‘ஜெயிலர்’ படம் பார்க்க ரோகிணி திரையரங்கம் வந்த திரை பிரபலங்கள்!

JailerFDFS

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் இன்று  உலக முழுவதும் வெளியானதை ரஜினி ரசிகர்கள் பட்டாசு வெடித்து, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடி வருகின்றனர். ரசிகர்கள் முதல் திரை பிரபலங்கள் வரை FDFS காண ஆரவாரத்துடன் திரையரங்குகளில் குவிந்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில், இன்று காலை சென்னையில் உள்ள ரோகிணி திரையரங்கில் ரசிகர்கள் ஆட்டம் பாட்டத்துடன் அதிகாலை முதலே திரையரங்குகளில் குவிந்த வண்ணம் இருந்தனர். அந்த வகையில், ஜெயிலரை பார்க்க தனுஷ், ரம்யா கிருஷ்ணன், கவின், கார்த்திக் சுப்புராஜ், அனிருத் உள்ளிட்ட பலர் படம் பார்க்க திரையரங்கிற்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், ரஜினியின் குடும்பம் வருகை தந்தனர், ரஜினியின் மனைவி, மகள், பேரன் என மொத்த குடும்பமும் வருகை புரிந்தனர்.

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் ஜெயிலர். இந்த திரைப்படத்தில் சிவராஜ்குமார், தமன்னா, மிர்னா மேனன், மோகன்லால், வசந்த் ரவி, ரம்யா கிருஷ்ணன், ஜாக்கி ஷெராஃப், விநாயகன், யோகி பாபு, சுனில் உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்