வருத்தம் தெரிவிக்கிற சீனெல்லாம் இங்க செல்லாது!ஞானவேல் ராஜாவுக்கு பதிலடி கொடுத்த சமுத்திரக்கனி!

ameer gnanavel raja Samuthirakani

அமீர் பற்றி ஞானவேல் ராஜா கடுமையாக விமர்சித்து பேசி இருந்த விவகாரம் பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்த நிலையில், ஞானவேல் ராஜா பேசியது தவறு அவர் மன்னிப்பு கேட்கவேண்டும் என தெரிவித்தனர். குறிப்பாக சசிகுமார், சமுத்திரக்கனி, கரு.பழனியப்பன், பாரதி ராஜா, ஆகியோர் ஞானவேல் ராஜா  பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமீருக்கு ஆதரவாக அறிக்கை வெளியீட்டு இருந்தார்கள்.

இந்த விவகாரம் பெரிதாக வெடித்த நிலையில், ஞானவேல் ராஜா “பருத்திவீரன்’ பிரச்சனை கடந்த 17 ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது. நான் இது நாள் வரை அதை பற்றி பேசியது இல்லை. என்றைக்குமே “அமீர் அண்ணா” என்றுதான் நான் அவரை குறிப்பிடுவேன். ஆரம்பத்திலிருந்தே அவர் குடும்பத்தாருடன் நெருங்கிப்பழகியவன். அவரது சமீபத்திய பேட்டிகளில் என் மீது அவர் சுமத்திய பொய்யான குற்றச்சாட்டுகள் என்னை மிகவும் காயப்படுத்தியது.

பரபரப்பு செய்தியான பருத்திவீரன்.! முற்றுப்புள்ளி வைக்க சொன்ன சிவகுமார்.!

அதற்கு பதில் அளிக்கும் போது நான் பயன்படுத்திய சில வார்த்தைகள் அவர் மனதை புண்படுத்தி இருந்தால் அதற்கு நான் மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். என்னை வாழவைக்கும் சினிமா துறையையும் அதில் பணிபுரியும் அனைவரையும் மிகவும் மதிப்பவன் நான்” என அமீர் குறித்து பேசியதற்கு ஞானவேல் ராஜா வருத்தம் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், சமுத்திரக்கனி “வருத்தம் தெரிவிக்கிற சீனெல்லாம் இங்க செல்லாது ஒழுங்கா மன்னிப்பு கேட்கவேண்டும் என்று தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ” பிரதர் இந்த வருத்தம் தெரிவிக்கிற சீனெல்லாம் இங்க செல்லாது.நீங்க செய்ய வேண்டியது. எந்த பொதுவெளியில எகத்தாளமா உக்காந்து கிட்டு அருவருப்பான உடல் மொழியால சேற்ற வாரி இறைச்சீங்களோ. அதே பொது வெளியில பகிரங்கமா மன்னிப்பு கேக்கணும்.

நீங்க கொடுத்த அந்த கேவலமான, தரங்கெட்ட இன்டெர்வியூ-வை சமூக வலைதளங்களில் இருந்து துடைச்சு தூர எறியணும். அன்னைக்கு கொடுக்காம ஏமாத்திட்டுப் போன பணத்தை ஒத்த பைசா பாக்கி இல்லாம திருப்பிக் கொடுக்கணும். ஏன்னா… கடனா வாங்குன நிறைய பேருக்கு திருப்பிக் கொடுக்க வேண்டியது இருக்கு. அப்புறம் “பருத்திவீரன்” திரைப்படத்தில வேலை பார்த்த நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் பல பேருக்கு இன்னும் சம்பள பாக்கி இருக்கு. பாவம் அவங்கெல்லாம் எளிமையான குடும்பத்துல இருந்து வந்து வேல பாத்தவங்க… நீங்கதான், “அம்பானி பேமிலியாச்சே..!” காலம் கடந்த நீதி மறுக்கப்பட்ட நீதி” என கூறியள்ளார்.

இதைப்போல சசிகுமாரும்  “போலியான வருத்தத்திற்கு உண்மையைப் பலி கொடுக்க முடியாது. அமீர் அண்ணன் ஞானவேல் ராஜா மீது சுமத்திய பொய்யான குற்றச்சாட்டுகள் என்ன? ‘நான் பயன்படுத்திய சில வார்த்தைகள் புண்படுத்தி இருந்தால்…’ என்று குறிப்பிட்டுச் சொல்கிறார் ஞானவேல் ராஜா.அப்படியெனில் அந்த சில வார்த்தைகள்’ என்ன? திட்டமிட்டு ஒருவரை அவமானப்படுத்திவிட்டு அவருக்கு அவரே வருந்துவது என்ன மாதிரியான வருத்தம்? இதன்மூலம் அமீர் அண்ணனுக்கு ஞானவேல் ராஜா சொல்ல வருவது என்ன? பெயரிடப்படாத அந்தக் கடிதம் யாருக்கு?”  என்று கேள்வி எழுப்பி இருந்தார். ஞானவேல் ராஜா பேசிய விவகாரம் முறுபுள்ளிக்கு வந்துவிட்டதாக கூறப்பட்ட நிலையில், தற்போது மன்னிப்பு சரியாக கேட்கவேண்டும் என்று சசிக்குமார், சமுத்திரக்கனி இருவரும் அறிக்கை வெளியிட்டுள்ளது மீண்டும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்