விபத்தில் சிக்கிய அஜித்…வெளியான பரபரப்பு வீடியோ..!

Vidaamuyarchi filming

Vidaa Muyarchi: விடாமுயற்சி திரைப்படத்தில் நடிகர் அஜித் செய்த ஸ்டண்ட் காட்சியின் போது, பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான காட்சிகள் இணையத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

நடிகர் அஜித் குமார் தற்பொழுது இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். விறுவிறுப்பாக உருவாகி வரும் விடாமுயற்சி திரைப்படத்தில் நடிகர் அஜித் காரில் சாகசம் செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது.

கடந்த வருடம் விடாமுயற்சி ஷூட்டிங்கில் நடந்த ஸ்டண்ட் காட்சியின் போது, நிஜ விபத்தில் சிக்கிய அஜித், அதிர்ஷ்ட வசமாக தப்பிய காட்சி நெஞ்சை பதற வைக்கிறது. படத்தின் அப்டேட்காக காத்திருந்த ரசிகர்களுக்கு இது பேரதிர்ச்சியை தந்துள்ளது.

கடந்த ஆண்டு நவம்பரில் படத்தில் வில்லனாக நடிக்கும் பிக் பாஸ் ஆரவ் உடன் அஜித் அதிவேகமாக செல்லும் கார் கவிழும் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. படக்குழு வெளியிடுள்ள அந்த வீடியோவில் அஜித் அதிகமாக வேகமாக காரை ஓட்டுவதும், ஒரு கட்டத்தில் நிலை தடுமாறி கார் கவிழ்ந்ததை அடுத்து, படப்பிடிப்பு தளத்தில் இருந்தவர்கள் அனைவரும் காரை நோக்கி ஓடி வருவதையும் காட்டுகிறது.

காரில் அஜித்துடன் இருந்த ஆரவ்விடம் Are u ok? என பதற்றத்துடன் அஜித் கேட்கும் ஆடியோவும் வெளியாகியுள்ளதால் இது உண்மையாகவே விபத்து நடந்தது போல் தெரிகிறது. இந்த படப்பிடிப்பு கடந்த ஆண்டு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அந்த விபத்தில் சிக்கிய அஜித்துக்கும், சக நடிகர் ஆரவுக்கும் அதிர்ஷ்ட வசமாக எந்த வித காயமும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.

இந்த மாதிரியான காட்சிகளில் பெரும்பாலும் டூப் போட்டு நடிப்பதும் அல்லது AI மூலம் காட்சிகளை மெருகேற்றுவதும் உண்டு. ஆனால், முதல் முறையாக உண்மையாகவே பயங்கர ரிஸ்க் எடுத்து இந்த ஸ்டண்ட் காட்சியில் அஜித் நடித்திருக்கிறார் என தெரிகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் கண்ணீருடன் இவ்ளோ ரிஸ்க் வேண்டாம் என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 27032025
James Franklin srh 2025
CM MK Stalin
veera dheera sooran issue dhc
Edappadi K. Palaniswami o panneerselvam
shane watson
Vikram in Veera dheera sooran film posters