன் பாலியல் தொல்லை கொடுக்கும் திரைப் பிரபலங்களின் பெயர் பட்டியலை ஸ்ரீ லீக்ஸ் என்ற முகநூல் பக்கத்தில் வெளியிடுவேன் என்றும் தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் தெலுங்கு திரையுலகில் சர்ச்சை ஏற்படுத்தியிருந்தது. இந்த விவகாரத்தில் பிரபல தெலுங்கு டைரக்டர் சேகர் கம்முலு மீது மறைமுக குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. ஆனால் குற்றச்சாட்டுகளை சேகர் மறுத்துவிட்டார். அவர் […]
எனக்கு அரசியல் ஆர்வம் இல்லை, தமிழக மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன்,ஐடி வந்தால் எதுவும் தேறாது என்று நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார். எனக்கு அரசியல் ஆர்வம் இல்லை, தமிழக மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன் என்றும் ஐடி வந்தால் எதுவும் தேறாது என்று நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார்.காவிரி பிரச்னை உள்ள சூழலில் தமிழகத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்த வேண்டாம்.மேலும் போராட்ட மன நிலையில் உள்ள இளைஞர்களை ஐபிஎல் மூலம் திசைதிருப்ப முயற்சி நடக்கிறது என்றும் சத்யராஜ் தெரிவித்தார். […]
நடிகர் சிம்பு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு தமிழகத்திற்கு சூனியம் பிடித்தது போல் உள்ளது, என கூறியுள்ளார்.சென்னையில் நடிகர் சிம்பு கூறியதாவது:இன்று, காலையில் நடிகர் சங்கம் சார்பில் நடந்த மவுன போராட்டத்தில், நான் கலந்து கொள்ளவில்லை. நிறைய பிரச்னை சென்று கொண்டுள்ளது. தமிழ் சினிமா ஸ்டிரைக்கில் உள்ளது. யாருக்கும் வேலையில்லை. ஒரு காரணத்திற்காக நடக்கிறது. இதற்கு குறை சொல்லவில்லை. நடிகனாக இதற்கு ஒத்துழைப்பு அளிக்கிறேன். ஜி.எஸ்.டி.,யிலிருந்து ஸ்டிரைக் வரை பல பிரச்னைகள் உள்ளன. இதற்கு அரசிடமிருந்து […]
கர்நாடகாவை சேர்ந்த நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத். இவர் கன்னடத்தில் யூ-டர்ன் என்ற படத்தில் நடித்து பிரபலமானார். அதன் பிறகு தமிழில் இவன் தந்திரன், விக்ரம் வேதா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் அவர் தற்போது Milan Talkies என்ற பாலிவுட் படத்தில் நடித்து வருகிறார். அதில் அவருக்கு கல்லூரி நடிகை வேடம். இந்நிலையில் தமிழில் நடித்துவிட்டு ஹிந்தியில் நடிப்பது பற்றி கேட்டதற்கு “எனக்கு பெரிய வித்யாசம் தெரிகிறது. இங்கு (பாலிவுட்டில்) இருப்பவர்கள் அதிக ஒழுக்கமாகவும், திறமையானவர்களாகவும் இருக்கின்றனர்” […]
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்கி வருகிறார் தல அஜித். பொதுவாக அஜித் எந்தவொரு பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள மாட்டார் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். அப்படியிருந்தும் ஜல்லிக்கட்டு போராட்டம் போன்ற பிரச்சனைகளில் நடிகர் சங்கம் நடத்திய போராட்டங்களில் கலந்து கொண்டார். அதேபோல் இன்று காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும் ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரியும் நடந்த போராட்டத்திலும் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அஜித் கலந்து கொள்ளவில்லை. இது […]