Categories: சினிமா

பிதாமகன், கஜேந்திரா திரைப்பட தயாரிப்பாளர் வி.ஏ.துரை காலமானார்..!

Published by
பால முருகன்

தமிழ் சினிமாவில் ‘என்னமா கண்ணு’ திரைப்படத்தை தயாரித்ததன் மூலம் அறிமுகமானவர் தயாரிப்பாளர் வி.ஏ.துரை . இவர் பிரபல முன்னணி தயாரிப்பாளராக இருந்த ஏ.எம். ரத்தினத்திடம் உதவியாளராக பணியாற்றிய பிறகு ‘எவர்கிரீன் மூவி இன்டர்நேஷனல்’ என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி அதன் மூலம் படங்களை தயாரித்து வந்தார்.

 ‘என்னமா கண்ணு’  படத்திற்கு பிறகு இவர் விவரமான ஆளு,பிதாமகன், கஜேந்திரா உள்ளிட்ட பல ஹிட் படங்களை தயாரித்து இருந்தார். இதில் அவர் தயாரித்த கஜேந்திரா திரைப்படம் சரியாக போகாத காரணத்தால் பண ரீதியாக தயாரிப்பாளர் வி.ஏ.துரைக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டது.  இதனால் தன்னுடைய சொத்துக்கள் அனைத்தையும் இழந்த வி.ஏ.துரை தங்குவதற்கு கூட வீடு இல்லாமல் இருந்துள்ளார்.

பிறகு, அவருடைய நண்பர் ஒருவர் சாலிகிராமத்தில் வீடு ஒன்றை எடுத்து வடைக்கு பிடித்து கொடுத்துள்ளார். அங்கு தான்  வி.ஏ.துரை  வசித்து வந்தார். பின் வி.ஏ.துரை நீரிழிவு நோயினால் மிகவும் பாதிக்கப்பட உடனடியாக அவருடைய நண்பர் இந்த தகவலை பிரபல இயக்குனரான எஸ்.பி.முத்துராமனுக்கு தெரியபடுத்தினார்.

இதனையடுத்து,  எஸ்.பி.முத்துராமனும் தன்னால் முடிந்த உதவியை செய்துவிட்டு மற்றவர்கள் உதவி செய்யவேண்டும் எனவும் கூறியிருந்தார். அதனை தொடர்ந்து வி.ஏ.துறை ” நான் நீரிழிவு நோயால் நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறேன். நான் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளேன். என்னுடைய மருத்துவ செலவுக்கு  எனக்கு பண உதவி செய்யுங்கள்” என பிரபலங்களிடம்  உதவியும் கேட்டிருந்தார். அந்த வீடியோவை அவருடைய நண்பர் வெளியீட்டு இருந்தார்.

அதன் பிறகு வீடியோவை பார்த்த ரஜினி, சூர்யா, விக்ரம், கருணாஸ்,  உள்ளிட்ட பல பிரபலங்களும் அவருக்கு உதவி செய்து இருந்தார்கள். உதவி கிடைத்தவுடன் நீரிழிவு நோயால் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வந்தார். பின்,  அவருடைய கால் அகற்றப்பட்டு சாலிகிராமத்தில் உள்ள அவருடைய வீட்டில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில், நேற்று இரவு 9 மணியளவில் எதிர்பாராதவிதமாக உடல்நலக்குறைவால் வி.ஏ.துறை காலமானார். இவருக்கு வயது 59. இவருடைய மறைவு திரைத்துறையில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மறைந்த தயாரிப்பாளர் வி.ஏ.துரைக்கு விஜயலட்சுமி, லட்சுமி என இரண்டு மனைவிகள் இருக்கிறார்கள். முதல் மனைவிக்கு 2 மகள்களும், 2-வது மனைவிக்கு 1 மகளும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

உலகக்கோப்பை 2027 : ரோஹித் – கோலி விளையாடுவது ரொம்ப சவால்…ஹர்பஜன் சிங் எச்சரிக்கை!

டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், 2025 ஜூலை 21 அன்று ஒரு…

9 hours ago

நாளை இந்த மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்…எச்சரிக்கை கொடுத்த வானிலை மையம்!

சென்னை : தெற்கு ஒரிசா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதைப்போல,…

9 hours ago

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பூரண குணமடையனும் …எடப்பாடி பழனிசாமி பிரார்த்தனை!

சென்னை : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கடந்த ஜூலை 21 அன்று, காலை நடைப்பயிற்சியின் போது லேசான தலைசுற்றல் ஏற்பட்டதை…

10 hours ago

ஆரம்பாக்கம் சிறுமி வன்கொடுமை வழக்கு : குற்றவாளி குறித்து தகவல் கொடுத்தால் வெகுமதி!

திருவள்ளூர் : மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தில் கடந்த ஜூலை 12-ஆம் தேதி அன்று 10 வயது சிறுமி ஒருவர்…

11 hours ago

உயிரிழந்த ஸ்டண்ட் கலைஞர் மோகன்ராஜ் குடும்பத்திற்கு பா.ரஞ்சித் ..சிம்பு செய்த உதவி!

சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடைபெற்று வந்த ‘வேட்டுவம்’ படப்பிடிப்பின்போது, (ஜூலை 13) கார் ஸ்டண்ட் காட்சி படமாக்கப்பட்டபோது…

11 hours ago

மருத்துவமனையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்… 2 நாள் அரசு நிகழ்ச்சிகள் ஒத்திவைப்பு!

சென்னை : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஜூலை 21 அன்று, காலை நடைப்பயிற்சியின் போது லேசான தலைசுற்றல் ஏற்பட்டதை அடுத்து,…

12 hours ago