ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து கொண்டிருக்கும் நமது சூப்பர் ஸ்டார் படமான ‘காலா’ வரும் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது என்று தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் டீஸர் எப்போது வரும் என்று காத்திருந்த ரஜினி ரசிகர்களுக்கு ஓர் சந்தோஷமான செய்தி. இப்படத்தின் டீஸர் வரும் மார்ச் 1ம் தேதி வெளியாகவுள்ளது என்று இப்படத்தின் தயாரிப்பாளரான தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதோ அவருடைய பதிவு உங்களுக்காக https://twitter.com/dhanushkraja/status/967248545169289217 The news you have all been […]
தமிழக திரையுலகில் முன்னனி கதாநாயகியாக வலம் வருபவர் த்ரிஷா. அண்மை காலமாக அவர் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை மட்டுமே நடித்து வருகிறார். இவரது நடிப்பில் ‘மோகினி’ படம் வெளியாக தயாராகவுள்ளது. மேலும் அரவிந்தசாமியுடன் நடித்துள்ள சதுரங்க வேட்டை இரண்டாம் பாகம் பட வேலைகளும் இறுதி கட்டத்தில் உள்ளது. 1818, கர்ஜனை, 96 ஆகிய மேலும் 3 படங்களும் கைவசம் உள்ளன. இந்நிலையில் தற்போது த்ரிஷா மிக ஆக்ரோஷமாக பாக்சிங் கற்றுக்கொள்ளும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் […]
‘நக்க்ஷத்ரா மூவி மேஜிக்’ தயாரிப்பில் கிரண் சந்த் எழுதி இயக்கியுள்ள படம் ‘களரி’. இதில் கிருஷ்ணா, வித்யா பிரதீப் மற்றும் பலர் நடித்து வருகின்றனர். விவி பிரசன்னா இசையமைக்கும் இப்படத்தின் டீசர் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. இதோ அந்த டீஸர் பதிவு https://youtu.be/PHD-oLbLd8s
நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படத்தினை நாக் அஸ்வின் இயக்கி வருகிறார். சாவித்திரி வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். பத்திரிகை நிருபராக சமந்தா நடிக்கிறார். திரையில் சாவித்திரியின் வாழ்க்கையை அவர் விவரித்துச் சொல்வது போல் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இப்போது அனுஷ்கா முக்கிய வேடமான மறைந்த பழம்பெரும் நடிகை பானுமதி கேரக்டரில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளாராம். மேலும், ஜெமினி கணேசன் கேரக்டரில் துல்கர் சல்மான், நாகேஸ்வரராவ் வேடத்தில் அர்ஜுன் ரெட்டி, ஹீரோ விஜய் தேவரகொண்டா, எஸ்.வி.ரங்காராவ் கேரக்டரில் மோகன்பாபு […]
நமது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ‘காலா’, ‘2.0’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் அவர் அரசியல் பணிகளையும் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் ரஜினியின் அடுத்த படத்தினை கார்த்திக் சுப்புராஜ் இயக்குவதாகவும், ‘சன் பிச்சர்ஸ்’ அந்த படத்தினை தயாரிக்க போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் இது குறித்த அதிகாரபூர்வ தகவல் ஏதும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
விஜய் இயக்கத்தில் நாக ஷவுர்யா, சாய் பல்லவி, ஆர்.ஜே.பாலாஜி மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘கரு’. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு, சி.எஸ்.சாம் இசையமைத்துள்ளார். கரு கலைத்தலினை மையமாக வைத்து எடுக்கப்படும் படம் இது. இந்நிலையில் இப்படத்தின் இசை நாளை வெளியிடப்படுவதாக படக்குழு அறிவித்துள்ளது.
பி.ஆர். விஜயலக்ஷ்மி இயக்கத்தில் டோவினோ தாமஸ், பியா பஜ்போல் ஆகியோர் ஜோடியாக நடித்துள்ள ரொமான்டிக் காதல் கதையினை கொண்ட படம் ‘அபியும் அனுவும்’. இப்படம் வரும் மார்ச் மாதம் வெளிவரவுள்ள நிலையில், தற்போது இப்படத்தின் ட்ரைலர் தற்போது இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதோ அந்த ட்ரைலர் உங்களுக்காக https://youtu.be/_-bnFRu1u_Q
பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் ‘சீமராஜா’. இப்படத்தில் இசையமைப்பாளாராக இமான் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இவர்களது கூட்டணியில் ஏற்கனவே ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’ ஆகிய படங்கள் வெளியாகி இமான் இசையில் ஸ்ரேயா கோஷல் பாடி, அந்த மெலடி பாடல்கள் பெரும் ஹிட் அடித்தது. அதே போல், தற்போது சீமராஜா படத்திலும் ஒரு மெலோடி பாடல் இடம்பெற்றுள்ளதாம். அந்த பாடலையும் ஸ்ரேயா கோஷல் தான் பாடியுள்ளாராம். இது குறித்த அறிவிப்பினை இமான் அவர்கள் தனது […]
1996ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் , மனிஷா கொய்ராலா மற்றும் ஊர்மிளா தொண்ட்கர் நடிப்பில் வெளிவந்த படம் இந்தியன். இப்படத்தின் இரண்டாம் பாகத்தை ஷங்கர் இயக்கவுள்ளார்.மேலும், இப்படத்தில் அஜய் தேவ்கன் ஒரு முக்கிய வேடத்தில் இணைய போவதாக கூறப்படுகிறது. இதற்கான பேச்சு வார்த்தைகள் நடந்துவருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.மேலும், இப்படத்தில் நயன்தாரா நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
‘ஒரு அடார் லவ்’ என்கிற மலையாளப் படத்தில் இடம்பெற்ற பாடல் தொடர்பாக நடிகை பிரியா வாரியர் மீது வழக்குப் பதியவோ, நடவடிக்கை எடுக்கவோ கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ‘ஒரு அடார் லவ்’ என்கிற மலையாளப் படத்தில் வரும் ‘மணிக்கய மலரய பூவே’ என்ற பாடல் அண்மையில் இணையதளத்தில் வெளியாகி பெரும் சக்கை போடு போட்டு வருகிறது. இந்த பாடல் காட்சியில் இடம்பெற்ற, நடிகை பிரியா வாரியரின் கண் அசைவுகள், முக பாவனைகள் பெரும் வரவேற்பைப் […]
ஒரு அடர் லவ் படத்தின் பிரியா வாரியார் நடித்த மற்றொரு பாடல் காட்சியின் ஆடியோ வெளியாகியுள்ளது. ஆனால் இந்தப் பாட்டில் பிரியாவை புகழ்பெறச் செய்த அந்த அழகான புருவம் உயர்த்தும் ஸ்டைல் இடம் பெறுகிறதா இல்லையா என்பது தெரியவில்லை. ஆடியோவுடன் வீடியோவும் வெளியானால்தான் இதற்கு விடை தெரிய வரும். பிரியா தனது இணையப் பக்கத்தில் இந்தப் பாடலின் சிறிய பகுதி ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்தப் பாடல் முழுவதையும் பார்க்க இணைய ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் செய்திகளுக்கு […]
தனது கண்ணசைவால் இளைஞர்களின் இதயத்தை கலக்கி வரும் மலையாள நடிகை ப்ரியா வாரியர் மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஒரு அடார் லவ் என்ற படத்தின் மாணிக்க மலரே பாடல் சமீபத்தில் வெளியானது. இதில் நடிகை பிரியா வாரியார் புருவ அசைவாலேயே இளம் இதயங்களைத் துள்ள வைத்தது சமூக வலைதளங்களில் வைரலானது. இதனிடையே ப்ரியா வாரியர் மீதும், அந்த பாடலை உருவாக்கிய குழுவினர் மீதும் ஐதராபாத் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதில் அந்த பாடலில் இடம்பெற்றுள்ள வரிகள் […]
நடிகை அமலாபால் பிரைவேட் பார்ட்டிக்கு தன்னை அணுகிய விபச்சாரக் கும்பல் தொடர்பான அனைத்து விவரங்களையும் போலீசார் வெளியிட வேண்டும் என நடிகை அமலாபால் வலியுறுத்தியுள்ளார். தமிழ், மலையாள திரையுலகில் முன்னணி நடிகையான அமலா பால் வெளியிட்டுள்ள அறிக்கையில், மலேசிய நிகழ்ச்சிக்காக, சென்னை தியாகராயர் நகர் பகுதியில் உள்ள தனியார் நடன பள்ளி ஒன்றில் ஜனவரி 31ஆம் தேதி பயிற்சியில் ஈடுபட்டிருந்ததை சுட்டிக்காட்டியுள்ளார். அப்போது தன்னை அணுகிய நபர், மலேசிய நிகழ்ச்சிக்குப் பிறகு பிரைவேட் பார்ட்டி ஒன்று இருப்பதாகவும், […]
தொழில் அதிபருடன் பிரைவேட் பார்ட்டிக்கு நடிகை அமலாபாலை அழைத்த விவகாரத்தில் மலேசியாவில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நிறுவனத்தின் சென்னை நிர்வாகிகளுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. மலேஷியாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அமலாபால், அதற்காக கடந்த மாதம் 31-ஆம் தேதி சென்னை தி.நகரில் உள்ள நடனப்பள்ளி ஒன்றில் ஒத்திகையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு வந்த அழகேசன் என்ற நபர் அமலா பாலை மலேசியால் தொழில் அதிபர் ஒருவருடன் பிரைவேட் பார்ட்டியில் கலந்து கொள்ளுமாறு கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் […]
நடிகர் ஷாருக்கான் தமது ரசிகர்கள் மற்றும் அபிமானிகளுக்கு நன்றி தெரிவிக்க நீச்சல் குளத்தின் நீரில் மூழ்கி எழுந்த வீடியோ காட்சியை அவர் வெளியிட்டுள்ளார். அண்மையில் டிவிட்டரில் ஷாருக்கானை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 30 லட்சம் பேரை கடந்தது. இதற்கு நன்றி தெரிவிக்க ஷாருக்கான் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ காட்சியில் தமது ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் ஷாருக்கான் நீச்சல் குளத்தில் முக்கி எழுந்தார். அப்போது பின்னணியில் அவர் படத்தின் புகழ் மிக்க வசனங்கள் […]
நடிகை அமலாபால் பாலியல் தொல்லைக்கு எதிராக புகார் அளித்ததால், தம்மை வாழ்த்திய நடிகர் விஷாலுக்கு, நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் நடனப்பள்ளி உரிமையாளர் தமக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை அமலாபால் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, நடனப்பள்ளி உரிமையாளர் அழகேசன் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், பாலியல் தொல்லை குறித்து புகாரளித்த நடிகை அமலா பாலுக்கு நடிகர் விஷால் பாராட்டு தெரிவித்திருந்தார். இதற்கு நன்றி கூறி தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ள நடிகை அமலா பால், இது ஒவ்வொரு பெண்ணின் […]
தயாரிப்பாளரும், நடிகருமான தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் காலா திரைப்படம் ஏப்ரல் 27ஆம் தேதி வெளியிடப்படுவதாக, தெரிவித்துள்ளார். ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 2.0 திரைப்படம் வரும் ஏப்ரலில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், கிராபிக்ஸ் பணிகள் முடிவடையாததால், வெளியீட்டு தேதி தள்ளிப்போவதாக கூறப்படுகிறது. இதனால், நடிகர் தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் தயாரிக்க, பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் காலா திரைப்படத்தை 2 பாய்ண்ட் ஓ படத்துக்கு முன்னதாக வெளியிட திட்டமிடப்பட்டது. […]
இளையராஜாவின் மகனும் இசையமைப்பாளருமான கார்த்திக் ராஜா புகழ்பெற்ற மனிதர்களாலேயே விருதுகளுக்கு பெருமை என்றும், தனது தந்தைக்கு பத்ம விபூஷண் விருது மகிழ்ச்சியளிப்பதாக கூறியுள்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காலம் தாழ்த்தி வழங்கப்பட்டாலும் தனது தந்தை இளையராஜாவுக்கு விருது வழங்கட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்க கூடியது என்றார். கடந்த மாதம் 25ஆம் தேதி இசைஞானி இளையராஜாவுக்கு பத்ம விபூஷன் விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சியான் விக்ரம் தமிழ் சினிமாவில் ஓர் அசைக்கமுடியாத நடிகர். படத்திற்கு எவ்வளவு வேண்டுமானாலும் ரிஸ்க் எடுத்து உடலை வருத்தி நடிக்க தயங்காத நடிகர் விக்ரம். அவர் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் ஸ்கெட்ச். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று நல்ல வசூலையும் பெற்றது. இப்படம் தெலுங்கில் டப் செய்து வெளியாக உள்ளது. இதன் பிரஸ் மீட்டில் கலந்து கொண்ட விக்ரமிடம், நீங்கள் நடித்ததில் உங்களுக்கு பிடிக்காத திரைப்படம் எது என்று கேட்டதற்கு சற்று யோசித்து ‘விண்ணுக்கும் மண்ணுக்கும்’ […]
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பேர் வாங்கிய பிரபலங்களை விட பேர் போன பிரபலங்கள் தான் மக்கள் மனதில் இன்னும் நிலைத்து நிற்கின்றனர். அப்படி பேர் போனவர்களில் முக்கியமானவர் ஜூலி. இவரை பிக் பாஸில் இவரை கலாய்க்க ஆரம்பித்தவர்கள் இவர் எது செய்தாலும் கலாய்க்க தொடங்கிவிட்டனர். இவர் அண்மையில் ஒரு அப்பள விளம்பரத்தில் நடித்தார். அதனையும் நெட்டிசன்கள் கலாய்த்தனர். தற்போது TTT எனும் ஆட்டோமொபைல் ஆயில் நிறுவனத்துக்கு ஆதரவாக தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு போட்டோ பதிவிட்டு […]