பயப்படாமல் பாம்பை பிடித்த சோனு சூட்..குவிந்த பாராட்டுக்களும், எழுந்த விமர்சனங்களும்!

தனது வீட்டில் வெளியே வந்த சாரைப் பாம்பை அசால்ட்டாக பிடித்து சாக்கு பையில் போட்ட நடிகர் சோனு சூட் வீடியோ வைரலாகி வருகிறது.

sonu sood snake

மும்பை : பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட் வீட்டில் இன்று காலை பாம்பு ஒன்று புகுந்த நிலையில், அந்த பாம்பை சாகசமாக மீட்கும் வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கொஞ்சம் கூட பயம் இல்லாமல் அவர் வெறும் கைகளால் அந்த பாம்பைப் பிடித்து, பின்னர் அதை பாதுகாப்பாக காட்டில் விடுவிக்குமாறு தனது உதவியாளருக்கு உத்தரவிட்டார்.

சோனு சூட்டின் துணிச்சலை அனைவரும் பாராட்டினர். சமூக வலைதளங்களிலும், செய்தி ஊடகங்களிலும் அவரது தைரியமான செயல் பெரிதும் புகழப்பட்டது. “வீட்டுக்குள் புகுந்த பாம்பை தானே பிடித்த நடிகர் சோனு சூட்” என்று பல செய்திகள் அவரது துணிச்சலை பாராட்டினார்கள். ஆனால், அதே சமயம், இந்த சம்பவம் முழுக்க முழுக்க பாராட்டுக்களை மட்டுமே பெறவில்லை. பாம்புகளை கையாள்வதில் அனுபவம் இல்லாதவர்கள் இதுபோன்ற செயல்களை முயற்சிப்பது ஆபத்தானது என்பதால், சிலர் பாதுகாப்பு குறித்த கவலைகளை  எழுப்பினார்கள்.

சோனு சூட் தானே இதைச் செய்தாலும், அவர் தனது சமூக வலைதள பதிவில், “நச்சுத்தன்மையில்லாத சாரைப்பாம்பு அடிக்கடி குடியிருப்பு பகுதிகளுக்குள் வருவது இயல்பு என்றாலும், பாம்பு தென்பட்டால் உடனடியாக நிபுணர்களை அழைக்க வேண்டும்” என்று அறிவுறுத்தியுள்ளார். இது, அவரது செயல் பாராட்டத்தக்கதாக இருந்தாலும், பொதுமக்கள் இதை பின்பற்றுவது ஆபத்தை ஏற்படுத்தலாம் என்ற கருத்தை மறைமுகமாக சுட்டிக்காட்டுகிறது.

இந்த சம்பவம் சோனு சூட்டின் துணிச்சலை வெளிப்படுத்தியது மட்டுமல்லாமல், பாம்பு மீட்பு போன்ற சூழல்களில் பாதுகாப்பு மற்றும் நிபுணத்துவத்தின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தியது. பெரும்பாலானோர் அவரை பாராட்டினாலும், இதுபோன்ற செயல்களை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்பதே பலருடைய அறிவுரையாக உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்