Pandiya Naadu [file image]
விஷால் பல ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வருகிறார். பல ஆண்டுகளுக்கு பிறகு 100 கோடி வசூலை கொடுக்கும் வகையில் படங்களையும் தேர்வு செய்து நடிக்க ஆரம்பித்துவிட்டார் என்றும் கூட கூறலாம். அதற்கு உதாரணமாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அவருடைய நடிப்பில் வெளியான மார்க் ஆண்டனி படத்தை கூறலாம். இந்த படம் உலகம் முழுவதும் 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து விஷால் சினிமா கேரியரில் அதிகம் வசூல் கொடுத்த திரைப்படம் என்ற சாதனையை படைத்தது கொடுத்தது.
இந்த படத்திற்கு முன்பு விஷால் நடித்த படங்கள் எல்லாம் தொடர்ச்சியாக தோல்வியை தழுவி கொண்டு இருந்தது இந்த சூழலில் மார்க் ஆண்டனி படம் வெளியாகி அனைத்தையும் மாற்றியது. இதைப்போல தான் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பும் விஷால் நடித்த சமர், வெடி, பட்டது யானை ஆகிய படங்கள் எல்லாம் சரியாக போகவில்லை.
அனுஷ்காவை கல்யாணம் பண்ணிக்கோ! அந்த நடிகரை வற்புறுத்தும் குடும்பம்?
இதனால் அந்த சமயம் நடிகர் விஷால் மிகவும் அப்செட்டில் இருந்த நிலையில், அவருக்கு சுசீந்திரன் இயக்கத்தில் பாண்டிய நாடு திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த திரைப்படத்தில் நடிகர் விக்ராந்தும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக ஹிட் ஆனது என்றே கூறலாம்.
அந்த சமயம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் ஆனது என்றே சொல்லலாம். தோல்வியால் துவண்டு பொய் இருந்த விஷாலுக்கு இந்த படம் பெரிய வரவேற்பை பெற்று ஹிட் ஆனது. இந்த படம் வெளியாகி இன்றுடன் 10 ஆண்டுகள் ஆகிறது. எனவே, படம் பற்றிய தங்களுடைய விமர்சனங்கள் மற்றும் பதிவுகளை வெளியீட்டு படத்தை பற்றி ரசிகர்கள் நினைவு கூர்ந்து வருகிறார்கள்.
இந்த நிலையில், இந்த திரைப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பதனை பற்றி பார்க்கலாம். அதன்படி, பாண்டிய நாடு திரைப்படம் 50 நாட்களுக்கு மேலாக திரையரங்குகளில் ஓடி மொத்தமாக 52 கோடி வசூல் செய்து விஷாலுக்கு முதல் 50 கோடி வசூல் கொடுத்த திரைப்படமாக மாறியது. படம் வெளியாகி இத்தனை ஆண்டுகள் ஆகியும் இன்னும் பலருடைய பேவரைட் திரைப்படமாக இந்த படம் இருக்கிறது.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…