பிரம்மாண்ட வசூல் செய்த ‘பொன்னியின் செல்வன் 2’…முதல் நாளிலே இத்தனை கோடிகளா.?

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி இருந்த பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் நேற்று தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம், ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் 3000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியானது.

படத்தை பார்த்த பலரும் படம் அருமையாக இருப்பதாகவும், பாகுபலியை மிஞ்சியதாகவும் கருத்துக்களை கூறி வருகிறார்கள். விமர்சன ரீதியாக பார்க்கையில் முதல் பாகத்திற்கு எந்த அளவிற்கு நல்ல விமர்சனங்கள் வந்ததோ அதைப்போல இரண்டாவது பாகத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்து வருகிறது.

சமூக வலைத்தளங்களில் படத்தை பார்த்த பலரும் 5க்கு 4-5 என ரேட்டிங் கொடுத்து வருகிறார்கள். இந்த நிலையில், தற்போது படம் வெளியான முதல் நாளில் மட்டும் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது.
#PonniyinSelvan2 New Zealand Day 1 Gross is NZ$ 43,869 ????
Excellent Opening ????????
— Box Office – South India (@BoxOfficeSouth2) April 29, 2023
அதன்படி, பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வெளியான முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் 26 கோடி வசூல் செய்துள்ளதாகவும், இந்தியா முழுவதும் படம் கிட்டத்தட்ட 35 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. படத்திற்கு நல்ல விமர்சனம் கிடைத்து வருவதால் படத்தின் வசூல் வரும் நாட்களில் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
#PonniyinSelvan2 mints ₹21.37 cr at the TN Box Office on the opening day.
With positive WoM, the film is expected to GROW over the weekend.#PS2
— Manobala Vijayabalan (@ManobalaV) April 29, 2023