தோல்வி அடைய வேண்டிய “சகோதிரி”! படத்தை காமெடி வைத்து காப்பாற்றிய சந்திரபாபு !
1960 காலகட்டத்தில் எல்லாம் பல படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து கலக்கி வந்தவர் நடிகர் சந்திரபாபு. அந்த சமயம் எல்லாம் இவருடைய மார்க்கெட் மிகவும் உச்சத்தில் இருந்தது என்றே சொல்லவேண்டும். அந்த அளவிற்கு தொடர்ச்சியாக இவர் பெரிய பெரிய நடிகர்களின் படங்களில் நடித்து வந்தார். சந்திரபாபு நடித்த காமெடி காட்சிகளை வைத்தும் பல படங்கள் ஓடி ஹிட் ஆகி இருக்கிறது.
அதில் முக்கியமான ஒரு திரைப்படம் என்றால் இயக்குனர் ஏ.பீம்சிங் இயக்கத்தில் பிரேம் நசீர் மற்றும் தேவிகா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 1959-ஆம் ஆண்டு வெளியான “சகோதிரி” திரைப்படம். இந்த திரைப்படத்தில் நடிகர் சந்திரபாபு ஆனந்தகோனார் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். படத்தில் சந்திரபாபு வரும் காட்சிகள் எல்லாம் வயிறு குலுங்க வைக்கும் வகையில் இருக்கும் என்றே சொல்லலாம்.
MGR Nagaril : வயிறு குலுங்க நகைச்சுவை இருந்தும் தோல்வியான ‘எம்ஜிஆர் நகரில்’! காரணம் என்ன தெரியுமா?
முதலில் இந்த திரைப்படத்தில் நடிகர் சந்திரபாபு நடிப்பதாகவே இல்லையாம். படத்தை எடுத்துமுடித்து பார்த்த பிறகு தான் அவரை படத்தில் நடிக்கவே வைத்தார்களாம். அந்த சமயமே பெரிய அளவில் செலவு செய்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது. ஆனால், படத்தை எடுத்துமுடித்த பிறகு படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஏவிஎம் படத்தை முழுவதுமாக போட்டு பார்த்ததாம் படத்தை பார்த்த பிறகு படத்தை ரிலீஸ் செய்தும் படம் தோல்வி தான் அடையும் என்பது போல ஏவிஎம் நிறுவனம் யோசித்துவிட்டதாம்.
ஏனென்றால், அந்த அளவிற்கு படம் மீது ஏவிஎம்நிறுவனத்திற்கு நம்பிக்கையே வரவில்லையாம். பிறகு சந்திரபாவை படத்தில் நடிக்க வைக்கலாம் என திட்டமிட்டு அவருக்கு ஒரு பால்காரர் கதாபாத்திரத்தை எழுதி படத்தில் வைத்தார்களாம். அந்த கதாபாத்திரம் கொடுக்கப்பட்ட பிறகு சந்திரபாபு அந்த கதாபாத்திரத்தில் அசத்தலான ஒரு நடிப்பை கொடுத்து அனைவரையும் மிரள வைத்துவிட்டாராம்.
பிறகு அவர் நடித்த காட்சிகள் அனைத்தையும் சேர்த்து படத்தை முழுவதுமாக பார்த்த பிறகு தான் ஏவிஎம் நிறுவனத்திற்கு படத்தின் மீது நம்பிக்கை வந்ததாம். இதெல்லாம் மிஞ்சும் அளவிற்கு நான் ஒரு முட்டாளுங்க பாடல் எல்லாம் பட்டிதொட்டி எங்கும் படத்தை கொண்டு சேர்த்தது. அந்த பாடலிலும் நடிகர் சந்திரபா தான் நடித்திருந்தார். படமும் வெளியாகி சந்திரபா கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது, படமும் ஹிட் ஆனது. கண்டிப்பாக படத்தில் சந்திரபாபு காமெடி காட்சிகள் இல்லாமல் படத்தை ரிலீஸ் செய்திருந்தால் படம் கண்டிப்பாக தோல்வி அடைந்திருக்கும் ஆனால் அவருடைய காமெடி காட்சிகள் இருந்த காரணத்தால் படம் பெரிய வெற்றியை பெற்றதாம். இந்த தகவலை சினிமா ஆர்வலர் கந்தராஜ் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.