நடிகை நடாஷா சூரி அண்மையில் இந்தோனேஷியா சென்றுள்ளார். அங்கு கடை திறப்பு விழா முடிந்தவுடன் பங்கி ஜம்பிங் செய்ய ஆசைப்பட்டிருக்கிறார். பங்கி ஜம்பிங் செய்யும்போது துரதிர்ஷ்டவசமாக அவரது கயிறு பாதியிலேயே அறுந்து விழுந்துள்ளது. பங்கி ஜம்பிங் செய்தது ஆற்றை ஒட்டிய இடம் என்பதால் கயிறு அறுந்தவுடன் தலைகீழாக ஆற்றின் உள்ளே விழுந்துள்ளார். தற்போது அவர் இந்தோனேஷியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 24 மணி நேரத்திற்கு நடாஷா மருத்துவர்களின் நேரடி கண்காணிப்பில் தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டுள்ளாராம்.
சினிமாவை பொறுத்தவரை எப்போதும் வசூல் என்றால் முன்னணி நடிகர்களின் படங்களாக தான் இருக்கும். அதை தாண்டி ஷங்கர், மணிரத்னம் போன்ற இயக்குனர்கள் படங்கள் மக்களிடையே எளிதில் சென்றடையும். ஆனால், பாலிவுட்டில் புதுமுகங்கள் மட்டுமே நடித்து Luv Ranjan என்பவர் இயக்கத்தில் வெளிவந்த Sonu Ke Titu Ki Sweety என்ற படம் உலகம் முழுவதும் ரூ 135 கோடி வரை வசூல் செய்துவிட்டதாம். முன்னணி நடிகர்கள் படங்களே பாக்ஸ் ஆபிஸில் தடுமாற, இப்படி புதுமுகங்கள் நடித்த படம் வசூல் சாதனை படைப்பது எல்லோருக்கும் ஆச்சரியம் தான். […]
ரஜினிகாந்த் நடிப்பில் காலா திரைப்படம் கோடைகால விடுமுறை முன்னிட்டு வெளிவரவுள்ளது. இப்படத்தில் ரஜினி ஸ்லம் ஏரியா வில் வாழும் காட்பாதராக நடித்துள்ளார். இந்நிலையில் காலா திரைப்படத்தின் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஒளிபரப்பு உரிமைத்தை 75 கோடிக்கு ஸ்டார் நிறுவனம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் தனுஷ் நிறுவனத்திடமிருந்து 125 கோடிக்கு லைக்கா நிறுவனம் காலா திரைப்படத்தை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது
நடிகர் விஜய் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து வருகின்றது. கோலிவுட்டில் ஸ்ட்ரைக் நடந்து வருவதால் அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளது, புதுப்படங்கள் ரிலிஸ் செய்வது இல்லை. அதே நேரத்தில் யாரும் படப்பிடிப்பிற்கு செல்லவும் கூடாது என்று கூறப்பட்டது, ஆனால், தளபதி-62 படம் ஸ்பெஷல் அனுமதி வாங்கி படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர். இப்படி ஸ்ட்ரைக் சொல்லியும் படப்பிடிப்பு நடத்துவதை காமெடி நடிகர் கருணாகரன் ‘ஸ்ட்ரைக் இருக்கு ஆனா, இல்லை’ என்று கமெண்ட் செய்து கலாய்த்துள்ளார்.
சமந்தா தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு சினிமாவிலும் மிக பிரபலமான நடிகை. நாகார்ஜூனா மகன் நாகசைதன்யாவை திருமணம் செய்து கொண்டு சிறிது மாதம் ஓய்வுஎடுத்தார் . ஆனால் திருமணத்துக்கு பிறகும் சமந்தாவிற்கு அதிக படவாய்ப்புகள் வந்துள்ளது. குறிப்பாக சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படமான மகாநதி படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த நிருபர் வேடத்தில் நடித்துள்ளார் சமந்தா. இந்த படத்தை பற்றி கூறுகையில், சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்தது மிகவும் பெருமை படும் விஷயமாக கருதுகிறேன் என் கூறினார். அதுமட்டுமில்லாமல் இந்த […]
தமிழ் சினிமா தற்போது சோதனை காலத்தை கடந்து வருகிறது. கடந்த 20 நாட்களுக்கு மேலாக எந்த புதுப்படங்களும் வெளிவரவில்லை, அதுமட்டுமில்லாமல் திரைப்பட படப்பிடிப்புகளும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரபல மூத்த இயக்குனர் எஸ்.பி முத்துராமன் தற்போதைய தமிழ் சினிமாவின் நிலைமையை பற்றி கூறுகையில், தமிழ் திரைப்படத்துறை தற்போது கவலைக்கிடமாக உள்ளது. கிட்டத்தட்ட அவசர சிகிச்சை பிரிவில் இருந்து, உயிருக்கு போராடும் நிலையில் தான் உள்ளது. இன்னும் கொஞ்சம் விட்டால் மொத்த உயிரும் போய்விடும் போல. அதனால் இத்துறையை காப்பாற்ற மத்திய, […]
தமிழில் பிரபல தொலைக்காட்சியில் ஆர்யாவுக்கு பெண்பார்க்கும் படலத்தை எங்க வீட்டு மாப்பிளை என்ற நிகழ்ச்சியின் மூலம் ஒளிபரப்பி வருகின்றனர். இன்று இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சாந்தனு அவரது மனைவி கீர்த்தி வந்தனர். ஆர்யாவுக்காக கலந்துகொண்டுள்ள பெண்களை நன்கு அறிந்து அவர்களில் ஒருவருக்கு ஆர்யாவுடன் டேட் கொண்டாட வழிவகுத்து தந்தனர். இதில் ஸ்வேதா என்கிற பெண்ணை தேர்ந்தெடுத்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் ஆத்தங்கரை மரமே பாடலைக்கேட்டதும் நினைவுக்கு வருபவர் நடிகர் விக்னேஷ் . கிழக்கு சீமையிலே, பசும்பொன் உள்ளிட்ட படங்களின் மூலம் பிரபலமானவர் ஒரு கட்டத்துக்கு மேல் வாய்ப்புகள் இல்லாததால் அதிக படங்களில் நடிக்க வில்லை. படம் தயாரித்து நஷ்டம் ஆனதால் குடும்பத்தில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. பின்னர் அந்த பிரச்சனை தீர்ந்து விட்டதாம். தற்போது மீண்டும் பா.விஜய் இயக்கத்தில் ஆருத்ரா என்ற படத்தில் நடித்து வருகிறார். ஆனால் இவரது அம்மா சில வருடங்களுக்கு முன்பு காணாமல் போய்விட்டாராம். […]
சின்ன அம்மா என அழைக்கப்பட்ட சசிகலாவின் கணவர் நடராஜன் உடல்நலக்குறைவால் நேற்று மரணமடைந்தார். இவரது மறைவுக்கு தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரான பாரதிராஜா உருக்கமான இரங்கலை தெரிவித்துள்ளார். அதில் தமிழ் ஈழ விடுதலைப்போராளிகளுக்கு ஆதரவுக்கரம் நீட்டியவர் என்றும், முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னம் அமைத்ததில் முக்கியபங்கு வகித்தவர் என்றும் கூறியுள்ளார். அரசியல் சாணக்யன் என்று ராஜிவ் காந்தியால் பாராட்டப்பட்டவர், 25 ஆண்டு காலம் சந்நியாசியாக வாழ்ந்தவர், அரசியலில் உச்சத்திற்கு வர வாய்ப்பிருந்தும் விரும்பாமல் தமிழ்நாட்டை முப்பது ஆண்டுகாலம் இயக்கியவர் என்றும் […]
சமீப காலமாக இந்தியப் படங்களுக்கு சீனா நாட்டில், பெரும் மவுசு இருந்து வருகிறது. சென்ற ஆண்டு சீனாவில் வெளியான ஆமீர்கான் நடித்த ‘தங்கல்’ படம் சுமார் 1500 கோடிக்கும் மேல் வசூலானது .சல்மான் கானின், ‘பஜ்ரங்கி பைஜான்’ சில வாரங்களுக்கு முன் வசூல் 200 கோடியை தாண்டியது. அரசியல் சூழ்நிலை காரணமாக ‘பாகுபலி 2’ படம் சீனாவில் வெளியிட முடியவில்லை.தற்போது ‘பாகுபலி 2’ படத்திற்கு சென்சார் கிடைத்துவிட்டதால், படத்தின் முதல் பாகத்தை வெளியிட்ட நிறுவனமே இரண்டாவது பாகத்தையும் ரிலீஸ் செய்ய […]
விஜய் தற்போது துப்பாக்கி,கத்தியைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்நிலையில், தற்போது சினிமாவை சார்ந்த அனைவரும் ஸ்ட்ரைக்கில் இருக்கும் போது, விஜய் படம் மட்டும் விக்டோரியா ஹாலில் ஸ்பெஷல் அனுமதி வாங்கி எடுக்கப்பட்டு வருகின்றதாம். இதனையறிந்த இயக்குனர் வெங்கடேஷ் ‘ஸ்ட்ரைக்கில் கூட பாகுபாடா’ என்று கோபமடைந்துள்ளார். மேலும், தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்த பதிவினையும் அவர் செய்துள்ளார். இயக்குனர் வெங்கடேஷ் ‘பகவதி’, ‘சாக்லேட்’ போன்ற படங்களை இயக்கியுள்ளார்,அதுபோல அங்காடி தெரு படத்தில் துணிக்கடை […]
தனியார் கல்லூரி நிர்வாகம் நடிகை பிரியா வாரியாரைப் போல கண்ணடிப்பவர்கள் மீது ஒரு வருட சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளதால் மாணவிகள் அதிர்ச்சியில் உள்ளனர். ஒரு அடார் லவ்’ மலையாள படத்தின் ‘மாணிக்ய மலராய பூவி’ பாடல் சமீபத்தில் வெளியானது. அந்தப் பாடலில் இடம்பெற்றிருக்கும் பிரியா பிரகாஷ் வாரியர் ட்ரெண்டாகி வருகிறார். இதில் நடித்துள்ள பிரியா வாரியர் செய்யும் கண் மற்றும் புருவ அசைவுகள் வீடியோ வெளியான சில நாட்களிலேயே சமூக வலைதளங்களில் எண்ணிக்கை லட்சங்களை எட்டியது.பிரியா […]
தமிழ் பட தயாரிப்பாளர் சங்க ஸ்டிரைக்கால் நயன்தாரா அஜித்தின் விசுவாசம் படத்திற்கு கால்ஷீட் கொடுத்திருந்தார் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் விசுவாசம் படத்திற்கு கொடுத்திருந்த கால்ஷீட்டை நயன்தாரா சிரஞ்சீவி நடிக்கும் சயீரா நரசிம்ம ரெட்டி படத்திற்கு கொடுத்துவிட்டாராம். இந்நிலையில் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம் ‘தமிழக திரையரங்கு உரிமையாளர்களின் போராட்டம் தொடரும்’ என முதல்வர் பழனிச்சாமியை சந்தித்த பின்னர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இசைஞானி இளையராஜா, தொல்லியல் ஆய்வாளர் நாகசாமி, யோகா பயிற்சியாளர் நானாம்மாள் உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகளை வழங்கி கெளரவித்தார். தலைநகர் டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில், பத்ம விருதுகள் வழங்கும் விழா, நடைபெற்றது. குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டவர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவித்தார். இசைஞானி இளையராஜாவுக்கு, குடியரசு தலைவர் பத்ம […]
தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம் ‘தமிழக திரையரங்கு உரிமையாளர்களின் போராட்டம் தொடரும்’ என முதல்வர் பழனிச்சாமியை சந்தித்த பின்னர் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் 8 சதவீத கேளிக்கை வரியை முற்றிலுமாக ரத்துசெய்ய வேண்டும், வருடத்துக்கு ஒருமுறை புதுப்பிக்கும் தியேட்டர் லைசென்ஸை 3 வருடங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்கும் வகையில் மாற்றியமைக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து இன்று மனு அளித்தனர். சென்னை கிரீன்வேஸ் […]
சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கவிருக்கும் ‘விசுவாசம்’ படத்தின் படப்பிடிப்பு தயாரிப்பாளர்கள் ஸ்டிரைக் முடிந்தவுடன் தொடங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இந்த படத்திற்கு இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியிருக்கும் டி.இமான் அவரது இசை பணியை துவக்கி விறுவிறுப்பாக பணியாற்றி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில், பிரபல கிட்டார் இசைக்கலைஞரான கெபா ஜெரோமியா ‘விஸ்வாசம்’ படத்திற்காக சில டியூன்களை தயார் செய்திருப்பதாகவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ரஜினி கடந்த மார்ச் 10ம் தேதி இமயமலைக்கு புறப்பட்டார். இந்நிலையில் 10 நாட்களுக்கு பிறகு சென்னை திரும்பியுள்ளார். சென்னை திரும்பிய ரஜினி செய்தியளர்களை சந்தித்து பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “விஸ்வ இந்து பரிஷத் ரத யாத்திரை மதக்கலவரத்துக்கு இடம் தரக்கூடாது. என் பின்னால் பாஜக இல்லை, கடவுள் மட்டுமே இருக்கிறார்” என்று தெரிவித்துள்ளார். மேலும், பெரியார் சிலை உடைப்பு குறித்து கண்டனம் தெரிவித்த அவர், திரைத்துறை மட்டுமல்ல வேறெந்த துறையும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் நிலை […]
பெரியார் என்பவர் தனி மனிதரல்ல, தன்மானமுள்ள தமிழினத்தின் அடையாளம்! ஒன்றை உடைத்தால் ஆயிரமாய், இலட்சமாய் முளைத்து எழுவார்கள்! உடைத்தெறிய உனக்கு வலுவிருந்தால், இறுதியாய் நாள்,நேரம்,இடம் குறித்து விட்டு வா! உன்னை சந்திக்க பெரியாரின் பேரப்பிள்ளைகள் நாங்கள் தயார்! என உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
நடிகர் ஆர்யா தற்போது தனியார் தொலைக்காட்சியில் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சி நடத்தி வருகிறார். இதில் இறுதியில் வெற்றி பெறும் பெண்ணை ஆர்யா திருமணம் செய்வார் என சொல்லப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியை சுற்றி சில சர்ச்சைகள் இருந்து வருகிறது. பெண்களின் மாண்பை சிதைப்பதாகவும், கலாச்சாரத்தை கெடுப்பதாகவும் இருப்பதாக கூறி மதுரையை சேர்ந்த ஜானகியம்மாள் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு தடை விதிக்க கோரி அவர் மனு தாக்கல் செய்துள்ளார். மதுரை உயர்நீதிமன்றத்தில் இது […]
நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது தமிழ், தெலுங்கு என பிசியாக இருக்கிறார். இரு மொழிகளிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். சீக்கிரம் ரசிகர்கள் வட்டாரத்தை சம்பாதித்து விட்டார். ஆனால் படத்தில் இவரின் சில ரியாக்ஷனை சிலர் கிண்டல் செய்யத்தான் செய்கிறார்கள். தற்போது பிரபல நடிகயான சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கிறார். மகாநதி என்னும் இப்படத்தில் அண்மையில் சீனியர் நடிகை பானு பிரியா டப்பிங்க்கு குரல் கொடுத்தார்கள். படத்தில் அவருக்கு யாருக்கு பின்னணி குரல் கொடுத்தார் என்பது […]