சூர்யா- பாலா திரைப்படம் நேரடியாக OTT-யில் வெளியீடு.?

நடிகர் சூர்யாவின் 41-வது படத்தை இயக்குனர் பாலா இயக்குகிறார். நந்தா, பிதாமகன், ஆகிய படங்களை தொடர்ந்து சுமார் 18 ஆண்டுகளுக்கு பிறகு இவர்கள் இருவரும் இணைந்துள்ளார்கள். இந்த படத்திற்கு தற்காலிகமாக “சூர்யா 41” என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தை 2D நிறுவனம் சார்பில் சூர்யாவும் & ஜோதிகாவும் இணைந்து தயாரிக்கிறார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். படத்தில் கீர்த்தி ஷெட்டி, மமிதா பைஜு ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
இந்த படத்திற்கான படப்பிடிப்பு இன்று பூஜையுடன் கன்னியாகுமரியில் தொடங்கியது. இந்த நிலையில், தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், இந்த படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியீட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த படம் ஜெய்பீம் படம் போன்று கருத்துக்கள் கூறும் வகையில், படமாக்கப்படவுள்ளதால், OTT-யில் வெளியீட அதிக வாய்ப்புகள் உள்ளதாம். மேலும் இதனால் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். பொறுத்திருந்து இந்த படம் திரையரங்குகளில் வெளியாகிறதா அல்லது OTT-யில் வெளியாகிறதா என்பதை பார்ப்போம்.
மேலும், நடிகர் சூர்யா இந்த படத்தை ஒரு மாதத்திற்குள் முடித்து விட்டு அடுத்ததாக இயக்குனர் வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025