குக் வித் கோமாளிக்கு குட்பை சொன்ன பூஜா! மொத்தமாக வாங்கிய சம்பளம் தெரியுமா?

Published by
பால முருகன்

சென்னை : குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் இருந்து பூஜா வெளியேற்றப்பட்டுள்ளார். 16 எபிசோடுகளில் பங்கேற்று விளையாடியதற்காக சுமார் 1.5 லட்சம் வரை அவர் சம்பளமாக பெற்றுள்ளார் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது. உப்பு, காரத்தோடு சேர்த்து கலகலப்பு, கொண்டாட்டம், காமெடி உள்ளிட்டவைகளை கலந்து பார்வையாளர்களை உற்சாகப்படுத்தி வரும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி.

ஏராளமான செலிபிரிட்டிகளின் விரும்பத்தக்க நிகழ்ச்சியாக உள்ள குக் வித் கோமாளியின் இந்த சீசனில், பலரின் இசை தேவதையாக இருந்த சூப்பர் சிங்கர் பூஜாவும் பங்கேற்று விளையாடி வந்தார். பாடலில் மட்டும் அல்ல சமையலிலும் நான் கில்லி என நிரூபிக்க வேண்டும் என நினைத்த பூஜா, கடந்த 16 எப்பிசோடுகளிலும் சிறப்பாக விளையாடினார். அவ்வப்போது, அந்த சமையலுக்கு நடுவே, பாடல்களை பாடி அசத்தி வந்த பூஜா, இந்த 17வது எபிசோடில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

பூஜாவின் பாடல்களுக்காகவே இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பார்த்து வந்த ரசிகர்களுக்கு இது பெரும் ஏமாற்றதை ஏற்படுத்தியுள்ளது. இது ஒருபக்கம் இருக்க மருபக்கம் இந்த குக் வித் கோமாளி சீசன் 5-ல் அவர் பங்கேற்றதற்காக ஒரு எப்பிசோடுக்கு ரூ.9 ஆயிரம் என்ற அடிப்படையில், இதுவரை சுமார் ரூ.1.5 லட்சம் வழங்கப்பட்டிருக்கலாம் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது.

இந்நிகழ்ச்சியில் காமெடிகள் ஒரு பக்கம் இருந்தாலும், மற்றோரு பக்கம் எமோஷனலை ஏற்படுத்தும் ‘எலிமினேஷன்’ சுற்றுகளும் அடிக்கடி நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இதுவரை நடைபெற்ற எலிமினேஷன் சுற்றில் குக் -ஆகக் கலந்து கொண்ட ஸ்ரீகாந்த் தேவா, முதல் ஆளாக எலிமினேட் செய்யப்பட்டார். அதற்கு அடுத்ததாக வசந்த் வாசி, ஷாலின் ஜோயா உள்ளிட்டவர்கள் எலிமினேட் ஆனார்கள். அவர்களைத் தொடர்ந்து இந்த வாரம் பூஜா வெங்கட் எலிமினேட் செய்யப்பட்டு நிகழ்ச்சியை விட்டு வெளியேறி இருக்கிறார்.

இவர் இந்த எபிசோடில் என்ன தவறு செய்தார்? எதற்காக வெளியேற்றப்பட்டார்? என்ற கேள்விகளுக்கான பதில் நிகழ்ச்சியின் ஒளிபரப்புக்கு பிறகே தெரிய வரும். பூஜா குக் வித் கோமாளி நிகழ்ச்சியை விட்டு போனால் என்ன? ரசிகர்களின் பாராட்டுகளை பெற்று வேறு ஏதேனும் நிகழ்ச்சியில் அவரை பார்த்துக்கொள்ளலாம் என்ற ஆறுதல் வார்த்தைகள் மட்டுமே மிச்சம்.

Published by
பால முருகன்

Recent Posts

சரசரவென சரிந்து தத்தளித்த ராஜஸ்தான்…! 100 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை வெற்றி!

ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில்…

4 hours ago

எத்தனை தொழில்நுட்பம் வந்தாலும் மொழி இருக்கும் – கமல்ஹாசன்!

நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், கிரேஸி மோகன் எழுதிய '25 புத்தகங்கள்' வெளியீட்டு விழாவில் இன்று…

5 hours ago

அதிரடியில் அலறவிட்ட மும்பை…திணறிய ராஜஸ்தான்! டார்கெட் இது தான்!

ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில்…

6 hours ago

தீவிரவாதிகள் வேட்டையாடப்படுவார்கள் – அமித்ஷா ஆதங்கம்!

டெல்லி : ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் புல்வெளியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்…

7 hours ago

கட்டிடம் கட்டியாச்சு..அடுத்து திருமணம் தான்..நடிகர் விஷால் மகிழ்ச்சி!

சென்னை : பல்வேறு சிக்கல்களைக் கடந்து, கடந்த 2019ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்க கட்டிட பணிகள் தொடங்கிய நிலையில்…

7 hours ago

“நீ சிங்கம் தான்” விராட் கோலிக்கு STR-ன் ‘அன்பு’ பதிவு!

சென்னை : இந்திய கிரிக்கெட் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளின் நட்சத்திர பேட்ஸ்மேனாக உள்ளார் விராட் கோலி.…

10 hours ago