முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் தரமாக இருக்கும்…பிரேமலு 2 அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!’

Premalu 2: மலையாள சூப்பர்ஹிட் படமான ‘பிரேமலு’ படத்தின் இரண்டாம் பாகம் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த ஆண்டு மலையாள சினிமாவில் பிரம்மயுகம், மஞ்சும்மல் பாய்ஸ் மற்றும் பிரேமலு திரைப்படமும் மலையாள திரையுலகை தான்யும் பேசப்பட்டது. அந்த, வகையில், மலையாள திரையுலகில் அதிக வசூல் செய்த படங்களில் ‘பிரேமலு’ படமும் ஒன்று.
நடிகர் நஸ்லெ ன் கே கஃபூர் மற்றும் நடிகை மமிதா பைஜு நடித்த ‘பிரேமலு’ படம் ஒரு காதல் கலந்த நகைச்சுவை திரைப்படமாகும். தற்பொழுது, மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்ற ‘பிரேமலு’ திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை படத்தின் தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
ஆம், பிரேமலு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ‘பிரேமலு 2’ உருவாகிறது எனவும், இந்த 2ம் பாகம் 2025ல் வெளியாகவிருக்கிறது மலையாள இயக்குனர் கிரிஷ் ஏடி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இப்படத்தில் நஸ்லன் கே கஃபூர் மற்றும் மமிதா பைஜா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, சங்கீத் பிரதாப், ஷியாம் மோகன், மீனாட்சி ரவீந்திரன், அகிலா பார்கவன் மற்றும் அல்தாஃப் சலீம் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர்.
படத்தின் வெற்றி விழாவில் இயக்குனர் கிரிஷ் ஏடி பேசுகையில், “பிரேமலு 2 பற்றி என்னால் அதிகம் சொல்ல முடியாது, ஆனால் முதல் பாகத்தை விட இது மிகவும் வேடிக்கையாக இருக்கும் என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியும்” என்றார்.
View this post on Instagram
லேட்டஸ்ட் செய்திகள்
“காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளன, உங்களுக்கு ஏன் அவசரம்?” – தவெகவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!
July 4, 2025
”நாய் கடித்து தாமதமாக சிகிச்சைக்கு வந்தால் உயிருக்கு ஆபத்து”- தமிழ்நாடு சுகாதாரத்துறை எச்சரிக்கை!
July 4, 2025