தென்னிந்திய நடிகர் சங்கம், ஃபெப்ஸி, தயாரிப்பாளர் உள்ளிட்ட திரையுலக சங்கங்கள் ஒன்றுகூடி வள்ளுவர் கோட்டத்தில் இன்று காலை 10 மணி முதல் பிற்பகல் வரை போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தில் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஷால், சூர்யா, விஜய், அஜித், உள்ளிட்ட திரையுலக நட்சத்திரங்கள் கலந்துகொள்வார்கள் என ஏற்கெனவே நாசர் தெரிவித்திருந்தார். டிஜிட்டல் கட்டணம் மற்றும் திரையரங்க உரிமையாளர்களுக்கு எதிராக திரைத்துறையினர் வேலை நிறுத்தம் செய்துவரும் நிலையில், காவிரி மேலாண்மை அமைக்க வலியுறுத்தியும், […]
பிக்பாஸ் மூலம் அனைவரிடத்திலும் நல்ல வரவேற்பை பெற்றவர் பரணி. வெள்ளந்தி மனிதராக அறியப்பட்ட இவர் தற்போது நாடோடிகள் 2 உட்பட சிலபடங்களில் நடித்து வருகிறார். இவரிடம் உங்களை சமீபத்தில் கோபப்படுத்திய விஷயம் என்னவென்ற கேள்விக்கு இரண்டு சம்பவம் என்னை கோபப்படுத்தி சோகத்தை வரவைத்தது. பாரம்பரிய நெல்லை பாதுகாத்து வைத்திருந்த நபர் ஒருவர் வேறுவழியின்றி அதை அடமானம் வைத்து குடும்பத்தை நடத்தவேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்ட சம்பவம். இதைக்கேள்விப்பட்டு ஒரு விவசாயியின் நிலைமை இப்படி இருப்பதை கண்டு அன்று இரவு […]
ஐதராபாத்தில் உள்ள மூவி ஆர்ட்டிஸ்ட் அசோசியேசன் எதிரில் தெலுங்கு நடிகையான ஸ்ரீ ரெட்டி நடிகை ஸ்ரீ ரெட்டி அரை நிர்வாண போராட்டம் நடத்தி போலீசாரால் கைது செய்யப்பட்டார். ஒரு சில தெலுங்கு சினிமாக்களில் நடித்துள்ள ஸ்ரீ ரெட்டி, சில காலமாக தெலுங்கு திரைப்பட ஹீரோக்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் ஆகியோர் மீது குற்றம் சாட்டி பேட்டி அளித்து வருகிறார். தெலுங்கு திரை உலகில் நடிகைகள் ஜாதி பிரச்சனை, பாலியல் தொல்லை ஆகியவற்றை சந்திக்க வேண்டிய நிலை உள்ளது. மேலும் கதாநாயகர்கள் […]
நடிகர் சல்மான்கானுக்கு மான் வேட்டையாடிய வழக்கில் ஜாமீன் வழங்கியது ஜோத்பூர் நீதிமன்றம் . மூன்றாவது மான் வேட்டை வழக்கில் சல்மான்கானுக்கு ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜோத்பூர் நீதிமன்றம் கடந்த வியாழன் அன்று 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. ஜோத்பூர் சிறையில் நடிகர் சல்மான் கான் அடைக்கப்பட்டார். அவர் தரப்பில் உடனடியாக தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு, நீதிபதி ரவீந்திர குமார் ஜோஷி முன்பு வெள்ளி அன்று விசாரணைக்கு வந்தது. சனிக்கிழமையும் மனுவை விசாரித்த நீதிபதி ரவீந்திர குமாரை, சல்மான் […]
தமிழ் சினிமாவில் தற்போது கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாத அளவிற்கு ஏகப்பட்ட பிரச்சனைகள் இருக்கிறது. நடிகர் விஷால் நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் என எல்லா இடத்திலும் பொறுப்பு ஏற்ற பிறகு நிறைய பிரச்சனைகளை சந்தித்து வருகிறார். தற்போது முழு ஸ்ட்ரைக் என்பதால் பல பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தொழில்நுட்ப சங்கத்தின் பொதுச் செயலாளர் தனபால், விஷால் மீது பல குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். விஷால்-செல்வமணி கூட்டணியோடு சில தவறுகளை செய்து வருகிறார்கள், அவர்களாலே தங்களது தொழிலாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள். இப்படியே இவர்கள் […]
தமிழகம் முழுவதும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தியும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகவும் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில், இந்த விவகாரங்களில் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நாளை (ஏப்ரல் 8) காலை 9 மணி முதல் 1 மணி வரை அறவழி கண்டன போராட்டம் நடத்தப்பட உள்ளது. போராட்டத்தின் முடிவில், நடிகர் சங்கத்தின் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது. இந்த […]
35 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் சவுதியில், வரும் 18 ஆம் தேதி முதல் திரையரங்குகள் திறக்கப்படுகின்றன. இதன் தொடக்கமாக ரியாத் நகரில் 600 சொகுசு இருக்கைகளைக் கொண்ட (AMC Theater) ஏஎம்சி திரையரங்கம் வரும் 18 ஆம் தேதி திறக்கப்பட்டு, அங்கு பிளாக் பாந்தர் (Black Panther) என்ற ஆங்கிலத் திரைப்படம் திரையிடப்படுகிறது. அடுத்த 5 ஆண்டுகளுக்குள் கூடுதலாக 40 திரையரங்குகள் கட்டபப்படும் எனவும், 2030 ஆம் ஆண்டுக்குள் திரையரங்குகளின் எண்ணிக்கையை 100 ஆக அதிகரிக்க சவுதி அரசு […]
இன்று நடிகர் சல்மான் கானின், ஜாமீன் மனு விசாரணை நடைபெறவிருந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி இடமாற்றம் செய்யப்பட்டார். மான்களை வேட்டையாடிய வழக்கில், சல்மான் கானுக்கு ஜோத்பூர் நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதையடுத்து, ஜோத்பூர் மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டார். ஜாமீன் கோரி, அவர் தாக்க செய்த மனுவின் விசாரணையை ஜோத்பூர் நீதிமன்றம், இன்றைக்கு ஒத்திவைத்தது. இந்நிலையில், சல்மான் கான் ஜாமீன் மனுவை விசாரிக்கும் நீதிபதி உள்பட 87 நீதிபதிகள் அங்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். […]
நடிகர் சல்மான் கான் மான் வேட்டையாடிய வழக்கில் சிக்கிய பின்னர் கடந்த 9 ஆண்டுகளில் ராஜஸ்தானில் மான்களின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் அரிய வகை மானான ‘கலைமானை’ வேட்டையாடியதாக சல்மான் கானுடன் மேலும் 4 நடிகர் நடிகைகள் மீது 1998ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. கலைமான் என்பது பாதுகாக்கப்பட்ட ஒரு மான் இனமாகும். இந்த வழக்கில், இந்தி திரைப்பட நடிகர் சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 10,000 ரூபாய் அபராதம் […]
நடிகர் சல்மான்கான் ஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், கொலை மிரட்டல் வந்ததை அடுத்து, அவருக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. அரிய வகை மான்களை வேட்டையாடியதாகத் தொடரப்பட்ட வழக்கில் 5 ஆண்டுகள் சிறை தண்டனைபெற்ற சல்மான்கான் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு தொடர்பாக சல்மான்கான் சிறையில் அடைக்கப்படுவது இது 4வது முறை. அவருக்கு 106 என்கிற கைதி எண் கொடுக்கப்பட்டுள்ளது. பாலியல் பலாத்கார வழக்கில் தண்டனை பெற்று கடந்த 2013ம் ஆண்டு முதல் […]
கன்னடர் பட்டியலில் ரஜினி பெயரை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் சேர்த்துள்ளார். இது குறித்து நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், ராஜ்குமார், சரோஜா தேவி, அம்பரீஷ் ஆகியோர் பெயர்களை குறிப்பிட்டதோடு விடாத கமல்ஹாசன், ரஜினிகாந்த் பெயரையும் கன்னடத்துக்காரர்கள் பட்டியலில் சேர்த்துள்ளார். ரஜினிகாந்த் அரசியலில் இறங்கிவிட்டதாக கூறியதுமே, அவர் கன்னடர் என விமர்சனங்கள் வந்தன. ரஜினிகாந்த் தரப்போ, ரஜினியின் மூதாதையர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வசித்ததாக கூறி வருகிறது. ஆனால், கமல்ஹாசனோ, ரஜினிகாந்த்தை கன்னடர் என குறிப்பிட்டுள்ளார். […]
நடிகை தமன்னாவிற்கு மும்பையில் நாளை துவங்கவுள்ள ஐபிஎல் போட்டியில் துவக்கவிழாவில் நடனமாட ரூ.50 லட்சம் சம்பளம் பேசப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் உள்ளூர் வீரர்களின் திறமையை வளர்க்கும் விதமாக ஆண்டுதோறும் நடத்தப்படும் ஐபிஎல் போட்டியின் துவக்க விழாவில் எப்பொழுதும் திரையுலக நட்சத்திரங்கள் வந்து நடனமாடி ரசிகர்களை உற்சாகப்படுத்துவர். இதற்காக அவர்களுக்கு பெரிய தொகை ஒன்று அளிக்கப்படும். அந்த வகையில் இந்த வருடத்திற்கான 11-வது ஐபிஎல் தொடர் நாளை மும்பையில் துவங்க உள்ளது. இதன் துவக்க விழாவில், ஹிருத்திக் ரோஷன், […]
நடிகர் சல்மான் கான், இருபது ஆண்டுகளுக்கு முன், மான் வேட்டையாடிய வழக்கில் 5 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற நிலையில், சிறையில் இரவு முழுவதும் அமைதி இன்றி தவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ‘ஹம் சாத் சாத் ஹெயின்’ என்ற ஹிந்தி படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக, நடிகர்கள் சல்மான் கான், சயீப் அலி கான், நடிகைகள் தபு, நீலம், சோனாலி பிந்த்ரே ஆகியோர் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூருக்கு கடந்த 1998-ம் ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி சென்றிருந்தனர். அன்றைய […]
பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே, எனக்கு இப்போதும்கூட அந்தக் கூச்சம் இருக்கிறது. ஆனால், அதைக் கையாளும் வழிமுறைகள் இப்போது எனக்குத் தெரிந்திருக்கின்றன என்று கூறியுள்ளார். வெற்றிகள் நம்மை வாழ்க்கையின் உச்சிக்குக் கொண்டு செல்லும்போதுதான் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏற்கெனவே திரையுலகில் வெற்றியாளராக அறியப்பட்ட தீபிகா படுகோனே ‘பத்மாவத்’ வெற்றிக்குப் பின் புகழ் உச்சியில் மேலும் ஒரு அடி முன்னேறிச் சென்றிருக்கிறார். வெற்றியின் உச்சம், திரைக்கதை தேர்வு, திருமணத்துக்குப் பின் நடிப்பது என பல்வேறு விஷயங்கள் […]
பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப் பாலிவுட் நடிகர் சல்மான் கான் சிறுபான்மையினர் என்பதால் அவருக்கு இந்தியாவில் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். ‘ஹம் சாத் சாத் ஹெயின்’ என்ற இந்தி படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக, நடிகர்கள் சல்மான் கான், சயீப் அலி கான், நடிகைகள் தபு, நீலம், சோனாலி பிந்த்ரே ஆகியோர் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூருக்கு கடந்த 1998-ம் ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி சென்றிருந்தனர். அங்கு ஜோத்பூரை ஒட்டிய கங்கனி கிராமத்தில் […]
கமல் நடித்த படங்கள் தவிர்த்து பிற ஹீரோக்கள் நடித்த படங்களையும் கமல்ஹாசனின் ராஜ்கமல் இண்டர்நேஷ்னல் பட நிறுவனம் அவ்வப்போது தயாரித்துள்ளது. சத்யராஜ் நடித்த கடமை கண்ணியம் கட்டுப்பாடு, மாதவன் நடித்த நளதமயந்தி, நாசர் நடித்த மகளிர் மட்டும் ஆகிய படங்களைத்தொடர்ந்து விக்ரம் நடிக்கும் படம் ஒன்றையும் தயாரிக்க உள்ளது. கமல்ஹாசனிடம் கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் உதவியாளராகப் பணியாற்றிய ராஜேஷ் எம் செல்வா, இந்தப் படத்தை இயக்க உள்ளார். ‘தூங்காவனம்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான இவர் இயக்கும் இரண்டாவது […]
கர்நாடகாவில் இருந்து தண்ணீர் கேட்டால் துணை வேந்தர் வந்திருக்கிறார் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இந்நிலையில் சென்னை அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக கர்நாடக மாநிலத்தைச்சேர்ந்த சூரப்பா என்பவரை நியமித்திருக்கும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆளுநரின் செயல் தமிழகத்தின் தன்மானத்தின் மீது தாக்குதல் நடத்தும் வகையில் இருப்பதாக முகநூல் பதிவில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். காவிரிப் பிரச்சினை கொழுந்து விட்டு எரிகின்ற […]
சீரியல்கள் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு ஒரு முக்கியமான விஷயம். வீட்டில் என்ன வேலை செய்கிறார்களோ இல்லையோ, சீரியல்களை மட்டும் பார்ப்பதை தவிர்க்க மாட்டார்கள். அந்த வகையில் ரசிகர்களின் மனதில் பெரிய இடம் பிடித்திருக்கும் சீரியல் சரவணன்-மீனாட்சி. இந்த சீரியலில் அண்மையில் வந்த சில காட்சிகளை மக்கள் மீம்ஸ்கள் போட்டு மிகவும் கலாய்த்துவிட்டனர். இதுகுறித்து நடிகர் ரியோ கூறுகையில், இப்படி ஒரு காட்சி வரப்போகிறது என்பது எனக்கே தெரியாது. மீம்ஸ்கள் பார்க்கும் போது அதை இயக்குனரிடம் காட்டி சிரிப்பேன் […]
சல்மான்கானின் ஜாமீன் மனு மீதான உத்தரவை நாளைக்கு ஒத்திவைத்தது ஜோத்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. சல்மான்கான், ‘ஹம் சாத் சாத் ஹெயின்’ என்ற இந்திப்படத்தில் நடிப்பதற்காக கடந்த 1998-ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் சென்றிருந்தார். அக்டோபர் 1-ந்தேதி இரவு இவர் வாகனம் ஒன்றில் அங்குள்ள காட்டுப்பகுதிக்கு சென்றார். அவருடன் நடிகர் சயீப் அலிகான், நடிகைகள் தபு, சோனாலி பிந்த்ரே, நீலம் ஆகியோரும் வாகனத்தில் இருந்தனர். அவர்கள் கங்காணி கிராமப்பகுதியில் சென்ற போது ‘பிளாக்பக்’ எனப்படும் அரிய வகை […]
சினிமாவுக்கு வந்து 20 வருடங்கள் ஆனதால் நடிகை ஐஸ்வர்யாராய் அவரை சமூக வலைத்தளங்களிலும் நேரிலும் பலரும் வாழ்த்துகிறார்கள். முன்னாள் கதாநாயகி ரேகாவும் வாழ்த்து கடிதம் அனுப்பி உள்ளார். இவருக்கும் அமிதாப்பச்சனுக்கும் காதல் ஏற்பட்டு கடைசியில் பிரிந்து விட்டதாக அந்த காலத்தில் கிசு கிசுக்கள் வெளியானது. இதனால் அமிதாப்பச்சன் மனைவி ஜெயாபச்சனுக்கும் ரேகாவுக்கும் மனதுக்குள் தீராத பகை உள்ளது என்றும் பொதுமேடையில் சந்தித்துக்கொண்டாலும் பேசாமல் முகத்தை திருப்பிக்கொண்டு சென்று விடுவார்கள் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ஐஸ்வர்யாராய்க்கு ரேகா கடிதம் […]