நாளை வெளியாகவிருந்த சண்முக பாண்டியனின் ‘படைத்தலைவன்’ திடீரென ஒத்திவைப்பு.! காரணம் என்ன.?
படை தலைவன் திரைப்படம் திரையரங்கு ஒதுக்கீட்டு சிக்கல் காரணமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக நடிகர் சண்முக பாண்டியன் அறிவித்துள்ளார்.

சென்னை : நடிகர் சண்முக பாண்டியன் வெளியிட்டுள்ள சமீபத்திய பதிவில் படை தலைவன் திரைப்படம் நாளை (மே 23ம் தேதி) வெளியாக இருந்த நிலையில், தியேட்டர் ஒதுக்கீட்டு சிக்கல்களின் காரணமாக, பட வெளியீடு தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
படத்தின் நாயகன் சண்முக பாண்டியன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், ”அனைவருக்கும் வணக்கம், படை தலைவன் திரைப்படம் மே 23 ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில், திரையரங்கு ஒதுக்கீட்டு சிக்கல்களின் காரணமாக, பட வெளியீடு தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
புதிய வெளியீட்டு தேதியை விரைவில் உறுதி செய்து, அறிவிக்க உள்ளோம். இந்த இடையூறுக்கு மன்னிக்கவும், உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மனமார்ந்த நன்றி” என குறிப்பிட்டுள்ளார். இந்த படத்தில் சண்முகபாண்டியனைத் தவிர, இயக்குநரும் நடிகருமான கஸ்தூரி ராஜா, மூத்த திரைப்படத் தயாரிப்பாளர் ஏ.சி.திருலோக்சந்தரின் பேத்தி யாமினி சந்தர், முனிஷ்காந்த் மற்றும் ரிஷி ரித்விக் ஆகியோர் நடித்துள்ளனர்.
இளையராஜா இசையமைக்கும் ‘ படை தலைவன்’ படத்திற்கு திரைக்கதை மற்றும் வசனங்களை இயக்குனர் பார்த்திபன் தேசிங்கு எழுதியுள்ளார். மறைந்த நடிகர்-அரசியல்வாதியும் சண்முக பாண்டியனின் தந்தையுமான விஜயகாந்தின் செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான தோற்றம் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளது.