selvaarkavan gv prakash [File Image]
G. V. Prakash: ஆயிரத்தில் ஒருவன் படத்துக்கு இசையமைக்கும் பொழுது, நான்கு நாட்களாக என்னை அடிமையா வச்சிருந்தாங்க என ஜிவி பிரகாஷ் கூறியுள்ளார்.
இயக்குனர் செல்வராகவன் இயக்கிய ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் கார்த்தி , பார்த்திபன் , ஆண்ட்ரியா ஜெர்மியா மற்றும் ரீமாசென் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் 2010-ல் வெளியானது.
இந்த படத்துக்கு ஜிவி பிரகாஷ் இசைமைத்திருந்தார். படத்தின் இசையே படத்திற்கு பிளஸ் பாய்ண்ட் என்றே சொல்லாம். சமீபத்தில், ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாகவும், இது பெரிய பட்ஜெட்டில் உருவாகும் என்றும் ஜிவி கூறியிருந்தார்.
மேலும், இந்த படத்திற்கான பணிகளைத் தொடங்க மிகவும் மகிழ்ச்சியாகவும் ஆர்வமாகவும் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இதே போல், இந்த படத்தில் தான் பணி புரிந்தது குறித்தும் பகிர்ந்து கொண்டார்.
இது தொடர்பாக ஜிவி பிரகாஷ் பேசுகையில், “ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இசையமைபின் போது, என்னை அடிமையா வச்சிருந்தாங்க…இயக்குனர் செல்வராகவன் பக்கத்திலையே உக்காந்து கொண்டு இருப்பார். முடிச்சு கொடுங்கனு சொல்லிகிட்டே உக்காந்து விடுவார் போகவே மாட்டார்.
அப்படி என்னை வைத்து செஞ்சாங்க நான்கு நாட்களாக ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்திற்கு இசையமைத்தேன். அதே போல் தான் ‘மயக்கம் என்ன’ திரைப்படமும், 4 நாட்களாக வீட்டுக்கே போகாம வேலை செய்தோம் அப்படி வந்தது தான் பாடல்கள் இசைகள். அப்போ போடுறது தான் இசை என்று தெரிவித்ததோடு, அதெல்லாம் ஒரு மறக்க முடியாத தருணம் என்று கூறிஉள்ளார்.
சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…
லார்ட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின்…
சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' பட ஷூட்டிங்கில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) மாரடைப்பால் உயிரிழந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த…
சென்னை : வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் வளிமண்டல…
உருளையன்பேட்டை : புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் (25) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
புக்கான் : ஈரானில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றிய அந்நாட்டு அரசு. இந்த வழக்கு…