நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது தமிழ், தெலுங்கு என பிசியாக இருக்கிறார். இரு மொழிகளிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். சீக்கிரம் ரசிகர்கள் வட்டாரத்தை சம்பாதித்து விட்டார். ஆனால் படத்தில் இவரின் சில ரியாக்ஷனை சிலர் கிண்டல் செய்யத்தான் செய்கிறார்கள். தற்போது பிரபல நடிகயான சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கிறார். மகாநதி என்னும் இப்படத்தில் அண்மையில் சீனியர் நடிகை பானு பிரியா டப்பிங்க்கு குரல் கொடுத்தார்கள். படத்தில் அவருக்கு யாருக்கு பின்னணி குரல் கொடுத்தார் என்பது […]
ஒரு தமிழ் படத்தை எடுத்து அதனை எந்த வித பிரச்னையும் இல்லாமல் திரைக்கு கொண்டுவந்து ஓட வைப்பதற்குள் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் நொந்து நூடுல்ஸ் ஆகி விடுகின்றனர். இதில் இணையத்தில் படம் வெளியாகிவிட்டால் கூடுதல் சிக்கல். மேலும் கதையும் திரைக்கதையும் நன்றாக இருந்தாலும் விளம்பரபடுத்தினால் தான் படமே மக்கள் கண்ணில் போய் சேர்க்கிறது. இந்த நிலைமையில் தற்போது நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்க பொறுப்பில் உள்ள விஷாலுக்கு இது பொல்லாத காலம். தற்போது கியூப் பிரச்சினையின் […]
தமிழ் சினிமாவில் என்னென்ன பிரச்சனைகள் வந்தது என்பது நமக்கே தெரியும். தற்போது பிரச்சனைகள் இன்னும் முடியாமல் பல போராட்டங்கள் நடந்து வருகிறது. அதன் முதற்கட்டமாக தயாரிப்பாளர் சங்கம் சினிமா ஸ்ட்ரைக் என்பதை தாண்டி படப்பிடிப்பு கூட நடக்க கூடாது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளும் நிறுத்த வேண்டும் என்று கூறியிருந்தனர். இதனால் பல படங்களின் படப்பிடிப்புகள் பாதியிலேயே நிற்கிறது, அஜித்தின் விசுவாசம் படத்திற்காக செட் போட்டப்பட்ட நிலையில் படப்பிடிப்பு தொடங்கவில்லை. இந்த நிலையில் விஜய்யின் 62வது படத்தின் படப்பிடிப்பு […]
மௌனி ராய் நாகினி என்ற ஒரே ஒரு சீரியல் மூலம் ஹிந்தியை தாண்டி தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் . இவர் அந்த சீரியலுக்கு பிறகு சினிமாவில் படங்களில் நடிக்கும் வேலைகளில் பிஸியாக இருக்கிறார். இதற்கு நடுவில் மௌனி ராயும் நடிகர் மோஹித்அவர்களும் காதலிப்பதாக நிறைய செய்திகள் வந்தன. ஆனால் அவர்களுடைய காதல் பற்றி தெளிவான விவரம் எதுவும் இல்லை. தற்போது மௌனி ராய் பிரம்மாஸ்ரா என்ற படத்தில் நடித்து வருகிறார். அப்படத்தை இயக்கும் அயன் முகர்ஜியுடன் மௌனி ராய் நிறைய நெருக்கமான புகைப்படங்கள் எடுத்து சமூக […]
சினிமாவை பொறுத்த வரை தற்போதெல்லாம் பாலிவுட் படங்களுக்கு செம்ம போட்டி கொடுக்கின்றது. அந்த வகையில் பாகுபலி சீரியஸ் வெற்றியை நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. இந்த நிலையில் தென்னிந்திய சினிமாவில் அதிகம் வசூல் செய்த படங்கள் எது என்பதன் லிஸ்ட் இதோ… பாகுபலி2- ரூ 1750 கோடி பாகுபலி- ரூ 650 கோடி கபாலி- ரூ 289 கோடி எந்திரன்- ரூ 286 கோடி மெர்சல்- ரூ 254 கோடி இதில் பாகுபலி, கபாலி, எந்திரன் […]
மாதவன் தமிழில் நடித்தது சில படங்கள் என்றாலும் இன்னும் மனதில் ஆழப்பதிந்திருக்கும். அலைப்பாயுதே முதல் சமீபத்தில் வந்த விக்ரம் வேதா வரை அவரின் முக்கிய படங்கள் பல உண்டு. பாலிவுட் பக்கம் சென்றுவிட்ட அவர் ஹிந்தி படங்களில் நடிக்க ஆர்வம் காட்டினாலும் அவ்வப்போது தமிழிலும் தலைகாட்டி வருகிறார்.தற்போது அவர் இஸ்ரோ விஞ்ஞானியின் படத்தில் நடிக்கிறார். ஓய்வு பெற்ற மூத்த விஞ்ஞானியான நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாறுபடமாக்கப்படுகிறது. இதில் மாதவன் நம்பியாக நடிக்கிறார். இதற்கு அந்த விஞ்ஞானி, மாதவன் என் கேரக்டரை […]
புதுக்கோட்டை ஆலங்குடியில் பெரியார் சிலை உடைக்கப்பட்டது காட்டுமிராண்டித்தனமானது என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார். தந்தை பெரியாரின் சிலை புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உடைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே அமைக்கப்பட்டிருந்த தந்தை பெரியாரின் சிலை ஒன்று மர்ம நபர்களால் நேற்றிரவு கடுமையாக சேதப்படுத்தப்பட்டுள்ளது. அவருடைய சிலையில், பெரியார் தலைப்பகுதி முழுவதுமாக உடைக்கப்பட்டிருந்தது. இச்சம்பவத்தை கண்டித்து, சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திராவிடர் கழகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே, சிலையில் துண்டிக்கப்பட்ட தலைப்பகுதி மீண்டும் […]
இமயமலையிலிருந்து சென்னை திரும்பிய ரஜினி ஆன்மிக பயணம் சிறப்பாக இருந்ததாக கூறியுள்ளார் . நடிகர் ரஜினிகாந்த் விரைவில் அரசியல் கட்சி தொடங்க உள்ள நிலையில், தனது ஆன்மிக குருக்களிடம் ஆசி பெறவும், பாபாவை வழிபடவும் இமயமலைக்கு சென்றார். தனது ஆன்மிக சுற்றப் பயணத்தை முடித்து கொண்டு இன்று சென்னை திரும்பியுள்ளார்.இந்நிலையில் கட்சி பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றை அவர் முடிவு செய்து விட்டு வந்திருப்பதாக கூறுகிறார்கள்.மாவட்ட வாரியாக ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். சென்னை, கோவை, திருப்பூர், […]
நடிகர் ரஜினிகாந்த் விரைவில் அரசியல் கட்சி தொடங்க உள்ள நிலையில், தனது ஆன்மிக குருக்களிடம் ஆசி பெறவும், பாபாவை வழிபடவும் இமயமலைக்கு சென்றார். தனது ஆன்மிக சுற்றப் பயணத்தை முடித்து கொண்டு இன்று மாலை சென்னை திரும்புகிறார். கட்சி பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றை அவர் முடிவு செய்து விட்டு வந்திருப்பதாக கூறுகிறார்கள்.மாவட்ட வாரியாக ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். சென்னை, கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட நிர்வாகிகள் தேர்வு வருகிற 5 நாட்களுக்கு நடக்கிறது. இது […]
“இந்திய மற்றும் உலக சினிமாவில் கதாநாயகர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் தருகிறார்கள். அவர்கள் பக்கத்தில் நின்று காதலிப்பதற்கும் சுற்றி வந்து கவர்ச்சியாக அரைகுறை உடையில் நடனம் ஆடுவதற்கும்தான் நடிகைகளை பயன்படுத்துகிறார்கள். இந்த ஆணாதிக்கத்தை ஒழிக்க வேண்டும் என்று பாலிவுட்டின் முன்னணி நடிகை வித்யாபாலன் கூறியுள்ளார். பாலிவுட் சூப்பர்ஸ்டார் சஞ்சய் தத் உடன் முன்னா பாய் எம்.பி.பி.எஸ். படத்தின் மூலமாக பெரிய நட்சத்திர அந்தஸ்தை பெற்றவர் நடிகை வித்யாபாலன். சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த இவர் ”எல்லா நடிகைகளுக்கும் திறமைகள் ஒழிந்து கிடக்கிறது. […]
நடிகை ஸ்ரேயா மற்றும் ஆண்ட்ரே கோஷ்சீ திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் ரஜினி,அஜீத்,விஜய்,விக்ரம் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்த ஸ்ரேயாவிற்கு திருமணம் ஆகிவிட்டது என்று ட்விட்டர்,பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் சில நாட்களாக செய்தி பரவி வந்தது. நடிகை ஸ்ரேயா ரஷ்யாவை சேர்ந்த தொழில் அதிபரும், டென்னீஸ் வீரருமான ஆண்ட்ரே கோஷ்சீவை திருமணம் செய்துகொண்டார் எனக் கூறப்பட்டது. ஆனால், அவரது திருமணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் தெரிவிக்கப்படவில்லை. […]
நடிகர் விஜய்-முருகதாஸ் படத்தின் வேலைகள் சென்னையில் நடந்து வந்தது. தற்போது தமிழ் சினிமாவில் அறிவிக்கப்பட்ட முழு ஸ்ட்ரைக்கால் படப்பிடிப்பு எல்லாம் பாதியில் நிற்கின்றன. இதற்கு நடுவில் இப்படத்தின் கதை விவசாயத்தை பற்றியும், கத்தி படத்துடன் தொடர்புடையது என்றும் சமீப நாட்களாக செய்திகள் வருகின்றன. உண்மையில் விஜய்யின் 62வது படம் விவசாயம் பற்றிய கதை இல்லையாம், அதோடு கத்தி, துப்பாக்கி இரண்டு படத்திற்கு இந்த படத்திற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை என்று படக்குழு தரப்பில் கூறப்படுகிறது. விவசாயம் போன்ற கதைக்களம் இல்லை […]
தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர் எப்படியோ அதே போல ஆந்திராவில் கலக்கி முதல்வரானவர் நடிகர் என்.டி.ஆர். அவரது வாழ்க்கையில் 2வது மனைவியாக வந்த லட்சுமி பார்வதியால் பல்வேறு அதிர்ச்சி தரும் திருப்பங்கள் நிகழ்ந்தது. பெரும் சர்ச்சைகளையும் ஏற்படுத்திய இவரது வாழ்க்கை சரித்திரத்தை படமாக்கவிருப்பதாக சர்ச்சை இயக்குனர் ராம் கோபால் வர்மா கடந்த வருடம் அறிவித்து பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிட்டார். இப்படத்தை தயாரிக்க எவரும் முன்வராத நிலையில் அரசியல்வாதி ஒருவர் தயாரிக்க முன்வந்திருப்பதாக இயக்குனர் தெரிவித்தார். தற்போது அதற்கு மறுப்பு […]
நடிகர் தனுஷின் 3 படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார் ஐஸ்வர்யா தனுஷ் . இந்த படம் தோல்வியடைந்ததை தொடர்ந்து வை ராஜா வை படத்தை இயக்கினார். சினிமா சண்டைக்கலைஞர்களை வைத்து சினிமா வீரன் என்ற ஆவணப்படத்தை இயக்கினார். சமீபத்தில் பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பன் வாழ்க்கையை படமாக இயக்கவுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் அதை கிடப்பில் போட்டுவிட்டு இப்போது பேய் படம் ஒன்றை இயக்கவுள்ளாராம். அமானுஷ்ய கதைகளின் பின்னணியில் உருவாகும் இப்படத்தை தனுஷ் தயாரிக்கவுள்ளார். நடைபெற்றுவரும் நடிகர், நடிகைகளின் தேர்வு […]
உடல்நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் சசிகலாவின் கணவரும், புதிய பார்வை ஆசிரியருமான ம.நடராசன் மரணமடைந்தார். இதனையடுத்து, அவரின் உடல் எம்பார்மிங் செய்யப்படுவதற்காக போரூர் தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது. எம்பார்மிங்க்கு பின், சென்னை பெசன்ட் நகரில் உள்ள அவரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.பெசன்ட் நகர் வீட்டில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது மறைவிற்கு என் சகோதரரை இழந்துவிட்டேன் என நடராசன் மரணத்திற்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார் . மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
நடிகர் ரஜினிகாந்த் திராவிட நாடு தொடர்பான கேள்விக்கு பதில் அளிக்க மறுத்து விட்டார். இமயமலைக்கு ஆன்மிக சுற்றுலாப்பயணம் சென்றுள்ள அவர் இன்று உத்தராகண்ட் மாநிலம் அல்மோராவிற்கு சென்றார். அங்கு பாபாஜி குகைக் கோயிலில் வழிபாடு நடத்திய ரஜினிகாந்த், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஏன் எங்கு போனாலும் கூடவே வருகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார். பின்னர் திராவிட நாடு தொடர்பாக கேள்வி கேட்ட போது, இது அரசியல் கேள்வி என்றும் இதற்கு பதில் அளிக்க முடியாது என்றும் கூறி விட்டு […]
நடிகை பானுப்ரியா தற்போது படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களிலும், சின்னத்திரையில் சில வேடங்களை ஏற்றும் நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் அவர் நடிகைகளுக்கு டப்பிங்’கும் பேசி வருகிறார் என்பது தற்போது தெரியவந்துள்ளது. அந்த வகையில், தற்போது அப்படியொரு வாய்ப்பை ஏற்றிருக்கிறார். பழம்பெரும் நடிகை சாவித்ரி வாழ்க்கை படம், ‘நடிகையர் திலகம்’ பெயரில் உருவாகிறது. சாவித்ரி வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். முக்கிய வேடத்தில் சமந்தா நடிக்கிறார். மேலும் விஜய் தேவர கொண்டா, துல்கர் சல்மான், நாக சைதன்யா, பிரகாஷ் […]
பிளாக் பாந்தர் திரைப்படம் உலக அளவில் பிரம்மாண்ட வசூல் சாதனை படைத்து வருகிறது. இதுவரை இந்த படம் $1.1 பில்லியனுக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இந்நிலையில் இந்த படம் 2009ம் ஆண்டு வெளிவந்த அவதார் படத்தின் ஒரு முக்கிய சாதனையை சமன் செய்துள்ளது. 5 வாரங்களாக தொடர்ந்து பிளாக் பாந்தர் வசூலில் முதலிடத்தில் இருப்பது தான் அந்த சாதனை. அவதார் படத்திற்குமுன் 1999ல் வெளியான The Sixth Sense என்ற படம் தான் இந்த சாதனையை படைத்திருந்தது. […]
மறைந்த பிரபல நடிகை ஸ்ரீவித்யா ரஜினி உட்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். கடந்த 2006ம் ஆண்டு அவர் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு திடீரென இறந்தார். தற்போது ஸ்ரீவித்யா வருமான வரி துறைக்கு செலுத்தவேண்டிய பாக்கியை வசூலிக்க அவரது வீடு ஏலம் விடப்படுகிறது. 1.14 கோடி மதிப்புள்ள அவரின் அபார்ட்மென்ட்டை ஏலம் விடுவதன் மூலம் வரும் பணம் கடன் மற்றும் வருமான வரி துறைக்கு செலுத்தப்படும். மீதம் இருக்கும் தொகை மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை பராமரித்து வரும் […]
நடிகை அனுஷ்கா பாகுபலி படத்தின் மூலம் மிக உயர்ந்த இடத்தை பிடித்து விட்டார். ஹீரோயின்களில் அதிக சம்பளம் வாங்குபவர்களில் இவரும் ஒருவர். அடுத்த வந்த பாகமதி படமும் இவருக்கு நல்ல பெயரை கொடுத்து விட்டது. இந்நிலையில் அவருக்கு அடுத்தடுத்து படங்கள் ஏதும் இல்லை. காரணம் அவர் நல்ல கதைகளை மட்டுமே எதிர்பார்ப்பது தானாம். சிறுவயதில் புராணம், சரித்திர கதைகளை அதிகம் படிப்பாராம். மேலும் கற்பனை கதைகளை கூட அவருக்கு மிகவும் பிடிக்குமாம். இதனால் எப்போதும் கற்பனை உலகிலேயே மிதப்பாராம். அதில் […]