மும்பை : பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட் வீட்டில் இன்று காலை பாம்பு ஒன்று புகுந்த நிலையில், அந்த பாம்பை சாகசமாக மீட்கும் வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கொஞ்சம் கூட பயம் இல்லாமல் அவர் வெறும் கைகளால் அந்த பாம்பைப் பிடித்து, பின்னர் அதை பாதுகாப்பாக காட்டில் விடுவிக்குமாறு தனது உதவியாளருக்கு உத்தரவிட்டார். சோனு சூட்டின் துணிச்சலை அனைவரும் பாராட்டினர். சமூக வலைதளங்களிலும், செய்தி ஊடகங்களிலும் அவரது தைரியமான செயல் பெரிதும் புகழப்பட்டது. “வீட்டுக்குள் […]