Sanchita Shetty [file image]
சஞ்சிதா ஷெட்டி தற்போது இயக்குனர் ரமேஷ் பாலகிருஷ்ணன் என்பவருடைய இயக்கத்தில் உருவாகி வரும் ‘மாயவலை’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் இயக்குனர் அமீரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் ஒரே இரவில் நடக்கும் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக படத்தின் படப்பிடிப்பு இரவு நேரங்களில் தான் அதிகமாக எடுத்திருப்பார்கள். இந்நிலையில், இரவு நேரங்களில் பட பிடிப்பு நடைபெற்று வந்ததால் சற்று கஷ்டமாக இருந்ததாக நடிகை சஞ்சிதா ஷெட்டி சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் ” மாயவலை படத்தின் படப்பிடிப்பு விஜிபி கோல்டன் பீச் ரிசார்ட்டில் நடைபெற்றது.
அங்கு படப்பிடிப்பு நடைபெற்றபோது எனக்கு பழைய நினைவுகள் தான் நினைவுக்கு வந்தது. ஏனென்றால், அதே இடத்தில் தான் மோகன் ராஜா இயக்கிய ஜெயம் ரவிக்கு ஜோடியாக, என்னுடைய முதல் தமிழ்த் திரைப்படமான தில்லாலங்கடி படத்தில் நடித்தேன். எனவே அந்த நினைவுகள் தான் எனக்கு வந்தது. மாயவளையின் மற்றொரு பகுதி படப்பிடிப்பு நள்ளிரவு நேரத்தில் ECR பகுதியில் நடைபெற்றது.
ஹீரோயினா நடிச்சு போர் அடிச்சிட்டு! அதான் அப்படி இறங்க போறேன்- வசுந்தரா பேச்சு!
அக்கம்பக்கத்தில் உள்ள அனைவரும் தாமதமாக தூங்கியதால், நாங்கள் அனைவரும் சத்தம் போடுவதையும் அவர்களுக்கு இடையூறு செய்வதையும் தவிர்க்க வேண்டியிருந்தது.அந்த நேரத்தில் மட்டும் படம் எடுக்க ரொம்பவே கஷ்ட்டமாக இருந்தது. அந்த நேரத்தில் சத்தமாக பேசி கொள்ள முடியாது என்ற காரணத்தால் போன் மூலம் தான் அணைத்து விஷயங்களை தெரிந்துகொண்டோம்.
எப்படியோ ஒரு வழியாக படத்தை நல்லபடியாக எடுத்து முடித்துவிட்டோம். படமும் நன்றாக வந்திருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு எனக்கு ரொம்பவே கஷ்டமாக இருந்தது. ஏனென்றால், மாயவலை படக்குழுவுடன் இருக்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. திடீரென படப்பிடிப்பு எல்லாம் முடிந்து வீட்டிற்கு கிளம்புகிறோம் என்றவுடன் ஒரு கஷ்ட்டம் இருந்தது” எனவும் நடிகை சஞ்சிதா ஷெட்டி தெரிவித்துள்ளார்.
மேலும், நடிகை சஞ்சிதா ஷெட்டி அழுக்கன் அழகக்கிரன், தில்லாலங்கடி, கொல்லைக்காரன், சூது கவ்வும், என்னோடு விளையாடு, உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இதில் அவர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்த சூது கவ்வும் திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…