வசூல் வேட்டையில் 'GOAT' ! 13 நாட்களில் இத்தனை கோடியா?

கடந்த செப்-5 தேதி வெளியான GOAT திரைப்படம் குடும்பங்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.

GOAT Box Office

சென்னை :வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த செப்-5ம் தேதி மிகுந்த எதிர்பார்ப்புடன் திரையருங்குகளில் வெளியான GOAT திரைப்படம் உலகளவில் 413 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

படத்தின் முதல் போஸ்டர் வெளியானது முதல் பல எதிர்மறையான விமர்சனங்கள் தான் அதிகமாக வந்தது. அது அதனுடன் நிற்காமல் அப்படியே ஃபர்ஸ்ட் சிங்கிள், ட்ரெய்லர், டீஏஜிங் டெக்னாலஜி என அனைத்திற்கும் கலவையான விமர்சனத்தை பெற்று வந்தது. அதன் பிறகு படம் திரையருங்குகளில் வெளியானது பிறகு அந்த பேச்சுகள் எல்லாம் பாசிட்டிவ்வாக மாறியது.

குறிப்பாக யுவனின் இசையை சொல்லலாம். தற்போது மாபெரும் வெற்றி நடைப்போட்டு கொண்டிருக்கும் இந்த படத்தின் வெற்றிக்கு யுவன் இசையும் ஒரு பக்கபலமாக அமைந்துள்ளது என்றே கூறலாம்.

மேலும், இரண்டு வேடங்களில் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்திய விஜயின் நடிப்பு 6 முதல் 60 வரை உள்ள அவரது ரசிகர்களையும், குறிப்பாக குடும்பங்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தற்போது, திரையரங்குகளில் வெளியாகி 13 நாட்களில் உலகளவில் ரூ.413 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனைப் படைத்துள்ளது. இதனால், அடுத்ததாக 500 கோடியையும் கடந்து விடும் எனவும் சினிமா வட்டாரங்கள் மத்தியில் பேசப்படுகிறது.

unknown node

மேலும், விஜய்க்கு லியோ திரைப்படத்தை தொடர்ந்து 2- வது படமாக ‘கோட்’ படமும் 400 கோடி கிளப்பில் இணைந்துள்ளது. இதன் மூலம் மீண்டும் ஒரு முறை ‘Box office King’ என நிரூபித்து இருக்கிறார் விஜய்.