தடைகளை தாண்டி வெளியான “பிச்சைக்காரன் 2” திரைப்படம் எப்படி இருக்கு..? டிவிட்டர் விமர்சனம் இதோ..!!

Published by
பால முருகன்

இன்று வெளியான பிச்சைக்காரன் 2 திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. 

பிச்சைக்காரன் 2 

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான பிச்சைக்காரன் முதல் பாகம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும், trp ரீதியாகவும் பல சாதனைகளை படைத்தது. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இரண்டாவது பாகமும் வெளியாகியுள்ளது.

Pichaikkaran2FromToday [Image Source : Twitter/@v4cinema]

இந்த இரண்டாவது பாகத்தை இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி இயக்கி தானே ஹீரோவாக நடித்துள்ளார். அவருடன் காவ்யா தாபர், ரித்திகா சிங், மன்சூர் அலி கான், ராதா ரவி, ஜான் விஜய், தேவ் கில் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

Pichaikkaran2FromToday [Image Source : Twitter/@OnlyKollywood]

படம் பல தடைகளை தாண்டி ஒரு வெளியாக இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக விஜய் ஆண்டனிக்கு விபத்து ஏற்பட்டது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். அதனை தொடர்ந்து படத்தின் கதை திருட்டு கதை என கூறி சிலர் வழக்கு தொடர்ந்தனர். இந்நிலையில் ஒரு வழியாக இறுதியில் இன்று படம் திரையரங்குகளில் வெளியானது. படத்தை பார்த்துவிட்டு டிவிட்டரில் நெட்டிசன்கள் தெரிவித்துள்ள விமர்சனத்தை பற்றி பார்க்கலாம்.

டிவிட்டர் விமர்சனம் 

படத்தை பார்த்த நெட்டிசன் ஒருவர் ” பிச்சைக்காரன்2  முதல் பாகத்தின் தொடர்ச்சியில்லை. இரண்டும் தனித்தனி படம். இருந்தாலும் பொருத்தமான தலைப்பு. குழந்தைகள் காட்சிகள் அருமை . VFX மோசமாக இருக்கிறது.   திரைக்கதை சற்று மந்தமானது.பிகிலி எதிர்ப்பு யோசனை அருமை, முழுப் படத்திலும் 1/2 காட்சிகள் சுவாரசியமானதாக இருக்கிறது . விஜய் ஆண்டனி அறிமுக இயக்குனர். மொத்த ஏமாற்றம்” என பதிவிட்டுள்ளார்.

மற்றோருவர் ” பிச்சைக்காரன் 2 மிகவும் சிறப்பாக உள்ளது. குழந்தைகளை கடத்துவது, மூளை மாற்று அறுவை சிகிச்சை மற்றும் பேராசை கொண்டவர்கள் மக்களை ஏழைகளாக வைத்திருப்பது பற்றிய செய்தியை கூறுகிறது” என பதிவிட்டுள்ளார்.

மற்றோருவர் ” பிச்சைக்காரன் படம் பெரிய அளவிற்கு இல்லை. ‘பிளேயிங் டு தி கேலரி’ பகுதி அதிகமாகச் செய்யப்பட்டுள்ளது, ‘ஆன்ட்டி பிகிலி’ கான்செப்ட் மற்றும் எக்ஸிகியூஷன் சிரிக்க வைக்கிறது. சரியான கதை இல்லை, இயக்கம் சரியாக இல்லை” என பதிவிட்டுள்ளார்.

மற்றோருவர் ” விஜய்ஆண்டனி தெள்ளத்தெளிவாக இருக்கிறார். அவரது திறமைகள் குறைவாக இருந்தாலும், மீண்டும் தனக்கு ஏற்ற ஸ்கிரிப்டைத் தேர்ந்தெடுத்தார்.இது போன்ற ஒரு திரைப்படத்திற்கான தயாரிப்பு மதிப்புகள் மிக உயர்ந்ததாக இருக்கும்.ஸ்கிரீன் அவுட் ஆஃப் பார்க், இது முதல் பாதியை மிகவும் ஈர்க்கக்கூடியதாக ஆக்குகிறது.நிறைய VFX பயன்படுத்தப்பட்டுள்ளது மற்றும் இது பட்ஜெட்டுக்கு ஏற்றது.சுவாரஸ்யமான முதல் பாதிக்குப் பிறகு, கதை வழக்கமான  படங்களின் கதையில்  செல்கிறது.இரண்டாம் பாதியில் இழுத்தடிக்கும் காட்சிகள் அதிகம் இருக்கிறது. படம் சுமார்” என பதிவிட்டுள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

2 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

3 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

4 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

5 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

7 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

8 hours ago