sivaji movie [file image]
Rajinikanth : சிவாஜி படப்பிடிப்பின் போது நடிகர் ரஜினிகாந்த் மிகவும் டென்ஷன் ஆகியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் எப்போதுமே அதிகமாக கோபப்படமாட்டார் என்று தான் பலருக்கும் தெரியும். ஆனால், சிவாஜி படத்தின் சமயத்தில் ரஜினிகாந்த் ரொம்பவே டென்ஷனானாராம். அதுவும் காரணத்துடன் தான் கோபப்பட்டாராம். சிவாஜி திரைப்படத்தை ஷங்கர் இயக்க படத்தை AVM நிறுவனம் தான் தயாரித்து இருந்தது.
AVM நிறுவனம் சார்பில் நடிகர் ரஜினிகாந்த் ஆரம்ப காலத்தில் இருந்தே பல படங்களில் நடித்து இருக்கிறார். எனவே, அந்த நிறுவனத்திற்கும் ரஜினிகாந்திற்கு நல்ல பழக்கம் இருக்கிறது. எனவே, ஒரு முறை சிவாஜி படத்தின் ஷூட்டிங் சமயத்தில் கேரவன் வந்ததாம். அப்போது எதற்கு இந்த கேரவன் யாருக்கு? என செம டென்ஷனானாராம்.
உடனடியாக தயாரிப்பாளர் AVM சரவணன் உங்களுக்கு தான் இந்த கேரவன் ரஜினி என்று அவரிடம் கூறினாராம். இதனை கேட்டவுடன் கடுப்பான ரஜினிகாந்த் என்ன இது புது பழக்கம் 30 வருடங்களாக நான் AVM நிறுவனம் தயாரிப்பில் படம் நடித்து கொண்டு இருக்கிறேன். என்னைக்காவது கேரவன் வேண்டும் என்று கேட்டு இருக்கிறேனா? திடீரென எதற்கு எனக்கு கேரவன் என்று கோபப்பட்டாராம்.
பிறகு எனக்கு கேரவன் எல்லாம் வேண்டாம் எனக்கு AVM நிறுவனம் ஸ்டுடியோவில் ரூம் இருக்கிறது நான் அங்கே தங்கிவிடுகிறேன் என்று ரஜினிகாந்த் கூறினாராம். இந்த தகவலை தயாரிப்பாளர் AVM சரவணன் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் மாதிரி ஒரு எளிமையான மனிதரை யாருமே பார்க்க முடியாது என்றும் பாராட்டி பேசியுள்ளார்.
சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…
ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…
நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…
மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தில், பக்தர்கள் நீரை பீய்ச்சி…