சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள ‘லப்பர் பந்து’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி பாசிடிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. கிரிக்கெட் மைதானத்தில் ஏற்பட்ட வாய்த்தகராறு காரணமாக ஹரீஷ் கல்யாணும், தினேஷும் மோதிக் கொள்கின்றனர். அவர்களின் ஈகோவால் காதல் உடைந்தநிலையில் என்ன நடக்கிறது என்பது படத்தின் கதை. கிராமத்தில் நடக்கும் ஒரு நகைச்சுவையான, உணர்வுபூர்வமான கிரிக்கெட் படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். இயக்குநர் தமிழரசன் […]
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய ஆதிக்கத்தை செலுத்தியதாக கூறி தனக்கு காசு பணத்தை விட சுயமரியாதை தான் முக்கியம் என கூறி நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். இந்த விவகாரம் மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. எழுந்த ஆதரவுகள் இந்த விவகாரத்தில் மணிமேகலை வெளியேறிய பிறகு பல பிரபலங்களும், ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் மணிமேகலைக்கு ஆதரவாக குரல் கொடுத்து பிரியங்காவை திட்டி தீர்த்து வந்தனர். […]
சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம். இந்த அளவுக்கு விமர்சனங்களைப் பிரியங்கா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது கூட எதிர்கொண்டு இருக்கமாட்டார் என்றே சொல்லலாம். அந்த அளவுக்குப் பலரும் அவரை திட்டி தீர்த்து வருகிறார்கள். இந்த பிரச்சினையில் பிரியங்கா வந்த பிறகு தான் பல தொகுப்பாளினிகளுக்கு வாய்ப்புகள் இல்லாமல் போனதாகவும், விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராகப் பிரியங்கா தான் ஆதிக்கம் செலுத்துகிறார் என்பது போலப் […]
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்.. ரோகிணியிடம் உண்மையை கூறும் சிட்டி ; சிட்டி ரோகினிகிட்ட உங்க மாமியார் நகை ஒரு டைம் திருட்டு போச்சு உங்களுக்கு ஞாபகம் இருக்கா.. ரோகிணி ஆமான்னு சொல்றாங்க ..அதை எடுத்தது மீனாவோட தம்பி சத்யா தான் .இது முத்துவுக்கும் தெரியும் அதனாலதான் முத்து சத்யாவோட கையை உடைச்சான் இந்த வீடியோ முத்து கிட்ட தான் இருக்கு […]
சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின் மூலம் இயக்குநராகவும், கவர்ந்தார். அந்த படத்தை தொடர்ந்து இரண்டாவதாக “கடைசி உலகப் போர்” படத்தினை இயக்கி, தயாரித்து இசையமைத்துள்ளார். படங்களில் நடித்தும், இசையமைத்து சேர்த்த பணத்தை வைத்து பிரமாண்ட பட்ஜெட்டில் இந்த படத்தின் தயாரிப்புக்கு செலவு செய்துள்ளார். பிரமாண்ட பட்ஜெட் படம் என்பதால் படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் படம் […]
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த லட்டு தயாரிப்பில் நெய்க்கு பதிலாக விலங்குகளின் கொழுப்பைப் பயன்படுத்துவதாக முன்னாள் முதலைவரான சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டி இருக்கிறார். திருப்பதியில் அமைந்துள்ள ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் உலகம் முழுவதும் உள்ள பகதர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் திருப்பதியில் வழங்கப்படும் பிரசாத லட்டில் மாட்டு […]
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த பிரச்சனை இன்னும் நின்றபாடு இல்லை. மணிமேகலைக்கு ஆதராகவும், பிரியங்காவுக்கு ஆதராகவும், இந்த விவகாரத்தில் சின்னத்திரை பிரபலங்கள் பலரும், குரல் கொடுத்து வருகிறார்கள். இந்த விவாகரத்துக்கு முற்றுபுள்ளி வைக்கவேண்டும், என்றால் கண்டிப்பாக பிரியங்கா பேசினால் மட்டும் தான் முடிவு கிடைக்கும். பிரியங்காவுக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்துகொண்டிருக்கும், சமயத்திலும் இன்னும் இது குறித்து எதுவும் பேசாமல் அவர் மௌனம் […]
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு இருக்க, பிரச்சனை முற்றுப்புள்ளி இல்லாமல் ரயில் போல பரபரப்பாக தொடர்ந்து கொண்டு இருக்கிறது. கடைசியாக,குரேஷி மற்றும் சுனிதா ஆகியோர் வீடியோ வெளியீட்டுப் பிரியங்கா மீது தவறு இல்லை என்பது போல அவருக்கு ஆதரவாகப் பேசி இருந்தார்கள். மற்றொரு, பக்கம் மணிமேகலைக்கு ஆதராகவும் ரசிகர்கள் சில பிரபலங்கள் பேசி வருகிறார்கள். இந்த சூழலில், குக் வித் கோமாளி […]
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது எந்த ஓடிடியில் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தார்கள். இந்த நிலையில், இந்த வாரம் செப்20-ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள படங்கள் குறித்த தகவலும் வெளியாகியுள்ளது. அதற்கான விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ் பேச்சி – ப்ரைம் சாலா – ஆஹா காபி – ஆஹா தங்கலான் – நெட்ப்ளிக்ஸ் தலைவெட்டியான்பாளையம் -ப்ரைம் சீரிஸ் […]
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு ‘இட்லி கடை’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை பகிர்ந்துள்ளார் தனுஷ். இப்படத்தை ‘Dawn Pictures’ சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கிறார். #D52 #DD4 Om Namashivaaya ????♥️ @RedGiantMovies_ @DawnPicturesOff @Aakashbaskarann @wunderbarfilms @theSreyas @gvprakash @editor_prasanna pic.twitter.com/o2QsS4FGOr — Dhanush (@dhanushkraja) September 19, 2024 பா.பாண்டி […]
சென்னை : வாரந்தோறும் வெள்ளிக்கிழமை புது திரைப்படங்கள் வெளியாவது வழக்கம். அந்த வகையில், நாளை (செப்டம்பர் 20 ஆம் தேதி) ஒரேநாளில் 6 தமிழ் திரைப்படங்கள் திரையரங்கில் வெளியாகவுள்ளன. அதன்படி, ஹரிஷ் கல்யாண் – அட்டகத்தி தினேஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘லப்பர் பந்து’, ஹிப் ஹாப் ஆதியின் ‘கடைசி உலகப் போர்’, சசிகுமாரின் ‘நந்தன்’, சத்யராஜின் ‘தோழர் சேகுவாரா’, சீனு ராமசாமியின் ‘கோழிப்பண்ணை செல்லத்துரை’, ‘ தோனிமா’ ஆகிய 6 தமிழ் படங்கள் வெளியாகிறது. லப்பர் பந்து […]
சென்னை : சசிகுமார் இயக்கத்தில் வெளிவந்த சுப்ரமணியபுரம் படத்தை நம்மளால் அவ்வளவு எளிதில் மறந்துவிடமுடியாது. காதல், துரோகம், காமெடி என அனைத்து விஷயங்கள் நிரம்பிய தரமான படத்தை சசிகுமார் கொடுத்திருந்தார். படம் வெளியாகி பல ஆண்டுகள் கடந்த நிலையிலும் கூட, இன்றுவரை பெரிய அளவில் பேசப்படக்கூடிய படமாக இருக்கிறது. இந்த படத்தினுடைய க்ளைமாக்ஸ் காட்சியை பார்க்கும்போது எந்த அளவுக்கு எமோஷனலாக இருக்கும் என்பதை பற்றி வார்த்தையால் சொல்லவே முடியாது என்றே கூறலாம். அந்த அளவுக்கு பெரிய தாக்கத்தை நம்மளுடைய […]
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து பிரியங்காவுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மணிமேகலை விலகியுள்ளது பேசுபொருளாகியுள்ள நிலையில், பிரபலங்கள் பலரும் தொடர்ச்சியாக தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருவதால் பிரச்சனை முடிந்தபாடு இல்லை. இந்த விவகாரத்தில் மணிமேகலை விலகியதை தொடர்ந்து நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்துகொண்டுள்ள குரேஷி மணிமேகலைக்கு வாழ்த்து தெரிவித்து செய்திருந்த கமெண்ட்டை டெலிட் செய்திருந்தார். அதனை பார்த்த, பலரும் குரேஷி பிரியங்கா ஆதரவாளர், அதனால் தான் டெலிட் செய்துவிட்டார் என விமரிசிக்க தொடங்கினார்கள். இந்த சூழலில், […]
சென்னை –சிறகடிக்க ஆசை தொடரில் [செப்டம்பர் 19] இன்றைக்கான எபிசோடில் சிட்டியை பகைத்துக்கொள்ளும் சத்யா..மீனா மீது விஜயா காட்டும் அக்கறை.. சிட்டியை எதிர்க்கும் சத்யா ; மீனாவோட அம்மா வீட்ல அழுதுட்டு இருக்காங்க.. இப்போ சத்யா வீட்டுக்குள்ள வந்ததும் ஏம்மா அழுகுறனு கேட்க எல்லாமே உன்னால தாண்டா.. அந்த சிட்டி கூட சேராதுன்னு சொன்னேனே நீ கேட்டியா இப்ப மீனாவ தள்ளிவிட்டு தலையில் அடிபட்டுருச்சு அப்படின்னு சொல்றாங்க. அக்கா ஏன் அங்க போனாங்க.. எல்லாம் உன் மேல […]
ஹைதராபாத் : தமிழ் தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல படங்களுக்கு நடனம் அமைத்திருப்பவர் ஜானி. இவரது குழுவில் உள்ள 21 வயது பெண் ஒருவர், ஜானி மாஸ்டர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்தார் என புகார் கூறினார். இந்த புகாரின் பேரில், ஜானி மாஸ்டர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதனையடுத்து, இவர் கைது செய்யப்படுவார் என செய்திகள் பரவியது. உடனே, ஜானி மாஸ்டர் தலைமறைவானார். பாலியல் பலாத்கார குற்றச்சாட்டை எதிர்கொண்ட நடன இயக்குனர் […]
சென்னை : சின்னத்திரையில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ள மணிமேகலை vs பிரியங்கா விவகாரம் இன்னும் முடிவுக்கு வந்தப்பாடு இல்லை. இந்த பிரச்சனை குறித்து பல பிரபலங்கள் பேசி வரும் நிலையில், பிரியங்கா இன்னும் இது பற்றி பேசாமல் மௌனம் காத்து வருகிறார். இதன் காரணமாக, இந்த பிரச்சனைக்கு இன்னும் முற்றுப்புள்ளி கிடைக்காமல் இருக்கிறது. இந்நிலையில், பிரபலங்கள் பலரும் இவர்களுடைய பிரச்சனை குறித்து தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், குக் வித் கோமாளி பிரபலம் புகழ் கோபத்துடன் […]
சென்னை : நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘கங்குவா’ திரைப்படம் நவ. 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் ‘கங்குவா’ திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படம் குறித்த முக்கிய அறிவிப்பு இன்று காலை 11 மணிக்கு வெளியாக உள்ளதாக படக்குழு நேற்று அறிவித்தது. அதன்படி, புதிய வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. முதலில் அக்.10 வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதே நாளில் ரஜினியின் வேட்டையன் வெளியாவதால் கங்குவா படத்தின் […]
சென்னை : ஒரு படத்தை எடுப்பது எவ்வளவு கடினமான வேலை என்பது படம் எடுக்கும் இயக்குநர்களுக்கும், படத்தைத் தயாரிக்கும் தயாரிப்பாளர்களுக்குத் தான் தெரியும். பல விஷயங்களை யோசித்து முழு படமாக எடுத்து மக்களுக்குக் கொடுக்க இயக்குநர்கள் அந்த அளவுக்கு மெனக்கெடுகிறார்கள். அதைப்போல, படம் வெளியாகும் போது தான் மக்கள் அனைத்தையும் சர்ப்ரைஸாக பார்க்கவேண்டும் என லீக் ஆகா விடாமல் படத்தின் தயாரிப்பு நிறுவனங்கள் கடுமையாகக் கண்காணித்து வேலை செய்து வருகிறது. அப்படி இருந்தும், ஒரு சிலர் செய்யும் […]
சென்னை : மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையே எழுந்துள்ள பிரச்சனை பெரிய சர்ச்சையாக வெடித்த நிலையில், இந்த பிரச்சனைக்கு முடிவு எப்போது கிடைக்கும் என்பது தெரியவில்லை. ஒரு பக்கம் பிரியங்காவுக்கு ஆதராகவும், மாற்றோரு பக்கம் மணிமேகலைக்கு ஆதரவாகவும் ரசிகர்கள் குரல் கொடுத்து வருகிறார்கள். சின்னத்திரை பிரபலங்கள் பலரும் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், குக் வித் கோமாளிகள் முக்கிய கோமாளியாக இருக்கும் குரேஷி , மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையேயான பிரச்சனை பற்றியும், […]
சென்னை :வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த செப்-5ம் தேதி மிகுந்த எதிர்பார்ப்புடன் திரையருங்குகளில் வெளியான GOAT திரைப்படம் உலகளவில் 413 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. படத்தின் முதல் போஸ்டர் வெளியானது முதல் பல எதிர்மறையான விமர்சனங்கள் தான் அதிகமாக வந்தது. அது அதனுடன் நிற்காமல் அப்படியே ஃபர்ஸ்ட் சிங்கிள், ட்ரெய்லர், டீஏஜிங் டெக்னாலஜி என அனைத்திற்கும் கலவையான விமர்சனத்தை பெற்று வந்தது. அதன் பிறகு படம் திரையருங்குகளில் வெளியானது […]