சென்னை :குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த பிரச்சனை இன்னும் நின்றபாடு இல்லை. மணிமேகலைக்கு ஆதராகவும், பிரியங்காவுக்கு ஆதராகவும், இந்த விவகாரத்தில் சின்னத்திரை பிரபலங்கள் பலரும், குரல் கொடுத்து வருகிறார்கள். இந்த விவாகரத்துக்கு முற்றுபுள்ளி வைக்கவேண்டும், என்றால் கண்டிப்பாக பிரியங்கா பேசினால் மட்டும் தான் முடிவு கிடைக்கும்.
பிரியங்காவுக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்துகொண்டிருக்கும், சமயத்திலும் இன்னும் இது குறித்து எதுவும் பேசாமல் அவர் மௌனம் காத்து வருகிறார். ஒரு புறம் அவர் மௌனம் காக்க மற்றொரு பக்கம் மணிமேகலை மிகவும் சந்தோசமாக கோவிலுக்கு சென்று, எதைப்பற்றியும் கவலைப்படாமல் தன்னுடைய வேலைகளை செய்துகொண்டு இருக்கிறார்.
குறிப்பாக இந்த பிரச்சனை பரபரப்பாக போய்க்கொண்டிருந்த சமயத்தில் கூலிங் க்ளாஸ் அணிந்துகொண்டு ஒரு கெத்தான புகைப்படம் ஒன்றை வெளியீட்டு இருந்தார். அதனை தொடர்ந்து தற்போது கோவிலிக்கு சென்ற மணிமேகலை “சுயமரியாதை முக்கியம்…கடவுளுக்கு மட்டும் தலைவணங்குங்கள்” என ரசிகர்களுக்கு அட்வைஸ் செய்திருப்பது போல பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
unknown nodemanimegalai insta story
ஏற்கனவே, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொள்வதால் பணம் கிடைக்கிறது. ஆனால், பணத்தை விட சுயமரியாதை தான் முக்கியம் என கூறி நிகழ்ச்சியை விட்டு வெளியேறி இருந்தார். அதனை தொடர்ந்து, சுயமரியாதை வார்த்தையை விடாமல் பிடித்துக்கொண்டிருக்கும் மணிமேகலை அந்த வார்த்தையை தொடர்ச்சியாக பயன்படுத்திக்கொண்டு இருக்கிறார்.
இதன் மூலம், அவர் மீது எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்தாலும் அவர் தன்னுடைய சுய மரியாதையில் எந்த அளவுக்கு உறுதியாக இருக்கிறார் என்பது தெரிகிறது எனவும் நெட்டிசன்கள் கூறிவருகிறார்கள்.
