Leo Poster Feast: துப்பாக்கி முனையில் தளபதி விஜய்! மிரட்டும் லியோ போஸ்டர்…

LeoPosterFeast

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் லியோ. இந்த திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் 19-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்தின் போஸ்ட் ப்ரொடக்சன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில். லியோ படத்தின் அப்டேட் எப்போது தான் வெளியாகும் என காத்திருந்த ரசிகர்களுக்கு நேற்று படக்குழு படத்தின் தெலுங்கு போஸ்டர் ஒன்றை வெளியீட்டு இருந்தது.

அந்த வகையில், தற்பொழுது லியோ திரைப்படத்தின் கன்னட போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. போஸ்டரில் துப்பாக்கியில் விஜய்யின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது, மேலும் `Keep Calm and Plot Your Escape’ என்று குறிப்பிடப்பட்டிருக்கும் இந்த புதிய போஸ்டர் இணையத்தை கலக்கி வருகிறது.

இனி படம் வெளியாகும் நாள் வரை தொடர்ந்து அப்டேட் வெளியாகும் என கூறப்படுகிறது.  படத்தை பார்க்க இந்திய சினிமாவை மிகவும் ஆர்வத்துடன் காத்திருக்கும் நிலையில், படத்துக்கான ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக தொடங்கியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்